Saroja music director Yuvan says that he wanted ARR to sing song in this
movie but ARR's contract with Sony prevented that. He also says that he
shares a very good relationship with ARR unlike wrongly reported by media.

Director mentions that bringing ARR to that function was tougher than doing
that whole project. "We kept contacting him thru' email, SMS, Phone.... We
heard that he was much impressed with what we had mentioned about Yuvan in
Saroja invitation.... He also sent a message - 'You people are rocking' -
after listening to Saroja Songs.."

--------------------------------------------

Does anyone know what was mentioned in 'Saroja' invitation about Yuvan?.

**
*'ச*ரோஜா' திரைப்பட ஒலி வெளியீட்டு விழாவில், ரஹ்மான் யுவன் சர்ப்ரைஸ்
சந்திப்பு!

''20 வருஷத்துக்கு முன்னாடி இளையராஜா சார்கிட்ட நான் கீபோர்டு வாசிச்சுட்டு
இருந்த நேரம், 'அங்கிள்'னு என் பின்னால் ஒரு குரல் கேட்கும். திரும்பிப்
பார்த்தா, குட்டிப் பையனா யுவன் நிப்பார். குறும்புக்காரப் பையன். அதனால்,
யுவன்னு நினைச்சாலே, எனக்குச் சிரிப்பு வந்துடும். இப்போ, யுவன் பெரிய மியூஸிக்
கம்போஸரா வளர்ந்து நிற்கிறார். இப்பவும் எப்பவும், ஆல் தி பெஸ்ட் யுவன்!''
என்று ரஹ்மான் வாழ்த்த, யுவன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்!

யுவனிடம் ரஹ்மான் பற்றி கேட்டால், ''எங்க சந்திப்பு உங்களுக்குத்தான்
சர்ப்ரைஸ். எங்களுக்குள் ஈகோ இருக்கும்னு நிறைய பேர் நினைச்சுட்டு இருக்காங்க.
ஆனா, எங்களுக்குள்ள நிறைய ஃப்ரெண்ட்ஷிப்தான் இருக்கு. ரஹ்மான் சார் ரொம்ப கூல்.
அவரோட மியூஸிக், பேச்சு, சிரிப்பு, ஸ்டைல் எல்லாமே தனி. எங்களுக்குள் எப்பவுமே
ஒரு நல்ல வேவ்லெங்த் இருக்கும். 'சென்னை 28', 'சரோஜா'னு என் மியூஸிக்கில்
அவரைப் பாடவைக்க முயற்சி பண்ணினேன். ஆனா, 'சோனி கான்ட்ராக்ட்'டில் இருந்ததால்
அவரால் பாட முடியலை. நிச்சயம் எதிர்காலத்தில் என் இசையில் அவர் பாடுவார்!''

எளிதில் சிக்காத ரஹ்மானை எப்படி இழுத்துக்கொண்டு வந்தீர்கள் என்று 'சரோஜா'
இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் கேட்டால், ''படத்தைவிட அது பெரிய புராஜெக்ட்
தலைவா! லேண்ட்லைன், செல்போன், எஸ்.எம்.எஸ், இமெயில்னு பலமுறை படையெடுத்துப்
பிடிச்சோம். இன்விடேஷனில் யுவன் பத்தி நாங்க எழுதியிருந்த விஷயங்களைப்
படிச்சுட்டு ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிட்டாராம். சரோஜா பாட்டுக்கள் கேட்டுட்டு 'யூ
பீபிள் ஆர் ராக்கிங்!'னு மெசேஜ் அனுப்பினார். எங்களுக்கு பயங்கர ஹாப்பி.
அதுக்குன்னே ஒரு ட்ரீட் வெச்சேன்!'' என்கிறார் அசத்திய மகிழ்ச்சியோடு!
        -அ.கணேஷ்ராஜ்
படம்: உசேன்

-- 
Sent from my very old 386 machine.

Reply via email to