Re: [உபுண்டு_தமிழ ்]PageMaker doesn't support Tamil9 9

2009-07-19 திரி thiru ramakrishnan
உங்கள் விடைக்கு நன்றி!


 ஒரு நிரல் யூனிகோடை அனுமதிக்கவில்லை எனில் அது
 அதன் குறைபாட்டையே காட்டுகிறது!
ஆம். பேஜ்மேக்கர் யூனிக்கோட்-ஐக் கையாளாது என்று நான்
நினைத்துக்கூடப்பார்க்கவில்லை. திரு இரகுவீரதயாள் அவர்களுடைய
விடையிலிருந்து இதை அறிந்தபோது வியப்படைந்தேன்.


 தமிழ்  99 ஒரு உள்ளீட்டு முறைதானே?
 அதிலேயே பயன்படுத்தலாம்.
 இதனால் யூனிகோடை உள்ளிட முடியாது என்று இல்லை.
நான் யூனிக்கோட்-ஐத் தான் பயன்படுத்துகிறேன். இதனால்தான்
பேஜ்மேக்கர் பயன்படுத்துபவர்களால் என் கோப்புகளைப் படிக்க
முடிவதில்லை என்பதை இப்போது உணர்கிறேன்.


தமிழ்99ல் யூனிகோட் அல்லாதவற்றை (tscii, tab, tam
முதலியவற்றை) பயன்படுத்த முடியுமா?

அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?


 அவரவர் பயன்பாட்டை பொருத்தது.
எனக்கு வேகமான இணைப்பு கிடைப்பதில்லை. மேலும்,
அதிக நேரமும் கிடைப்பதில்லை. அதனால் நான்
இணையத்தில் அதிகம் உலாவுவதில்லை. ஒரு நாளைக்குச்
சராசாரியாகச் சுமார் 20 நிமையங்கள் (பெரும்பாலும் இந்து
முதலியவற்றைப் படிப்பதற்கு) தான் உலாவுகிறேன்.
ஆனால், கிருமி வருவதற்கு அதிக நேரம் வேண்டியதில்லையே!


 லீனக்ஸீல் வைரஸ் தாக்குதல் குறைவு.
ஆம். ஆனால், கடந்த சில மாதங்களாக ஃபயர்ஃபாக்ஸ்
பல நேரங்களில் (என்) கட்டுப்பாடின்றி உலவுவதுபோலத்
தெரிகிறது. தொலைபேசி இணைப்பும் hard diskம் நிறைய
வேலை செய்கின்றன, ஆனால் அந்த வேலை என்ன என்று
தெரிவதில்லை! அதனால்தான் கிருமி குடிகொண்டுவிட்டதாக
எனக்குச் சந்தேகம் வருகிறது.


 தேவையானால் க்லாம்வைரஸ் மென்பொருளை
 கூடுதலாக நிறுவிக்கொள்ளலாம்.
தயவுசெய்து க்லாம்வைரஸ் என்பதன் ஆங்கிலப் பெயரை
எழுதவும். நன்றி.


 கடந்த 4 வருடங்களக உபுண்டுவையே பயன்படுத்துகிறேன்.
நான் சுமார் 2 ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறேன். கடந்த 3-4
மாதங்களாகத்தான் ஏதோ தவறு நடப்பதுபோல் தெரிகிறது.


 தரவிறக்கி நிறுவுங்கள்.
தரவிறக்கி என்றால் என்ன?


  தமிழ்99 சிம் இல் பொதுதான். (scim) கூடுதல் மொழி
 நிறுவலில் தமிழை நிறுவினாலும் கூட போதும்.
நான் சிறப்பாக ஒன்றுமே செய்யவில்லை. ஆனால், தமிழ்99
தவிரப் பிற தமிழ் உள்ளீட்டு முறைகள் உள்ளன!

ராம்கி  94425 60429



-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]தகடூர் ஆ ங்கிலத்தில் ?

2010-06-28 திரி thiru ramakrishnan
I'm not a linguist. The following is based on my experience.

Thanks.

Ramki
-
Those who speak Sanskrit-based languages use t for those words for 
which we (Tamils) use th. Ex. Thiruppur is written by the Hindian govt 
as Tirupur. Hence, this is the official spelling, I guess. Many, incl. 
The Hindu, use this spelling.

Malayalees seem to be less shackled than we are. They spell 
Thiruvananthapuram, not Tiruvanantapurm (or Trivandrum, the Anglicized 
way). We should be following them, I feel.

As for the Tamil long vowels, I follow the convention of using capital 
letters. (I don't know who originated this convention; not me, of 
course!)   Ex. தகடூர் would be thagadUr.

It may make some sense for Hindians to use tagadoor (or tagadUr) since 
they have four sounds: t, d, th, dh (similarly k, g, kh, gh). But, in 
Tamil we don't have the nasal sounds and only have t, d. So, I think it 
is better to use thagadUr or thagadoor.
-


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-11 திரி thiru ramakrishnan
வழு இருப்பதை உடனடியாக உறுதி செய்தமைக்கு திரு வாசுதேவன் அவர்களுக்கும் அதைக் 
குறித்து பரந்த அளவில் முழுமையான ஆய்வுகளைச் செய்து அனைவருக்கும் நிலைமையை 
விளக்கியுள்ள திரு சேது அவர்களுக்கும் மிக்க நன்றி! சிக்கலை சேது அவர்கள் 
துல்லியமாக 
வரையறுத்துள்ளார்.


நான் பெரும்பாலும் (by default) Lohit Tamil எழுத்துருவைத்தான் பயன்படுத்துகிறேன். 
ஆனால், அதன் எழுத்துகள் நேராக உள்ளன. TSCu_Times-இல் எழுத்துகள் சற்றே சாய்வாக 
இருப்பதால் அவை படிப்போருக்கு எளிதாக இருக்கும் என்று வெளியீட்டக 
நண்பர்களிடமிருந்து 
சென்ற ஆண்டு அறிந்தேன். அப்போது ஒரு முறை அந்த எழுத்துருவைப் பயன்படுத்தினேன். 
அப்போது 
இச்சிக்கல் நேரவில்லை.

அதனால்தான் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் TSCu_Times பக்கம் மீண்டும் 
திரும்பினேன். 
இப்போது இந்தச் சிக்கல் உள்ளது.

Akshar என்ற எழுத்துருவும் சாய்வெழுத்துகளைக் கொண்டது என்று தேடி அறிந்தேன். 
ஆனால், 
அதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன: (அ) எழுத்துகள் அழுத்தமாக உள்ளன (the characters 
appear darker even in their plain form), (ஆ) வரிக்கு வரி இடைவெளி மிக 
அதிகமாக உள்ளது. (இதைக் குறைக்க முடியும்; proportional spacing-ஐப் பயன்படுத்தி. 
ஆனாலும் இந்தத் தீர்வு அவ்வளவு நல்ல தீர்வாக எனக்குத் தெரியவில்லை.)


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-12 திரி thiru ramakrishnan
Tirumurti Vasudevan agnih...@gmail.com:
 TAU Elango juliee ஐ நிறுவி பயன்படுத்துங்கள்.

இதனை அனுப்பியதற்கு நன்றி.  ஆனால், இதனை பெரிய ஆவணங்களில் முழுக்கப் பயன்படுத்த 
இயலாது. (படிப்பதற்குக் கடினமாக இருக்கும்போலத் தோன்றுகிறது.) ஆங்காங்கு 
பெட்டிச் 
செய்திகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

ராம்கி




-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam