விழாவின் ஹைலைட் இளையராஜாவின் நெகிழ்ச்சி உரை. தம்பி என்று ரஹ்மானை அன்பொழுக
அழைத்தவர், உலகின் மிகச் சிறந்த இசைக் கலைஞர்களில் ரஹ்மானும் ஒருவர் என்றார்.
“அண்ணன் எம்.எஸ்.வி. இசைத் துறையின் ஆதார ஸ்ருதி என்றால் நானும், தம்பி ரஹ்மானும்
பஞ்சமங்கள்.”
ரஹ்மானை மனம் திறந்து பாராட்டியதோடு, அவருக்கு தனது கையால் தங்க சங்கிலி
அணிவித்தார் இளையராஜா.
இதற்கு பதில் மரியாதை செலுத்துவதாக இருந்தது ரஹ்மானின் பேச்சு. எனக்கு ஆஸ்கர்
விருது கிடைத்ததாக கருதவில்லை. இங்குள்ள எம்.எஸ்.வி., இளையராஜா போன்ற மேதைகளுக்கு
கிடைத்ததாகவே நினைக்கிறேன் என்றார்.
இணையதளத்தில் ரஹ்மானா? இளையராஜாவா? என்று அவர்களின் ரசிகர்கள் நடத்தும்
பட்டிமன்றங்களை கண்டித்த ரஹ்மான், என்னை பாராட்டுவதாக நினைத்து மற்றவர்களை
கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, தேவா, பரத்வாஜ், தேவி
ஸ்ரீபிரசாத், பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வெள்ளியாலான உலக உருண்டை ரஹ்மானுக்கு நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.
என்றும் அன்புடன்
'தமிழ்கவி'௧விசதீஷ்
Add more friends to your messenger and enjoy! Go to
http://messenger.yahoo.com/invite/