Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-12 திரி thiru ramakrishnan
Tirumurti Vasudevan agnih...@gmail.com:
 TAU Elango juliee ஐ நிறுவி பயன்படுத்துங்கள்.

இதனை அனுப்பியதற்கு நன்றி. ஆனால், இதனை பெரிய ஆவணங்களில் முழுக்கப் பயன்படுத்த 
இயலாது. (படிப்பதற்குக் கடினமாக இருக்கும்போலத் தோன்றுகிறது.) ஆங்காங்கு 
பெட்டிச் 
செய்திகள் போன்றவற்றில் பயன்படுத்தலாம்.

ராம்கி
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-11 திரி thiru ramakrishnan
வழு இருப்பதை உடனடியாக உறுதி செய்தமைக்கு திரு வாசுதேவன் அவர்களுக்கும் அதைக் 
குறித்து பரந்த அளவில் முழுமையான ஆய்வுகளைச் செய்து அனைவருக்கும் நிலைமையை 
விளக்கியுள்ள திரு சேது அவர்களுக்கும் மிக்க நன்றி! சிக்கலை சேது அவர்கள் 
துல்லியமாக 
வரையறுத்துள்ளார்.


நான் பெரும்பாலும் (by default) Lohit Tamil எழுத்துருவைத்தான் பயன்படுத்துகிறேன். 
ஆனால், அதன் எழுத்துகள் நேராக உள்ளன. TSCu_Times-இல் எழுத்துகள் சற்றே சாய்வாக 
இருப்பதால் அவை படிப்போருக்கு எளிதாக இருக்கும் என்று வெளியீட்டக 
நண்பர்களிடமிருந்து 
சென்ற ஆண்டு அறிந்தேன். அப்போது ஒரு முறை அந்த எழுத்துருவைப் பயன்படுத்தினேன். 
அப்போது 
இச்சிக்கல் நேரவில்லை.

அதனால்தான் சுமார் இரண்டு வாரங்களுக்கு முன் TSCu_Times பக்கம் மீண்டும் 
திரும்பினேன். 
இப்போது இந்தச் சிக்கல் உள்ளது.

Akshar என்ற எழுத்துருவும் சாய்வெழுத்துகளைக் கொண்டது என்று தேடி அறிந்தேன். 
ஆனால், 
அதில் இரண்டு சிக்கல்கள் உள்ளன: (அ) எழுத்துகள் அழுத்தமாக உள்ளன (the characters 
appear darker even in their plain form), (ஆ) வரிக்கு வரி இடைவெளி மிக 
அதிகமாக உள்ளது. (இதைக் குறைக்க முடியும்; proportional spacing-ஐப் பயன்படுத்தி. 
ஆனாலும் இந்தத் தீர்வு அவ்வளவு நல்ல தீர்வாக எனக்குத் தெரியவில்லை.)


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-10 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
நான் Lohit Tamil மற்றும் SooriyanDotCom எழுத்துருக்களை பயன்படுத்தி
வருவதால் இந்த வழு ஏற்படுவதை கண்டிருந்திருக்கவில்லை.

இத்தகைய வழு இருப்பதைக் கண்டறிந்து சுட்டிக் காட்டியமைக்கு ராம்கி (thiru
ramakrishnan) அவர்களுக்கு எனது பராட்டுகளை முதற்கண் தெரிவித்துக்
கொள்கிறேன்.

இங்கு வழுநிலை ஆனது ஓபன் ஆபிஸ் இரைட்டரில் ஒரு மெய் எழுத்து தனித்து
நிற்கையிலோ அல்லது ஒரு சொல்லின் ஈற்றாக அமைகையிலோ அதன் புள்ளி தன்னிடம்
விட்டு விலகிச் சேராமல் காணப்படுவது எனலாம். அவ் வழுநிலை காட்டும்
எழுத்துருக்களைப் பயன்படுத்துகையில் ஒரு மெய் எழுத்தைத் தொடரந்து அதே
மெய்யின் உயிர்மெய் அசை ஒன்று அல்லது வேறொரு மெய் அல்லது வேறு மெய்யின்
உயிர்மெய் அசை ஒன்று வருமாயின்அவ்விடத்தில் வழுநிலை மாறி வழாநிலை ஆகிறது.

Open Office 3.0 அல்லது அதற்குப் பின்னரான வெளியீடுகளில் நான் சோதித்த
எழுத்துருக்களில் திவா அவர்கள் குறிப்பிட்டவாறு எல்லா மூன்று TSCu
எழுத்துருக்கள் பயன்படுத்துகையிலும் இவ் வழு நிலை ஏற்படுகின்றன. மேலும்
அமரர் உமர் அவர்களால் கட்டற்ற உரிமத்துடன் வெளியிடப்பட்ட ThendralUni,
VaigaiUni மற்றும் TheneeUni ஆகிய மூன்றின் பயன்பாட்டிலும் அதே வழுநிலை
ஏற்படுகின்றன.

மாறாக நான் சோதித்த எழுத்துருக்களில் Lohit Tamil, SooriyanDotCom,
FreeSerif, TAMu_Kadambri, TAMu_Kalyani, TAMu_Maduram ஆகிய 6
எழுத்துருக்களினால் அவ் வழு ஏற்படுவதில்லை

உபுண்டு 10.04 / ஓபன் ஆபிஸ் இரைட்டர் 3.2 இல் மேற்குறிப்பிட்ட 12
எழுத்துருக்களினால் அல்லல் எனும் சொல்லின் தோற்றமாக்கலைப் பின்வரும்
திரைவெட்டில் காணலாம்.

http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-3_2-Lucid-1.png

அதில் இதுவரை இம் மடலில் நான் குறிப்பிடாத FreeSans எனப் பெயருடைய
எழுத்துருவின் பயன்பாட்டையும் பார்க்கவும்.  அவ் எழுத்துருவினால்
தோற்றமாக்குகையில் ஈற்றில் வருவன மட்டுமல்லாமல் சொல் இடையிலும் வரும்
மெய்களும் (அவை தம்மை மெய் அல்லது உயிர்மெய் தொடர்கையிலும்) அவ்
வழுநிலையுடனே தோற்றம் பெறுகின்றன. FreeSans பயன்பாட்டில் ஏற்படும்
வழுநிலைக்கு வேறு காரணங்கள் உள்ளன. உண்மையில் அவ் எழுத்துரு நாம்
பயன்பாடுகளுக்குப் புறக்கனணிக்க வேண்டிய ஒன்றே. காரணம் அதில் தமிழ்
வீச்சில் உகர மற்றும் ஊகார உயிர்மெய் அசைகளுக்கும் மற்றும் டி, டீ
களுக்கும் இன்றியமையாதனவான கட்டுவரியுருக்கள் (Ligatures) இல்லாமை.
எனவேதான் பின்வரும் எனது திரைவெட்டில் அவ் எழுத்துருவுடன் மட்டும்
லகரத்தின் உகர மற்றும் ஊகார உயிர்மெய்களும் வழுவாகக் கிரந்தக் குறிகளுடன்
தோற்றமாகின்றன.

http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-3_2-Lucid-2.png

மேலும் வழுவுடன் காணப்படும் ஏனைய ஆறு எழுத்துருக்கள் இடையேயும் ஒரு
வேறுபாட்டை அவதானிக்கலாம். அதானது விலகி நிற்கும் புள்ளி, TSCu
எழுத்துருக்கள் ஆயின் மேற்கோள் குறிகள் போலவும் உமர் அவர்கள் அளித்த
எழுத்துருக்களாயின் புள்ளியாகவே காணப்படுவதாகும். மேலும் வழுவுடன்
காணப்படும் அவ் ஆறு எழுத்துருக்கள் பயன்பாட்டிலும் மெய்களில் மட்டும்
புள்ளி விலகும் இவ் வழு மட்டும் ஏற்படுவதையும் ஏனைய 11 உயிர்மெய்
அசைகளில் எப் பிரச்சினைகளும் இல்லாதிருப்பதையும் நோக்க வேண்டும்.

Ubuntu -9.04 , Fedora-11 களில் ஓபன் ஆபிஸ்-3.0 மற்றும் Ubuntu-10.04 ,
Fedora-13 களில் உள்ள ஓபன் ஆபிஸ்-3.2 ஆகியனவற்றை சோதித்துள்ளேன் -
அவைகள் எல்லாவற்றிலும் ஓபன் ஆபிஸ் இரைட்டரில் இவ் வழுநிலை ஏற்படுகின்றன.
ஆனால் அவ் இயங்குத்தளங்களில் gedit, firefox, chromium-browser களில்
சோதிக்கையில் இவ் வழு ஏற்படுவதில்லை.

Ubuntu-9.04 க்கு முன்னைய வெளியீடுகளில் இவ் வழு இருந்திருக்கவில்லை என
ராம்கி அவர்கள் குறிப்பிட்டிருந்ததை உபுண்டு 8.04 (ஹார்டி) நிகழ்வட்டு
(Live CD) அமர்வில் (தமிழ் மொழிக்கான துணைப்பொதிகள் எல்லாம் நிறுவி )
சோதித்து பார்த்தேன். அவரது கூற்று சரியே. பின்வரும் திரைவெட்டுகளில்
பார்க்கவும்.

http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-2.4-Hardy-2.png
http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-2.4-Hardy-2.png

பழைய ஓபன் ஆபிசு 2.4 இல் ஏற்படாத வழு பின்னர் வெளியீடு 3 இல்
கண்டுள்ளோம். தொடர்பான எழுத்துருக்களில் மாற்றங்கள்
செய்விக்கப்பட்டிருக்கச் சாத்தியங்கள் இல்லை. ஆனால் ஓபன் ஆபிசு
பயன்படுத்தும் icu ( சரியாகக் கூறுவதானால் libicu) உரை தோற்றமாக்கி
பொறிக்கான ( text rendering engine) நிரல்களில் வெளியீடுகளுக்கு இடையே
மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் சாதரணமாக நடைபெறுபவனயே. எனவே வழுநிலை
ஏற்படுத்தக்கூடிய குறைபாடுள்ள ஒரு சில எழுத்துருகளின் பயன்பாட்டில்
வழுநிலை ஏற்படுவதை தவிர்க்கும் இயலுமை அம் மாற்றங்களினால்
அகன்றிருக்கலாம். இது எனது இயலுணர்வான (intuitive) ஊகமே.  இம் மடலை
வாசிப்பவர்களில் எழுத்துரு தொழில்னுட்ப வல்லுனர்கள் சரியான காரணியை
அறிவின் இம் மடலாற்றக் குழுவிற்கு எடுத்து விளக்கும்படிக் வேண்டுகிறேன்.

ஓபன் ஆபிசின் வெளியீடுகள் 2.4 க்கும் 3 க்கும் இடையே உள்ள libicu இன்
மூலங்களில் உள்ளடக்கபட்ட மாற்றங்களை அவதானித்து காரணியைக் கண்டறிய
அலசிப்பார்க்க உள்ளேன். காரணி அறிந்தாலும் இல்லாவிடினும் libicu இன்
மேலோடைக்கு வழு அறிக்கை ஒன்றை இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்ய
உத்தேசித்துள்ளேன்.

~சேது
2010/8/8 Tirumurti Vasudevan agnih...@gmail.com:
 TSCu- எழுத்துருக்கள் அனைத்திலும் இந்த பிரச்சினை உள்ளது. ஓபன் ஆபீஸ் 3.2 இலும்
 இதே பிரச்சினை இருக்கிறது.

 2010/8/8 thiru ramakrishnan thiru.ramakrish...@gmail.com

 TSCu-Times-இல் சிக்கல் உள்ளது. ஆனால், முந்தைய Ubuntu-வில் TSCu_Times
 பயன்படுத்தினேன். அப்போது இந்தச் சிக்கல் இல்லை.)


 இந்தச் சிக்கல் mozilla-thunderbird-இல் இல்லை! எனவே சிக்கலை விளக்குவதற்காக
 OpenOffice-இல் உருவாக்கிய மிகச்சிறிய pdf கோப்பு ஒன்றை இத்துடன்
 இணைத்துள்ளேன்.

 இது குறித்துத் தங்களுக்கு ஏதும் கருத்துகள்/சிந்தனைகள் தோன்றினால்
 அருள்கூர்ந்து தெரிவிக்கவும்.


 --
 

Re: [உபுண்டு_தமிழ ்]ஒருங்குற ி எழுத்துரு TSCu_Times சிக்கல்

2010-08-10 திரி கா . சேது | කා . සේතු | K . Sethu
எனது முன்னைய மடலில் ஒரு திருத்தம் :

நான் எழுதியது :

 Ubuntu-9.04 க்கு முன்னைய வெளியீடுகளில் இவ் வழு இருந்திருக்கவில்லை என
 ராம்கி அவர்கள் குறிப்பிட்டிருந்ததை  உபுண்டு 8.04 (ஹார்டி) நிகழ்வட்டு
 (Live CD) அமர்வில் (தமிழ் மொழிக்கான துணைப்பொதிகள் எல்லாம் நிறுவி )
 சோதித்து பார்த்தேன். அவரது கூற்று சரியே. பின்வரும் திரைவெட்டுகளில்
 பார்க்கவும்.

 http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-2.4-Hardy-2.png
 http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-2.4-Hardy-2.png

தவறுதலாக ஒரே திரைவெட்டுக்கே இரண்டு தொடுப்புகளையும் இட்டுள்ளேன்.
மற்றைய திரைவெட்டு இருக்கும் இடம் பின்வருமாறு

http://sites.google.com/site/upuntuviltamil/font/OOo-2.4-Hardy-1.png

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam