2009/11/15 ramadasan <ama...@ubuntu.com>

> IBus துணையுடன் கருமிக் கோவாலாவில் தமிழ் தட்டெழுத - http://bit.ly/wcJ5L
>
> --
>
> ஆமாச்சு
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>

ஆமாச்சு, நண்பர்களே

எனது காணொலி ஒன்றை இங்கு பதிவிறக்கிப் பாருங்கள்
http://sites.google.com/site/sethussite/Home/kanolikal/sethu-on-ibus-bugs.ogv
(8.4 MB)

IBusPreference + env. variables in .bashrc வழியான இந்த பரிந்துரைக்கப்பட்ட
வழி ஏன் குறைபாடானத் என்பதை அதில் எடுத்துக் காட்டுகிறேன்.

கருமிக் வெளியீட்டில் மொழி பயன்பாடு தொடர்பாக இரு சொதப்பல்கள். ஒன்று
மேற்காட்டிய முறைமை. அக் காணொலியில் நான் ஒவ்வொரு அமர்விலும், "killall
ibus-daemon" அதன் பின் "ibus-daemon -d" என்ற இரு கட்டளைகள் கொடுக்க
வேண்டியுள்ளதாக உள்ள வழு நிலையை எப்படி அகற்றுவது ? பதில் தெரிந்தால் அந்த
விக்கி வழிகாட்டியிலும் பதியுங்கள்.

im-switch கட்டமைப்பு சரியாகப் பயன்படுத்தின் இப்பிரச்சினைகள் இல்லை - மேலும்
ibus, scim, gtk2-im மற்றும் uim களுக்கு இடையே மாற்றுவதும் (switching) மிக
இலகுவாகும்.  இம் மடலுக்கு வரும் ஏனையோர் அனுபவங்கள் பற்றிய பதில்கள் சில
பார்த்தபின் im-switch பயன்பபாடு பற்றி எழுதுவேன்.

இன்னொரு சொதப்பல் ஆனது வரைகலை இடைமுகப்பு ஒன்று வழியாக தமிழிற்கு துணைப்பொதிகள்
நிறுவ வேண்டுமாயின் உபுண்டு - கனோம் மேசைத் தளத்தில் Synaptic Package Manager
அல்லது Language  Selector என இரண்டில் ஒன்றை பயன்படுத்தலாம். (புது மாடு
Ubuntu Software Centre வழியாக துணைப் பொதிகள் தேடிப் பிடிக்க இயலாது எனத்தான்
தெரிகிறது.) இம் முறை  Language  Selector வழியாக தமிழிற்கு பொதிகள் நிறுவச்
சொன்னால் தேவையானவைகளுடன் கூடவே அதிக அளவு வேறு பொதிகளையும்  சேர்க்கிறது. எனது
வழு அறிக்கை பார்க்க :
https://bugs.launchpad.net/language-selector/+bug/446051

 கூடுதலாக 25 பொதிகள் - 60 MB பதிவிறக்குகிறது Language Selector.  ஆக புகுப்
பயனர்களுக்கு இலகு முறை என அதை பரிந்துரைக்க இயலாது என்பது என் கருத்து. 1
மாதம் ஆகியும் எனது வழுவிற்கு பதில் கொடுக்கவில்லை உபுண்டு i18n குழுமத்தினர்!

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க