வணக்கம்

அம்மா என்றழைக்கும் குட்டிக் குழந்தை கணினியை எட்டிப் பார்த்து அதனை
தட்டிப் பார்க்க ஆசைப்பட்டால், இயலாதெனும்  சூழ்நிலையே இன்று நிலவுகிறது.
amma அம்மா ஆகாது. அது அவலம்.

இந்நிலை மாற தமிழ் தட்டச்சு முறைதனை ஒத்த விசைப் பலகைகள் சிலவற்றை
தயாரித்து தேர்வு செய்யப்பட்ட சில இடங்களில் நிறுவி பார்க்க வேண்டும்
எனவும் முடிவு கொண்டுள்ளோம்.

வசதிகுறைந்தவர்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும்
கணினி வகுப்பு மையங்கள், தேர்வு செய்யப்பட்டக் கல்விக் கூடங்கள்
உள்ளிட்டவை இவ்விடங்களுள் சில.  தாங்கள் இத்தகைய நிறுவனங்களோடு
தொடர்புடையோராக இருந்து இத்தகைய தேவை தங்களுக்கும் இருக்குமாயின்
தெரியப்படுத்தவும்.

இதனை தயாரிக்க நிறுவனங்களின் ஆதரவு தேவை. பயனுள்ள இம்முயற்சிக்கு NRCFOSS
போன்ற கட்டற்ற திறந்த மூல ஆதரவு ஸ்தாபனங்கள் குறைந்தபட்சம் நூறு
விசைப்பலகைக்கு ஆகும் செலவினை ஏற்றுக்கொள்ள முன்வரலாம். இப்படி முன்வரும்
நிறுவனங்களின் முத்திரை அவ்விசைப் பலகைகளில் பொறிக்கப்படலாம்.

முதல் இலக்கு ஐநூறு என வைத்துக் கொள்ளலாம். ஓரிரு வருடத்தில் நன்கு
பழக்கப்பட்ட பிறகு இன்னும் அதிக முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

தாங்கள் சார்ந்திருக்கும் தொழிற்கூடங்களிலும் இத்திட்டத்தை ஆதரிக்க
வேண்டுமாறு கோரிக்கை வைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

--
ஆமாச்சு
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க