ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லண்டன்
பல்கலை., டாக்டர் பட்டம்
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லண்டன் பல்கலைக்கழகம் சார்பில்
கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. ஸ்லம்டாக் மில்லினர் என்ற படத்திற்கு
இசையமைத்ததற்காக
ரஹ்மானுக்கு 2 ஆஸ்கார் விருதுகள் கிடைத்துள்ளன. இதுதவிர கோல்டன் குளோப் விருது
உள்ளிட்ட
பல்வேறு விருதுகள் மற்றும் பட்டங்கள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்து வருகின்றன.
இந்நிலையில்
லண்டனை சேர்ந்த மிடில் செக்ஸ் பல்கலைக்கழகம் ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்
வழங்கி
கவுரவிக்க இருக்கிறது. பல்கலைக்கழகத்தின் மண்டல இயக்குனர் ஜோ விக்டர், ரஹ்மானை
நேரில்
சந்தித்து பட்டம் வழங்கும் தகவலை தெரிவித்து விட்டு, அழைப்பு விடுத்துள்ளார்.
வருகிற
ஜூலை மாதம் நடைபெறும் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர்
பட்டம் வழங்கப்பட உள்ளது.
source: nandri dinamalar
என்றும் அன்புடன் 'தமிழ்கவி'௧விசதீஷ்
Add more friends to your messenger and enjoy! Go to
http://messenger.yahoo.com/invite/