Pranam

பட்டினத்தடிகள் துறவியாக ஊர்
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D> ஊராகத் திரிந்து
கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார்
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D>.
அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று
வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை
அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி
பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப்
புகழ்பெற்றவை.

*ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்*

*பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு*

*கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை*

*எப்பிறப்பில் காண்பேன் இனி*

*முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே*

*அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி*

*சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ*

*எரியத் தழல் மூட்டுவேன்*

*வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்*

*கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்*

*சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ*

*விறகிலிட்டுத் தீமூட்டு வேன்*

*நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை*

*தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்*

*கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ*

*மெய்யிலே தீமூட்டு வேன்*

*அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு*

*வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள*

*தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ*

*மானே எனஅழைத்த வாய்க்கு*

*அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்*

*கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள*

*முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்*

*மகனே எனஅழைத்த வாய்க்கு*

*முன்னை இட்ட தீ முப்புறத்திலே*

*பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88>*

*அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே*

*யானும் இட்ட தீ மூள்கமூள்கவே*

*வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
<https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D>*

*ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்*

*குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்*

*கருதி வளர்த்தெடுத்த கை*

*வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்*

*வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்*

*உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்*

*தன்னையே ஈன்றெடுத்த தாய்*

*வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்*

*நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க*

*எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்*

*எல்லாம் சிவமயமே யாம்*

Pattinathadigal a sage who left all the richness and smooth life and turned
a sage was wandering. And heard that his mother was dead. And as a sage no
one shall give him the Agni as He is the Agni. Then he sang the above
verses and raised the fire to cremate his mother. His words on mother
nature is indescribable in any other language even if translated; for those
who may not know the language a brief words of his usages as short content.

        When again I shall see that mother who bore me for ten months and
fed me; Will I be able to burn my mother, who did penance to carry me, and
did it for 300 days with the slanted stomach bearing the weight and
tortures, weighting with the prayers to Sivam?.

      Have I to burn a mother who cherished me all the time on small beds,
in swings and chest and shoulders and on the cots, hugging me too close all
these years?

      Have I to burn that body, who delivered me after bearing all the
pains and sufferings, raised me, with the breast milk and at all times
keeping me too close.?

       How can I place the rice in her mouth which called me by many sweet
names? how can I lay the fire to the face which kissed me a lot?; Thus with
the lament he raise d the fire by this verse:

Tripuram was burnt by Lord Siva, so he says the former fire burnt the
Tripuram; then later Hanuman burnt the Sri Lanka by back tail fire;  my
mother fed my Agni in the stomach; and let my fire to her glow to burn her.
OH Lord Siva, she is burning; she is becoming ashes; I did it without any
remorse to a lady who never even allowed a fly to fly above me. Hey Siva,
did she reach you? Did she forget me? One who was always thinking about you
Lord, one who gave me birth, she was at home; she was in the markets;
yesterday she was there; and today she became the ashes.  Please all of you
please come to sprinkle milk for her ashes without any second thought.
Everything is SIVAM.

KR IRS 15821

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor-cC3gCA3L1%3DZN%3Durftyv3ww%3Duh16Jdg%3DFp_77LvWp0g%40mail.gmail.com.

Reply via email to