நாம்
 தமிழர்கள்  தானா...............


  முதலில் நான் தமிழன்...
பிறகுதான் இந்தியன்...


தமிழா!நீ பேசுவது தமிழா?
-----------------------------------
தமிழா!நீ பேசுவது தமிழா?

அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...


தமிழா!நீபேசுவது தமிழா?


உறவை 'லவ்' என்றாய்உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியைபார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்விடியாதுன்வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்அறுத்தெறி நாக்கை...


தமிழா!நீ பேசுவது தமிழா?


வண்டிக்காரன் கேட்டான்'லெப்ட்டா? ரைட்டா?
'வழக்கறிஞன் கேட்டான்என்ன தம்பி 'பைட்டா?
'துண்டுக்காரன் கேட்டான்கூட்டம் 'லேட்டா?
'தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


கொண்ட நண்பனை'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியைஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழிசாவது நல்லதா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


பாட்டன் கையில'வாக்கிங் ஸ்டிக்கா
'பாட்டி உதட்டுலஎன்ன 'லிப்ஸ்டிக்கா?
'வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா?
'வெள்ளைக்காரன்தான்உனக்கு அப்பனா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


-உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்





என்ன இந்த காலப்போரட்டம் ...
என் சாதியின்
பதுங்கு குழியெல்லாம்
பாடைகுழிகளாய் ....

கருவில் இருந்து கூட என் இனம்
கருகியே பிறக்கிறதே!
அன்று முறத்தால் அடித்த இந்த கரத்தில்
இன்று அதுவாய் மாறி துப்பாக்கிகள்...

உலகாண்ட என் சாதி இன்று
உலகமெங்க்கும் அகதிகளாய்...
எண் சொல்ல என் இனத்தின் பாடுகளை...
கேட்டு பாருங்கள் கண்ணீர் வடிக்கும் ஏடுகளை...

அப்பா இறந்து கிடந்தால்
அழக்கூட முடியாது...
அழகுதங்கையின் கற்ப்புக்கு
ஆண்டவன்தான் காவல்...

ஈழத்து தேசமெங்கும் வெண் கற்கள்..
அடடா! அது இறந்து என்சாதின் பற்கள்..
வன்னி வனமெங்கும் வெள்ளை விறகுகள் ..
கண்ணீரோடு சொல்கிறேன் அது என்சாதி எலும்புகள்...

அன்று ஒருநாள் என் இனம்
உலமெங்கும் புகழ் பரப்பியது ...
இன்று உலகமெங்கும் ஓலமிடுகிறது...
தமிழனின் இரத்தத்தில் கொலமிடுகிறது...

ஆணையிரவு இரவுகளுக்கு தெரியுமா ?
இழக்கப்பட்ட என் சாதி கற்பின் எண்ணிகையை ..
கிளிநொச்சியின் கிளிகளெல்லாம் சொல்கிறது...
இறக்கும் என்சாதியின் இன்னல்களை...
முல்லைத்தீவு எங்கும்
மொய்க்கின்ற கழுகுகளுக்கு தெரியுமா ? - அது
ஒருஇனப்போராட்டத்தின்
இறைச்சி என்று ...

வன்னி காட்டு மரக்கிளைகளே
உங்களுக்கு தெரியுமா ?
நீங்கள் சுமப்பது என்
சொந்தம்களின் சதைஎன்று...

யாழிசை கூட ஒப்பாரியாக
யாழ்ப்பான சோகத்தை மீட்டும்...
அடடா தமிழா! எந்த நெருப்புடா - இதயத்தில்
இனவுணர்வினை ஊட்டும்...

கூப்பிடும் தூரத்தில்
கோடி சனமிருந்தும்...
வீதியெங்கும் கிடக்குதடா
நாதியின்றி தமிழனின் பிணம்...

என் இனம் செய்த அவலம் என்ன?
இறைவா நீ சொல்லிவிடு -இல்லையேல்
என் இனத்தை
கருவிலேயே கொன்றுவிடு ...

கவரிமாண் அவளின்
கற்ப்பினை காக்க
இறக்க கூட சுதந்திரம் இல்லாத போது
இறைவா நீ இங்கு தேவையா ?

பாஸ்பரஸ் குண்டுகளில்
பறிபோகும் என் சாதிக்காக
பரஸ்பர அறிக்கை வெளியீடு -
இறைவா அரசியல் சாதியினை
அழித்திட வரம்கொடு...

அங்கே கொன்றுகுவிக்கும் அந்த
தலைகளை பொறுக்கி
இங்கே வாக்கு பெட்டியை
நிறைக்கிறான் வாக்குபொருக்கி..

வாசலுக்கு வரும்
வாக்கு பிச்சைகாரனே
வராதே என் வீட்டிற்கு... வந்தால்
செற்றிடுவாய் சுடுகாட்டிற்கு ...

கடல் ஒன்றும் தூரமில்லை
காளைகலாம் எங்களுக்கு - ஆயுதம்
கைமீது எடுத்துவிட்டால்
கருமாதி உங்களுக்கு ...

ஈழத்து குருதியலே
ஏழுகோடி எழுதுகிறான்
அரசியல் சாசனத்தை... அன்புடையீரே
நீங்களிடும் வாக்கினால்
காப்பாற்றலாம் நம் இனத்தை...

காமத்து தலைவனை
காணவில்லை என்பதற்கு
நாற்பதாயிரம் பெண்களை
நாசமாக்கி பார்த்தவளே..
இத்தாலி பெண்மணியே இரக்கமாயிறு
இல்லையென்றல் இறக்கநேரிடும் ....

ஈழத்தின் பிணவாடை இங்கே தெரியும்
அந்தநாளின் இத்தமிழகம் எரியும்...

உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் உள்ளம் கொதித்தால்
நாம் நண்பர்களே -சேகுவேரா


கடவுளை ஏற்று கொண்டால்
மதத்தினை ஏற்றுகொள்வாய் !

மதத்தினை ஏற்று கொண்டால்
சாதிகளை ஏற்றுகொள்வாய் !

சாதிகளை ஏற்று கொண்டால்
ஏற்றதாழ்வுகளை ஏற்றுகொள்வாய் !

ஏற்றத்தாழ்வுகள் ஏற்று கொண்டால்
சாதிசண்டைகளை ஏற்றுகொள்வாய் !

ஆகவே தோழனே முதலில்
கடவுளை மறு !

அனைத்தும் சரியாகும்! - பெரியார்
 அன்புடன்
 அறிவழகன்

-- 
___________________________________________________________________

Welcome to Maa Vee Maa Kaa Nanbargal valai Kuzhu (Friendship Group)!

This group is purely of the Youth, 
                             by the Youth and 
                             for the Youth.

Utilize this group to post your views & messages.
___________________________________________________________________

To post to this Maa Vee Maa Kaa group, send your emails to [email protected]

Regards,
Owner,
Maa Vee Maa Kaa.

Reply via email to