[உபுண்டு_தமிழ்] எக்ஸ்எப்சிஈ(Xfce) தமிழ் மொழிபெயர் ப்பு

2010-01-02 திரி Mohan R
வணக்கம்,

முதலில் என்னை மண்னியுங்கள், தமிழில் அதிக அலவில் தவறுகள் செய்பவன் நானாகத்தான் 
இருப்பேன். இது எனது முதல் தமிழ் மின்அஞ்சல்.

நன் டெபியன் + எக்ஸ்எப்சிஈ இயங்குதலத்தை பயன்படுத்தி வருகின்றேன், எக்ஸ்எப்சியின் 
எளிமையும், வேகமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ஆகவே, அதனை தமிழாக்க 
விரும்புகிறேன்.

முதல் முயற்ச்சியாக, இரண்டு PO கோப்புகளை மொழிபெயர்த்துள்ளேன்,

http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/libxfcegui4-xfce-4.6.po
http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce-utils-xfce-4.6.po

இதற்க்கு கீழ்கானும் வலையகத்தையும்,

http://www.tamildict.com

மற்றும் அண்ணா பல்களைகழகமும், வளர்தமிழ் மன்றமும் உருவாக்கியுள்ள

http://www.scribd.com/doc/2421484/Tamil-Technical-Computer-Dictionary

கோப்பையும் பயன்படுத்தி இருந்தேன்.

இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் பிழையிருந்தால் 
திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான
முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்) 
மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து உதவியை 
எதிர்பார்க்கின்றேன்.

நன்றி,
மோகன் .ரா

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]எக்ஸ்எப் சிஈ(Xfce) தமிழ் மொழி பெயர்ப்பு

2010-01-02 திரி Mohan R
கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
 Daemon - தேவைப்படும் பொழுதுகளில் மட்டும் இயக்கத்துக்கு வருவதும்
 தேவையற்ற வேளைகளில் பின்னனியில் உறங்கிக் கொண்டிருக்கும் server
 (வழங்கி) தானே daemon. மயூரன் இதற்கு மாயாவி எனத் தமிழாக்கம் செய்யலாமே
 என ஒரு தடவை கருத்தேற்றம் செய்திருந்தார். ஆயினும் எல்லாருக்கும்
 விளங்கக்கூடிய வேறு சொற்கள் ஆக்க இயலுமாயின் முயல்வது நன்றே.

Daemon - நினைவகத்தில் நிலையாக இருக்கும் ஓர் செயலி என்று நினைத்து 
நிலைநினைவகச்செயலி என்று மொழிபெயர்த்துள்ளேன்.

 Process - இராம.கி. அவர்கள் செலுத்தம் என தமிழில் எழுதுகிறார் (கூகிள்
 தேடலுக்கு : 
 http://www.google.lk/search?hl=enclient=firefox-arls=org.mozilla%3Aen-US%3Aofficialhs=wWUq=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+site%3Ahttp%3A%2F%2Fvalavu.blogspot.combtnG=Searchmeta=aq=foq=
 )
 
 செலுத்தம் அழகிய சொல்லே. ஆனால் இலகுவில் பலருக்குப் புரியுமா என்பது
 கேள்விக்குறியே. தமிழ் விக்சனரியில் உள்ள  வினைமுறை, விளைமுறை
 மற்றும் நிகழ்முறை என்பனவற்றில் ஒன்று எளிமையானதாகவும்
 போதுமைநானதாகவும் இருக்கும் எனக் கருதுகிறேன்.

எனது 11/12அம் வகுப்புகலில், Processக்கு செயலி என்று படித்ததுபோல் நினைவு, 
அதனால் செயலி என்று மொழிபெயர்த்துள்ளேன்.

 Configure - இக்குழுமத்தில்தான் அதற்கு அமைவடிவாக்கல் என தமிழாக்கம்
 அறந்தேன் 3-வருடங்கள் முன். அதையே நான் பயன்படுத்துகிறேன்.

கிட்டதட்ட சரியாகத்தான் செய்துள்ளேன், வடிவமைப்பு

 Menu - பட்டியல் ?
 Menu Item - பட்டியல் உறுப்பு ?

இவற்றையும் சரியாகத்தான் செய்துள்ளேன். அனாலும் List என்றாலும் பட்டியல் என்று 
வருவதால் 
விணவினேன்.

 Window Manager - சாரள நிருவாகி ?  சாரள மானகைச் செயலி ?

தமிழ்மொழிபெயர்ப்பு எவ்வலவு சிக்கலானது என்பதை இவ்வார்த்தையின் போதுதான் 
அறிந்தேன். 
இதற்கு விண்டோ மேனேஜர் என்றே மொழிபெயர்த்தேன்.

மேலும் இரு வார்த்தைகள்,

Personalize,
Profile

இரண்டிற்கும் கிட்டதட்ட அர்தம் ஒன்றுதான் என்று நினைக்கிறேன்.

நன்றி,
மோகன் .ரா

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam