கவுதம்-ரஹ்மான் புதிய கூட்டணி
ஹாரிஸ் ஜெயராஜ் சம்மதம்

வாரணம் ஆயிரம் படத்தை ஆகஸ்ட்டுக்கு தள்ளி போட்டுவிட்டார் டைரக்டர் கவுதம் [image:
Gowntham Menon]மேனன். அயன் படத்தில் பிசியாக இருக்கிறார் சூர்யா. இந்த படத்தை
முடித்துவிட்டு அவர் வந்ததும் ஆப்கானிஸ்தானில் படப்பிடிப்பு துவங்குகிறது.
இதற்கிடையில் சென்னையில் ஒரு மழைக்காலம் படப்பிடிப்பை நடத்திக்
கொண்டிருக்கிறார் கவுதம். நாலு பெண்கள், நாலு பையன்கள் கதையில் த்ரிஷாதான்
நாயகி. முதல் காதல், முதல் முத்தம், முதல் வேகம்னு பசங்களோட மனசை அப்படியே
ஸ்கிரீனில் தெளிக்கிற முயற்சிதானாம் இந்த படம். அடுத்ததாக சிவாஜி பிலிம்சில்
அஜீத் நடிக்கும் படத்திற்கும் கவுதம்தான் இயக்குனர்.

இதற்காக ஏ.ஆர்.ரஹ்மானிடம் இசையமைக்க கேட்டுப் போனாராம். உங்களுக்கும்
ஹாரிசுக்கும் நல்ல நட்பு இருக்கு. உங்க டீமை பிரிச்சா அது தப்பாயிடும்
என்றாராம் ரஹ்மான். இல்லையில்லை... ஹாரிசும் பிசியா இருக்கார். இதனால் என்னை
அவர் தவறா நினைச்சுக்க மாட்டார் என்று ரஹ்மானை சம்மதிக்க வைத்திருக்கிறார்
கவுதம்.

இதுவரை ரசிகர்கள் பார்த்த அஜீத்தை அப்படியே வேறு மாதிரி காட்டப் போகிறேன்
என்கிறார் கவுதம். செய்யுங்க.... அஜீத்தை காதலோடு பார்த்து எவ்வளவு நாளாச்சு?


The crux of the matter says that ARR is likely to compose for Gowtham's next
venture even after Chennayil oru mazhai Kaalam., featuring Ajith for Sivaji
Productions...


Is this true ??.
http://www.tamilcinema.com/CINENEWS/Hotnews/2008/may/300508a.asp
-- 
regards,
Vithur

HELP EVER; HURT NEVER;
LOVE ALL; SERVE ALL

Reply via email to