Subject: FW: Kanini kavacham ( Only Tamil readers can enjoy)

 
Subject: Kanini kavacham ( Only Tamil readers can enjoy)





>துதிப்போர்க்கு தொங்குதல்போம் வைரஸ்போம்-நெஞ்சில்
>பதிப்போர்க்கு பிராட்பேண்ட் களிப்பேற்றும்
>கீபோர்டு விரைந்தோடும் அனுதினமும் கணினி சிஸ்ட கவசமதனை
>பின்னிப்பெடலெடுத்த பில்கேட்ஸ்தனை
>உன்னிப்புடன் நெஞ்சே குறி!
>
>காக்க காக்க கம்ப்யூட்டர் காக்க
>அடியேன் சிஸ்ட அழகுவேல் காக்க
>வின்டோசைக் காக்க வேலன் வருக
>கனெக்ஷன் கொடுத்து கனகவேல் காக்க
>இன்டெர்நெட் தன்னை இனியவேல் காக்க
>பன்னிருவிழியால் பாஸ்வேர்ட் காக்க
>செப்பிய வால்யூம் செவ்வேல் காக்க
>வீடியோ ஆடியோ வெற்றி வேல் காக்க
>முப்பத்திரு ஃபைல் முனைவேல் காக்க
>வைரஸ் வாராமல் வைரவேல் காக்க
>சேவிங் தன்னை செந்தில் வேல் காக்க
>எக்ஸ்டர்நல் மோடம் எதிர் வேல் காக்க
>பில்ட் இன்மோடம் பிரிய வேல் காக்க
>ஈமெயில் தன்னை இணையவேல் காக்க
>மவுசை மகேசன் மைந்தன் காக்க
>எர்ரர் வாராமல் எழில் வேல் காக்க
>அடியேன் ப்ரின்டர் அமுதவேல் காக்க
>எக்ஸ்ப்ளோரரை ஏரகத்தான் வேல் காக்க
>அடியேன் ப்ரௌஸ் செய்கையில் அயில் வேல் காக்க
>அல்லல் படுத்தும் அடங்கா எரர்கள்
>நில்லாதோட நீ எனக்கருள்வாய் 
>ஹாங் ப்ராப்ளமும்
>ஹார்ட் டிஸ்க் ப்ராபளமும்
>என் பெயர் சொல்லவும்
>இடி விழுந்தோடிட
>ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை
>அலறவே வைத்திடும்
>ஃப்ளக்சுவேஷன் பவர் சார்ஜுகளும்
>வாட்டம் விளைக்கும் வோல்ட்டேஜுகளும்
>அடியேனைக் கண்டால் அலறி கலங்கிட
>பிரிண்டர் சற்றும் பிழையாதிருக்க
>பேப்பர் ஃபீடிங் சூப்பராய்த் திகழ
>மை சப்ளை செய்யும் காட்ரிட்ஜ் தன்னை
>மைய நடனம் செய்யும் மயில் வாகனனார் காக்க
>மூவாகல் மூர்க்கம் செய்யும்
>மவுஸ் என்கை பட்டதும் ஸ்மூத்தாக
>நகர நீ எனக்கருள்வாய்
>கிர்ரு, கிர்ரு, கிரு, கிரு என
>டிஸ்கனெக்ட் ஆகும் டெலிபோன்களை
>போட்டதும் கனெக்ட் ஆக புனிதவேல் காக்க
>கன்னா பின்னாவென்று வரும்
>கமான்ட் இன்டட் ரெப்டுகளை
>கந்தன் கைவேல் காக்க
>அல்லல் படுத்தும் அடங்கா பசங்களும்
>பந்துகள் ஆடும்பாலர் பட்டாளமும்
>மானிட்டர் பக்கம் வந்து விடாமல்
>என் பெயர் சொல்லவும் எகிறியே ஓட
>ரேமும், ரோமும் மெமரியோடிருக்க
>அனைத்து ஃபோர்டர்ஸீம்
>ஆயுளோடு விளங்க
>டௌன்லோடு, அப்லோடு டக்கராய்
>விளங்கும் சிஸ்டம் பெற்று அடியேன்
>சிறப்புடன் வாழ்க.
>அலட்சியம் செய்யும் அலசியஸர்வீஸhர்
>அழைத்ததும் வந்திட அருள் நீ புரிவாய்
>ஷட்டௌன் தடங்கல்
>சட்டென்று நீங்க
>ஷண்முகன் நீயும் சடுதியில் வருக
>கணினி சிஸ்டம் கவசம் இதனை
>சிந்தை கலங்காது கேட்பவர்கள்,
>படிப்பவர்கள் எந்நாளும் பாடாய்
>படுத்தாத கணினியுடன் வேலை செய்வார்.
>வாழ்க கணினி. வளர்க மவுஸ்.
>
>சிரிக்க, சிரிக்க, கணினி சிஸ்டம் கேட்க.
>  


      The INTERNET now has a personality. YOURS! See your Yahoo! Homepage. 
http://in.yahoo.com/

Reply via email to