வணக்கம், கட்டற்ற மென்பொருள் புத்தகம் வெளியானது நாமனைவரும் அறிந்ததே. அவை முதன் முதலாக தமிழாக்கம் செய்யப்பட்ட போது குனு இணைய தளத்தில் பதிவிக்கப்பட்டன. (மாதிரிப் பக்கம்: http://www.gnu.org/philosophy/not-ipr.ta.html)
பின்னர் புத்தக முயற்சிகள் மேற்கொண்ட போது எழுத்துப் பிழைகள், ஒற்றுப் பிழைகள், பொருள் தெளிவுற வேண்டி செய்தவை என பல்வேறு மாற்றங்களுக்கு அக்கட்டுரைகள் ஆளாகியிருக்கின்றன. இவ்விடயத்தில் திரு வாசுதேவன் (குநோம் தமிழாக்கப் பொறுப்பாளர்), திரு கண்ணன் (சக்தி கண்ணனின் தந்தை), ஆழி பதிப்பகத்து செந்தில், கென்னத் கொன்சால்வஸ் (என்ஆர்சிபாஸ்), திருமதி தங்கம் (ஐலக்சி மகேஷ் அவர்களின் தாயார், தமிழாசிரியர்), செல்வி காமாட்சி (விரிவுரையாளர், சாஸ்த்ரா பல்கலைக் கழகம்) முதலியோருக்கு இந்நேரத்தில் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம். (இதைத் தவிர ஒத்துழைத்து உதவியோரை நினைவு கூர்ந்து ஒரு பதிவிடுகிறேன். அவர்களுக்கும் இந்நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளேன்.) இவர்கள் சொன்ன மாற்றங்களில் செய்யப் பட்டது போக இன்னும் பல மாற்றங்களையும் அடுத்த பதிப்பில் பொலிவேற்றும் வண்ணம் குனு இணைய தளத்தில் செய்ய வேண்டியுள்ளது. இவ்விடயத்தில் தங்களால் உதவ இயலுமாயின் https://savannah.gnu.org/projects/www-ta/ குழுவில் தங்களை இணைத்துக் கொண்டோ அல்லது தனித்தோ எமக்கு மடல் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [EMAIL PROTECTED] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
