வணக்கம் நேற்றைய தினம் பாதி வேலைக்கு மத்தியில் என்னோட கணினியை மறுபடியும் தொடங்க நேர்ந்தது.
குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு மறுபடியும் உபுண்டுவை தொடங்கும் போது தானாக நடைபெறும் fsck நடைபெற்றது. என்னோட ஹார்ட்டிஸ்க் முக்கியமா மூன்று பகிர்வுகளை (partitions) கொண்டிருந்தது. அதுல /home க்கு /dev/sda6. fsck பாதியிலேயே நின்னு போய், # prompt இல் விட்டது. மீண்டும் சில முறை தொடங்கி தொடங்கி பார்த்த போதும் அதே நிலைதான். கடைசியா fsck -y கட்டளையை வலிந்து கொடுத்ததுல, சரியா போகவே, ஒரு வழியாக கணினியை மீண்டும் தொடங்கினேன். என்னோட கணினியில் இரண்டு பயனர்கள் - amachu & ramadas இதுல என்னால amachu வாக நுழைய முடியல. (ICEAuthority போன்ற செய்திகள் வந்தன.) ramadas ஆக நுழைய முடிந்தது. ls -lh /home கொடுத்து பார்க்கும் போது, amachu அடைவின் ownership root:root. group & others க்கு எந்த உரிமையும் காட்டப்படலை. அதோட directory ஆக இருந்தால் காட்டப்படும் d யும் இல்லை. என்னோட amachu folder, text file ஆக தோன்றுகிறது. owneship ஐ amachu:amachu க்கு மாற்றி, group & others க்கு r & x அனுமதி கொடுத்தேன். என்னால cd கொடுத்தும் உள்ளே போக முடியல. முனையத்தின் மூலமா login செய்தால் password எல்லாம் எடுத்துக் கொண்டு நுழைய முடியுது, ஆனா home directory க்குள்ள போக முடியல. ஒரு கோப்பின் permissions நீங்கலான attributes ஐ மாற்ற முடியுமா? chattr மூலமா இதற்கு தீர்வு கிடைக்குமா? புதுசா ஒரு பயனர் உருவாக்கி பார்த்தேன். நுழைவதில் சிக்கல் இல்லை. வேறு எதாச்சும் தீர்வுகள் இதற்கு உண்டா? இதே சிக்கல் இதுக்கு முன்னாடி உங்களில் யாருக்காச்சும் ஏற்பட்டிருக்கா? ramadas என்ற பயனரை அவரோட home folder உடன் தூக்கிட்டு df -h கட்டளை கொடுத்து பார்க்கும் போதும் /dev/sda6 இல் மொத்தம் இருக்கும் 110 GB கொள்ளிடத்தில் 7.6 GB பயன்படுத்தப்பட்டிருப்பதாக காட்டுகிறது. ஆக தரவுகள் பத்திரமாக இருக்கும் என்று நம்பறேன். மீட்க பரிந்துரைகளை எதிர்பார்க்கிறேன். -- ஆமாச்சு _______________________________________________ ILUGC Mailing List: http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
