'குளோபல் இந்தியன்' ஏ.ஆர்.ரஹ்மான்! 
 
 
 



Tuesday, 03 February 2009 00:24 


இந்தியாவின் புகழை உலகுத்துக்கு எடுத்துச் சென்றமைக்காக வழங்கப்படும் சி.என்.என். 
ஐ.எபி.என். 'குளோபல் இந்தியன்' விருது, தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் 
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டுள்ளது. 
ஆங்கிலத் தொலைக்காட்சி செய்தி சேனலான 'சி.என்.என். ஐ.பி.என்.', 2008-க்கான 
இந்தியன் ஆஃப் தி விருதுகளை வழங்கியுள்ளது. 
இதில், உலக அளவில் இந்தியாவுக்கு புகழ் சேர்த்தமைக்கு வழங்கப்படும் குளோபல் 
இந்தியன் விருது, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. 
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்து, ஆஸ்கருக்கு இணையாகக் கருதப்படும் 
கோல்டன் குளோப் விருதைப் பெற்றுள்ளதோடு, ஆஸ்கருக்கும் 3 பரிந்துரைகளைப் பெற்று, 
இந்தியாவுக்கு பெருமை சேர்த்ததற்காகவே அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. 
இந்தப் பிரிவு விருதுக்கான தெரிவுப் பட்டியலில், புக்கர் பரிசு பெற்ற இந்திய 
எழுத்தாளர் அரவிந்த் அதிகா, ஸ்ல்டம்டாக் மில்லியனர் நாயகன் தேவ் படேல், பிரபல 
நாவலாசிரியர் சல்மான் ருஷ்டி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
ரஹ்மான் வர இயலாத காரணத்தால், அவருடைய தாயாரும், சகோதரியும் விருதைப் பெற்றுக் 
கொண்டனர். 
அப்போது, ரஹ்மான் பேசிய வீடியோ காட்சி ஒளிபரப்பப்பட்டது. அதில், "எனது வெற்றிக்காக 
எப்போதும் பிரார்த்தனை செய்கின்ற எனது குடும்பம், எனது நண்பர்கள் மற்றும் எனது 
ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்," என்றார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரபல இசைக் கலைஞர் பண்டிட் ரவிஷங்கர், "ரஹ்மான் ஆஸ்கருடன் 
திரும்பும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறோம்," என்றார். 
* சின்.என்.என். ஐ.பி.என். இந்தியன் ஆஃப் தி இயர் - வாழ்நாள் சாதனையாளர் விருது, 
நடிகர் திலீப் குமாருக்கு வழங்கப்பட்டது. 
* பொதுச் சேவைக்கான இந்தியன் ஆஃப் தி இயர் :ஜி.மாதவன் நாயர் மற்றும்  நிலவில் 
மூவண்ணக் கொடியை நாட்டிய சந்திராயன் குழு. 
* அரசியல் : நிதிஷ்குமார்
* விளையாட்டு : அபினவ் பிந்த்ரா
* தொழில் : ஆதித்யா பூரி
* பொழுதுபோக்குக் கலைஞர் : நடிகர் அமீர்கான்



      Add more friends to your messenger and enjoy! Go to 
http://messenger.yahoo.com/invite/

Reply via email to