நேற்றுத்தான் அடுத்த உபுண்டு பதிப்பின் சோதனை வெளியீடொன்றை நிறுவிப்பார்த்தேன்.
நிறுவிய கையோடேயே தமிழ் தளங்களை எந்த பிரச்சினையும் இல்லாமல் பார்க்க
முடிகிறது.

diff ஆணை கொண்டு /usr/bin/firefox இனை ஒப்பிட்டுப் பார்த்ததில் கிடைத்த முடிவு
இதோ,

< if [ "x${MOZ_DISABLE_PANGO}" = x ]; then
<     MOZ_DISABLE_PANGO=0
<     MOZ_DISABLE_PANGO=1
<     export MOZ_DISABLE_PANGO
< if [ "x${MOZ_DISABLE_PANGO}" = x0 ]; then
<     unset MOZ_DISABLE_PANGO
<           OPTIONS DEBUG DEBUGGER MOZ_DISABLE_PANGO MOZ_NO_REMOTE


இந்த வரிகளைனைத்தையும் நீக்கியிருக்கிறார்கள்.
அப்படியானால், pngo இயல்பிருப்பிலேயே இயலுமைப்படுத்தப்பட்டிருக்கிறது
என்பதுதானே அர்த்தம்?

அப்படியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி.
இந்த மகிழ்ச்சியை அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.

குறிப்பு: firefox 3.0 இல்  முற்றுமுழுதாகவே பாங்கோ வினை
இயல்பிருப்பாக்கப்போகிறார்கள். இந்தப்பிரச்சினை எல்லாம் firefox 2 இருக்கும்
வரைதான். ;-)


-மு.மயூரன்

-- 
visit my blogs
http://www.mauran.blogspot.com
http://www.tamilgnu.blogspot.com
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க