ஜூனில் வெளியாகும் ராவணன்! 


மணிரத்னம் இயக்கும் ராவணன் படம் குறித்து இதுவரை வதந்திகள் மற்றும் புகார் 
களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஆனால் முதல்முறையாக ஒரு 
அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிட்டுள்ளார் மணிரத்னத்தின் மீடியா மேனேஜர் 
நிகில். 



படம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும் வருகிறத ஏப்ரல் மாதம் படத்தின் 
ஆடியோ வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார். 



ரஹ்மான் இசையில் அனைத்துப் பாடல்களும் அழகாக வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள 
அவர், வரும் ஜூன் மாதம் ராவணன் இந்தியா முழுக்க தமிழ், தெலுங்கு, இந்தி 
ஆகிய 3 மொழிகள் நேரடியாக வெளியாகிறது என்றார். தமிழிலும் இந்தப் படத்துக்கு
 ராவணன் என்றே பெயரிடப்பட்டுள்ளது. முதலில் அசோகவனம் என்ற தலைப்பை 
மணிரத்னம் தேர்வு செய்திருந்ததாகக் கூறப்பட்டது. 



ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சன், விக்ரம், கார்த்திக், ப்ரியாமணி என 
பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம் பல்வேறு 
பிரச்சினைகளைச் சந்தித்தது. 



ஒருவழியாக இப்போதுதான் ரிலீஸ் கட்டத்தை நெருங்கியிருக்கிறது.
                                                
                                                



00 91 99941 88566
rahmanian rajkumar




      

Reply via email to