http://www.tutyonline.net/view/31_3641/20100501130230.htmlநடுக்கடலில் 12 தோனி தொழிலாளர்கள் பலியான சம்பவம். 3.75 கோடி நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி துறைமுகத்திற்கு கோர்ட் உத்தரவு. ஸ்ரீ | *சனி 1, மே 2010 1:02:30 PM (IST)*
தூத்துக்குடி கிரகோப் தெருவைச் சேர்ந்தவர் அண்டோ விக்டோரியா. இவருக்குச் சொந்தமான மரிய அண்டோராஜ் என்ற தோனியில் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற பொருட்கள் சென்றன. இந்தத் தோனியில் தூத்துக்குடியைச் சேர்ந்த தனிஸ்லாஸ் (57)என்ற மாலுமியும் அந்தோணி (58), ஜான்டோ (35), ரோலண்ட் (34), அந்தோணி சேவியர் (56), ராஜன் (21), சுவிகா (18), ஜோசப் (40) உட்பட 11 ஊழியர்களும் சென்றனர். கடந்த 11.09.99 அன்று இந்தத் தோனி தூத்துக்குடிக்கு கிழக்கே 20 மைல் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென்று ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் கடலில் மூழ்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தூத்துக்குடி துறைமுக சிக்னல் ஸ்டேசனுக்கு வயர்லெஸ் மூலம் மாலுமி தனிஸ்லாஸ் பலமுறை தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் துறைமுக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் 12 ஊழியர்களும் தோனியுடன் கடலில் உயிருடன் மூழ்கும் பரிதாப நிலை ஏற்பட்டது. இதில் தூத்துக்குடி துறைமுகமோ, கடலோர காவல் படையோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தச் சம்பவத்தில் ஜோசப் என்பவரது உடல் மட்டுமே கரை ஒதுங்கியது. கடலில் மூழ்கி உயிர் இழந்த 12 தோனி தொழிலாளர்கள் குடும்பத்திற்கு நஷ்டஈடு கோரி கடந்த 99ம் ஆண்டிலிருந்து மீனவர் அமைப்பினரும் பொது அமைப்பினரும் போராடி வந்தனர். இதில் எந்தவித பலனும் ஏற்படாததால், உயிரிழந்த 12 தோனி தொழிலாளர்கள் குடும்பத்தினரும் தங்களுக்கு தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம் நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென தூத்துக்குடி விரைவு நீதிமன்ற எண் 2ல் தனித்தனியே வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி கிருஷ்ணவேணி இந்த வழக்குகளை ஒரே நேரத்தில் விசாரித்து, கடலில் உயிரிழந்த 12 பேர் குடும்பத்தினருக்கும் ரூபாய் 32 லட்சத்து 67 ஆயிரத்து 500 நஷ்ட ஈடும், உயிரிழந்த தேதியிலிருந்து கடந்த ஏப்ரல் 30ம் தேதி வரை 7.5 சதவீத வட்டியுடன் சேர்த்து சுமார் 3.75 கோடி ரூபாய் தூத்துக்குடி துறைமுக பொறுப்புப் கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். உயிர் இழந்த தோனி தொழிலாளர்கள் குடும்பத்தினருக்காக இந்த வழக்குகளில் மூத்த வக்கீல் திலக் ஆஜரானார். -- You received this message because you are subscribed to the Google Groups "Green Youth Movement" group. To post to this group, send an email to [email protected]. To unsubscribe from this group, send email to [email protected]. For more options, visit this group at http://groups.google.com/group/greenyouth?hl=en-GB.
