​அன்புடையீர்,
                        விக்கிமீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக்
கூட்டுமுயற்சி திட்டத்தின் கீழ் பதிவேற்றப்பட்ட நூல்களில் தற்பொழுது 50க்கும்
அதிகமான நூல்கள் அண்மையில் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது.

இந்நூல்களின் விவரங்கள் இப்பகுப்பில் <https://ta.wikisource.org/s/8vyv>
பார்க்கலாம்.

மெய்ப்பு பார்க்கப்பட்ட இந்நூல்கள் ws-export
<https://wikisource.org/wiki/Wikisource:WSexport> என்ற கருவி மூலம் பல
வடிவங்களில் (epub, epub-3, htmlz, mobi, pdf, pdf-a4, pdf-a5, pdf-a6,
pdf-letter, rtf) இது வரை மொத்தமாக எட்டாயிரத்திற்கும் அதிகமாக
பதிவிறக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் நல்ல தமிழ் நூல்களை மக்கள் எளிமையாக
இலவசமாக படிக்க வசதி செய்துள்ளோம்.

இந்திய மொழிகளில் அதிகமாக இப்படி பதிவிறக்கம் செய்யப்படுவது தமிழ் மொழியில்
தான் அதிகம். முதலிடம் வகிக்கிறது.  மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது.

50 நூல்களுக்கே இவ்வளவு வரவேற்பு இருந்தால் இன்னும் மெய்ப்பு பார்க்க வேண்டிய
ஆயிரக்கணக்கான நூல்கள் மெய்ப்பு செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்.

நன்றி!

அன்புடன்,
ஜெ. பாலாஜி.

(பயனர்:Balajijagadesh)
_______________________________________________
Wikita-l mailing list
Wikita-l@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikita-l

அவர்களுக்கு பதிலளிக்க