Audio link: http://www.bbc.co.uk/mediaselector/ondemand/tamil/meta/dps/2010/07/100717_rahmanvoice?bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&ms3=14&ms_javascript=true&bbcws=1&size=au&bbwm=1
Key points discussed: Ongoing Tour Commonwealth games Theme song Endhiran About criticism on Semmozhi song Thirukkural Album http://www.bbc.co.uk/tamil/news/story/2010/07/100717_arrahmantour.shtml லண்டனில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி [image: ஏ ஆர் ரஹ்மான்] ஏ ஆர் ரஹ்மான் *தனது உலகளாவிய இசைப் பயணத்தின் ஒரு பகுதியாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் இசை நிகழ்சிகளை நடத்த ஏ ஆர் ரஹ்மான் தற்போது லண்டன் வந்துள்ளார். * ஏ ஆர் ரஹ்மான் செவ்வி<http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/dps/2010/07/100717_rahmanvoice?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1&bbram=1&bbwm=1> அடுத்த வெள்ளிக்கிழமையன்று பர்மிங்ஹாம் பகுதியிலும் சனி மற்றும் ஞாயிறு தேதிகளில் லண்டனிலும் ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்சிகள் வெறும் மெல்லிசை நிகழ்சியாக இருக்காது என்றும் இதில் ஒரு மையக் கருத்து இருக்கும் என்றும் ஏ ஆர் ரஹ்மான் கூறினார். டில்லியில் நடைபெறும் பொதுநலவாய போட்டிகளுக்கான 'தீம் சாங்' அதாவது அடையாள இசையை அமைக்கும் பணியில் தான் ஈடுபட்டுள்ளதாக கூறும் ஏ ஆர் ரஹ்மான், தமிழ் திரையுலகில் மிகப் பெரும் பொருட் செலவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ரஜினிகாந்த நடித்த எந்திரன் படத்துக்கான திரை இசை திருப்திகரமாக வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். *விமர்சனம்* ரஹ்மான் இசையமைத்த செம்மொழி மாநாட்டுப் பாடல் பெரிய அளவிலான வரவேற்ப்பை பெற்றிருந்தாலும் - சில விமர்சனங்களையும் அது தோற்றுவித்துள்ளது. தமிழை அடையாளப்படுத்தும் இசை இதில் இல்லை என்று விமர்சனத்துக்கு பதிலளித்த ரஹ்மான், மொழி மாறி வரும் ஒன்று என்றும் அதைகாட்டும் விதமாகவே புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தான் முயன்றதாகக் கூறினார். மூன்று தலைமுறையைச் சேர்ந்த பாடகர்கள் இதில் பங்கெடுத்துள்ளனர் அதை குறை சொல்வது சரியாக இருக்காது என்றும் அவர் கூறினார். திருக்குறளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கியில் புதிய இசைத் தொகுப்பாக கொண்டு வர தான் திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் வேலைப் பளு காரணமாக இதை தற்போது செய்ய முடியாமல் இருக்கதாகவும் ஏ ஆர் ரஹ்மான் தமிழோசையிடம் தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஐஃபா விருது விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழ்த் திரையுலகினர் எடுத்திருந்த நிலைப்பாடு குறித்து கேட்டபோது, 'மிகவும் உணர்வு பூர்வமான விடயங்கள் இவற்றில் சம்மந்தப்பட்டிருந்ததால் அந்த நிலைப்பாடு சரியாகவே அமைந்திருக்கும்' எனவும் ரஹ்மான் கூறினார். -- Cheers, Madhavan.R Be a Music Fan; not a Music Pirate!

