சினிமாவில் நடிக்க தெரியாது -ஏ.ஆர்.ரகுமான்
பிரபல இசைஅமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஐதராபாத்
சென்றிருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டேன். அப்பா திடீரென இறந்து போனதால்
குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எனக்கு ஏற்பட்டது. இதனால் நான் இரவுகலாக
உழைத்தேன். என்னோடு சேர்ந்து அம்மாவும் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தார். இதனால்
தான் என்னால் எப்போதும் இன்ப-துன்பங்களை சமமாக பார்க்க முடிகிறது.
எங்கள் வீட்டில் வறுமை தாண்டவமாடிய சமயத்தில் என் அப்பா பயன்படுத்திய இசை கருவிகளை
விற்று விடும்படி சிலர் கூறினார்கள். ஆனால் என் அம்மா, இந்த கருவிகள் என் மகனுக்கு
பயன்படும் என்று கூறி விற்க மறுத்து விட்டார். என் அம்மாவின் விருப்பப்படி நான்
இசை அமைப்பாளராக மாறினேன். ரசிகர்களுக்கு புதுமையான பாடல்களை வழங்க வேண்டும்
என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.
இடையில் எனக்கு ஆஸ்கார் விருதுகள் கிடைத்த பிறகு பாராட்டு விழாக்கள் அதிக அளவில்
நடத்தப்படுகின்றன. இதனால் எனது இசை அமைக்கும் நேரமும் வீணாகி வருகிறது. இதுதான்
எனக்கு மிகவும் கவலையாக உள்ளது.
இதனால்தான் தற்போது நான் பாராட்டு விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகிறேன்.
எனக்கு சமீபகாலமாக இந்தி-தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறது. சில
டைரக்டர்கள் சிம்பிளான கேரக்டர்தான். சும்மா முகத்தை காட்டிவிட்டு சென்றால் போதும்
என்று கேட்கிறார்கள். அவர்களிடம் எனக்கு சினிமாவில் நடிக்க தெரியாது. தயவு செய்து
ஆளை விடுங்கள் என்று கூறி மறுத்து விட்டேன்.
எனக்கு சுத்தமாக நடிக்கத் தெரியாது என்று சொல்லிவிட முடியாது. மியூசிக்
ரிக்கார்டிங் தியேட்டரில் ஓரளவு நடிப்பேன். அதாவது ஊழியர்களிடம் கோபப்படுவது போல்
நடிப்பேன். அப்போதுதான் அவர்கள் வேலையை சீக்கிரம் முடிப்பார்கள். உண்மையில் எனக்கு
கோபமே வராது. அந்த அளவுக்கு மனம் பக்குவப்பட்டிருக்கிறது. இந்த பக்குவத்தை வரமாக
அளித்ததும் இசைதான் என்கிறார் ஏ.ஆர். ரகுமான்.
--
என்றும் அன்புடன்
'தமிழ்கவி' கவிசதிஷ்
என்றும் அன்புடன்
'தமிழ்கவி'௧விசதீஷ்
Yahoo! recommends that you upgrade to the new and safer Internet Explorer
8. http://downloads.yahoo.com/in/internetexplorer/