On Mon, 2009-09-28 at 09:16 +0530, சிவகுமார் மா wrote: > நண்பர்களுக்கு, > > திறவூற்று மென்பொருள் இயக்கம் குறித்து என் வலைப்பதிவில் எழுதிய இடுகை உங்கள் > பார்வைக்கு. > http://masivakumar.blogspot.com/2009/09/blog-post_27.html > > An article on Open Source movement in my blog (in Tamil)
இன்று இதே கட்டுரையை தமிழ் கம்ப்யூட்டர் ஏட்டிலும் வாசிக்கக் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. சில கருத்துக்கள்: ஓப்பன் சோர்ஸோடு ஸ்டால்மேனை தொடர்பு படுத்தாது இருப்பது நல்லது. வேண்டாம் என்று அவரே வலிந்து கட்டுரைகள் எழுதிய பிற்பாடும்[1] இங்ஙனம் செய்வது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. நாமே செய்கிற போது அது தமிழ்க் கம்ப்யூட்டர் போன்ற ஊடகங்களின் மூலம் தவறான அபிப்ராயங்கள் பரவிட வழிவகுக்கிறது. தங்கள் கட்டுரையில் இவ்விஷயத்தில் சற்றே தெளிவு தெரிந்தாலும் தமிழ்க் கம்ப்யூட்டரில் இல்லை. இதனை முன்னர் கட்டற்ற மென்பொருள் புத்தக அறிமுகத்திலும் தமிழ்க் கம்ப்யூட்டர் செய்திருந்தது நினைவிற்கு வருகிறது. வலைப்பதிவில் இருந்து.. //தனக்குப் புதிதாகக் கிடைத்த இன்டெல் 386 IBM பயனர் கணினியை இயக்குவதற்காக அவர் எழுதிப் பார்த்த இயங்குதளத்துக்கு செல்லமாக வைத்த பெயர் லினக்சு. அப்படி எழுதிய இயங்குதளத்தின் மூலநிரலை பூட்டி வைக்காமல் இணையத்தில் எல்லோரும் தகவிறக்கி பயன்படுத்தும் வண்ணம் வெளியிடும் போடும் பரிநிரல் அறக்கட்டளையின் GPL உரிமத்தின் கீழ் வெளியிட்டார்.// அவர் இயங்குதளம் எழுதவில்லை. கருவை எழுதினார், என்பதை தெளிவாகத் தெரிவித்தல் நல்லது. குனு லினக்ஸ் காலக்கோட்டை குறிப்பிடுகிற போது ஸ்டால்மேனின் முயற்சியை குறிப்பிட்டுத் தொடர்ச்சியாக லைனஸ் டோர்வார்ட்ஸின் முயற்சியையும் குறிப்பிட்ட பின்னர், இரண்டின் சேர்க்கையால் இயங்குதளம் உருவானது என்பதை கட்டுரை தெளிவாக்க வேண்டும் என்பதைக் கேட்டுக்கொள்கிறேன். மற்றபடி தங்களைப் போன்ற மூத்த வலைப்பதிவரிடமிருந்து வந்திருக்கும் இக்கட்டுரை அதிகப் பயன் கொடுக்கும் என்று ஆழமாக நம்புகிறேன். [1] - http://www.gnu.org/philosophy/open-source-misses-the-point.ta.html -- ஆமாச்சு
_______________________________________________ To unsubscribe, email [email protected] with "unsubscribe <password> <address>" in the subject or body of the message. http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
