எமக்குத் தெரிந்தது,

இதன் அடிப்படை  படைப்பை  ஊக்குவிப்பது. பொது நலத்திற்காக படைக்க
வேண்டும். படைப்பவனை ஊக்குவித்தால் அவன் மென்மேலும் படைப்பான்.  அதனால்
சமூகம் பயனடையும்.

படைப்பவனுக்கு அவன் படைப்பால் வரும் பொருளை  (பணத்தை) அனுபவிக்கும்
பேற்றிணைத் தருவது patent.  பொது நலத்துக்காகத் தான் இதுவும் என்பதால்
இதில்  கால அளவும் இருக்கிறது.

பொதுவாக ஒரு கண்டுபிடிப்புக்கு 20 ஆண்டுகள் பேடன்ட் தருவது  வழக்கம்.
மென்பொருள் துறையில் மாற்றங்கள் நிமிடக் கணக்கில்  நிகழும் பொழுது இது
சுத்த அபத்தமாக முடியும் எனபது ஒரு வாதம்.

ஆக,  தான் படைத்ததன் பலனை  பிறர் அடைய, சில காலத்துக்கு அதன் மீதான
அதிகாரம்  தனி நபருக்கோ  அல்லது நிறுவனத்துக்கோ  தரப் படுவது பேடன்ட்.
இது சுய சிந்தனை, அத்தகைய கண்டுபிடிப்புகள் எதுவும் அதற்கு முன்னால்
நடந்திடாதமைக்கான உறுதியான ஆதாரம் முதலியவற்றை  அடிப்படையாகக் கொண்டது.

மூன்று பிளேட் கொண்ட சவரம் செய்யும் ரேசர் கருவி பேடன்ட் களால்
பாதுகாக்கப் பட்டது.  அதனைப் போல் 20  ஆண்டுகளுக்கு யாரும் சட்டத்துக்கு
உட்பட்டு தயாரிக்க இயலாது.  20  வருடத்துக்குப் பிறகு அது
செல்லுபடியாகாது.  மீட்பதற்கு வழியுண்டா  என்பது குறித்து சரியாகத்
தெரியவில்லை.

ஆக சிலக் காலங்களுக்கு போகங்களை  படைப்பவன் அனுபவிக்கின்றான்.
பேற்றினைப் பெறுகின்றான்.  பேற்றுரிமை  சரியாக வருமா?

மகப்பேறு மாதிரி முன்னர் ஏதாவது சேர்த்து ஒரு சொல் சரியாக வருமா?
-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க