வணக்கம்

தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பில் மின்பதிப்பாக்கப் பயிற்சி பட்டறை என்
ஆர் சி பாஸ் வளாகத்தில் இன்று நடைபெற்றது. 

காலை பதினொரு மணி தொடங்கி மதியம் ஒன்றலை வரை நடைபெற்ற இந்நிகழ்வில் பல
துறைகளைச் சார்ந்தோர் கலந்து கொண்டு புத்தகங்களை மின்பதிப்பாக்கம் செய்யும்
முறை கற்றனர்.

பட்டறையை குநோம் தமிழாக்கத்திற்கு பொறுப்பு வகிக்கும் தி வாசுதேவன்
நடத்திக் கொடுத்தார். குறிப்பாக பச்சையப்பன் கல்லூரி தமிழ்த் துறை
மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் விவரங்களை கேட்டுத் தெரிந்து
கொண்டனர்.

தொடர்ந்து அவர்களுக்கு கட்டற்ற இயங்கு தள பயிற்சியும் அதனைக் கொண்டு
இப்பணிகளைத் தொடரும் வழிமுறைகளுக்கான பயிற்சியும் அளிக்கப்படவிருக்கிறது.

இந்நிகழ்வு குறித்த
அறிவிப்பு: 
http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/a5a3c11e12b8f595

காட்சிப் பதிவுகளுள்
சில: 
http://groups.google.com/group/minTamil/browse_thread/thread/20bcab620e44faa5

நிகழ்ச்சிக்கு இடம் வேண்டிய போது ஊக்கமளித்து சம்மதம் தெரிவித்த என் ஆர் சி
பாஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா. சி என் கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. 

--

ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email [email protected] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to