Thanks Vithur. And some fella said KM stood for Kosmic music ! :D 2008/3/25 Vithur <[EMAIL PROTECTED]>:
> ஏ.ஆர்.ரஹ்மான் இனி வாத்தியார்! சர்வதேச ஆசிரியர்களை வைத்து இந்தியாவில், > குறிப்பாக தமிழகத்தில் இசைக் கல்லூரி ஒன்று துவங்க வேண்டும் என்பது இசைப் > புயலின் நீண்ட காலக் கனவு! இப்போது அந்தக் கனவை நனவாக்கி இருக்கிறார் ரஹ்மான். > அவர் துவக்கும் இசைக் கல்லூரியின் பெயர் 'கே.எம். மியூஸிக் கன்சர்வேட்டரி'. > > A.R. Rahman would be a teacher from now on. With the help of teachers, it > has been the long cherished dream of Isaipuyal ( Music Storm ) to start a > music college in Tamil NAdu. That dream has become a reality for Rahman. The > name of the Music college is " K.M. Music Conservatory". > > > > > இதற்காக லேடி ஆண்டாள் பள்ளியில் நடந்த அறிவிப்பு விழாவில் கறுப்பு கோட், > சூட்டில் மலர்ச்சியாக வந்து அமர்ந்தார் ரஹ்மான். அவரின் ஹிந்துஸ்தானி இசைக் > குருவான குலாம் முஸ்தபா சாகிப்தான் சீஃப் கெஸ்ட்! அமெரிக்கா, லண்டன் என பல > நாடுகளைச் சேர்ந்த இசைப் பள்ளி ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். குரல், பியானோ, > கம்போஸிங் என மியூஸிக்கின் எக்ஸ்பர்ட்களான இவர்கள்தான் இந்த கல்லூரியின் > ஆசிரியர்கள். இவர்கள் தவிர குலாம் முஸ்தபா, எல்.சுப்பிரமணியம், ஸ்ரீனிவாஸ் > கிருஷ்ணா என இந்திய இசைக் கலைஞர்களும் இந்தக் கல்லூரியின் ஸ்பெஷல் லெக்சரர்கள். > > For this sake, Rahman wore a black coat and suit and came with full smiles > for a function at Lady Andal school. His Hindustani Guru Ghulam Mustapha > Saheb was the Chief Guest. There were a lot of Music School teachers from US > & UK. These scholars are experts in voice, Piano, composing, and they are > going to be the lecturers in this college. Apart from them, Ghulam Mustapha, > L. Subramaniam, srinivas krishna would be special lecturers in the college . > > > > இந்த இசைப் பள்ளியின் மேனேஜிங் டைரக்டரான செல்வகுமாரிடம் பேசினோம். > ''ரஹ்மானுக்கு இசைக் கருவிகள் மேல் அலாதியான ஈடுபாடு உண்டு. அவை எல்லாவற்றையும் > கற்று முடித்த பின்தான் கீபோர்டு கற்றுக்கொண்டார். இசைக் கருவிகள் பற்றிய அடிப் > படை தெரிந்ததால், அவரால் சுலபமாக கீபோர்டிலேயே வெவ்வேறு இசையைக் கொண்டு வர > முடிகிறது. ஆனால், இப்போது இசை படிக்கும் மாணவர்கள் கீபோர்டு மட்டும்தான் > கற்றுக்கொள் கிறார்கள். அதில், எந்த அடிப் படை இசையும் தெரியாமல் பிற இசைக் > கருவிகளின் இசையை உருவாக்குகிறார்கள். > > > The Managing Director of this Music school is selvakumar. He said ," > Rahman has lot of interest over musical instruments. After learning all > music instruments, he learnt the keyboard. As he knows the basic of all > instruments, he was able to easily get different tones in the keyboard. But > nowadays, music students are learning only the keyboard. They do not know > any basic forms of music, and are attempting to get some sounds in th > keyboard. > > > > இந்தப் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக இசைக் கருவிகளையும், அதன் நுணுக்கமான > இசையையும் காலி செய்வது மட்டுமின்றி, நமது பாரம்பரிய இசைக் கருவிகளைக்கூட > அழித்து விடும் என்ற கவலை ரஹ்மானுக்கு உண்டு. வெளிநாடுகளில் இந்த மாதிரி > பாரம்பரிய இசைக் கருவிகளைப் பாதுகாக்கவும், கற்றுக் கொடுக்கவும் இசைக் > காப்பகங்கள் உண்டு. அப்படி ஒரு காப்பகம் ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லிக் > கொண்டே இருப்பார். அதே போல வெஸ்டர்ன் கிளாஸிக்கல் இசையை முழுமையாகக் கற்றுக் > கொடுக்க ஆசிரியர்கள் இல்லை என்பதையும் சொல்லுவார். இந்த இரண்டையும் சேர்ந்து > ஒரு பள்ளி ஆரம்பிக்க வேண்டும் என்பது ரஹ்மானின் பத்து வருடக் கனவு. நான் > சவுண்ட் டிசைனிங் மற்றும் மியூஸிக் இன்ஸ்ட்ரூமென்ட் டெக்னாலஜி கற்றுக் > கொடுக்கும் கம்பெனியை நடத்திக்கொண்டு இருக்கிறேன். எனக்கும் ரஹ்மானுக்கும் 20 > வருட நட்பு உண்டு. ஆறு மாதத்துக்கு முன், 'நாம் இருவரும் இணைந்து இசைப் பள்ளி > ஆரம்பிப்போமா?' என்று கேட்டார். அப்படி ஆரம் பித்ததுதான் இந்த கே.எம். இசைக் > காப்பகம். > > This trend of knowing little about other musical instruments will spoil > the miniscule aspects of real music, and this is the main worry of Rahman. > In foreign countries, there are music schools, which safeguard the > traditional music instruments, and teach the nuances of these instruments. > He used to tell that such a school needs to be opened here in India. At the > same time, he used to tell that there are not many teachers to teach Western > Classical Music. It has been Rahman's dream to safeguard both of these > interests for the past 10 years. I have been running a Sound designing cum > Music Instrument Technology Company, and my friendship with Rahman has been > for the past 20 years. Six months back, he asked me if we could start a > music college together. In that way, started the K.M. Music Conservatory. > > > > > > > வருகிற ஜூன் மாதம் துவங்கும் இந்தக் காப்பகத்தில் மொத்தம் 150 மாணவர்களைச் > சேர்க்க இருக்கிறோம். இந்தக் கல்லூரியின் பிரின்ஸிபால் ரஹ்மான்தான். வசதிக் > குறை வான, திறமையான 50 மாணவர்களுக்கு ரஹ்மான் தன் ஃபவுண்டேஷன் மூலம் கட்டணம் > கட்ட முடிவு செய் திருக்கிறார். இதற்காக அவர் இந்த ஆண்டிலிருந்து வெளிநாடு > களில் கூடுதல் இசை நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிட்டு இருக்கிறார்'' என்றார் > செல்வகுமார். > > > Coming June, we are planning to recruit 150 students. The Principal of the > college is Rahman. Among the 150 students, 50 students who are very well > talented, and who are not that well off will be provided with scholarships > from Rahman Foundation, and this has been decided by Rahman . For this > purpose, he has decided to do a lot of concerts outside India. > > > > கல்லூரியின் பெயரில் இருக்கும் கே.எம். என்கிற இரண்டு எழுத்துக்களும் யாரை > அல்லது எதைக் குறிக்கின்றன என்பதுதான் விழாவில் பலரின் கேள்வியாக இருந்தது. > > ''கே.எம். என்பது எதைக் குறிக்கிறது?'' என்று ரஹ்மானையே கேட்டார் ஒரு > நிருபர். ''அவை புனிதம் சார்ந்த எழுத்துக்கள்'' என்று மட்டும் ஒரு புன்னகையோடு > சொல்லிவிட்டு, அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டார் ரஹ்மான். > > > The doubt about what stood for K.M was lingering on the minds of the crowd > who had come over there. One person asked Rahman as to what K.M stood for > ?. Rahman smilingly replied that it was something sacred, and jumped to the > next question. > > ரஹ்மான் என்றாலே ரகசியம்தான் போல! > Rahman means secrecy always ! > > > regards, > Vithur > > Whatever God wants to give, no one can deny; Whatever God wants to deny, > no one can give. Be happy always > >

