** *1. 10989-ஐ 9ஆல் பெருக்கி வரும் எண்ணுக்கும், 21978-ஐ 4 ஆல் பெருக்கி வரும் எண்ணுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன?
2. ஒரு தொடர்வரிசையில் வரும் மூன்று எண்களின் பெருக்குத் தொகையும், அதே தொடர்வரிசையில் வரும் நான்கு எண்களின் பெருக்குத் தொகையும் சமமாக இருக்க வேண்டும். இயலுமா? 3. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை = 101; அவற்றிற்கிடையே உள்ள வித்தியாசம் 25. அந்த எண்கள் எவை? 4. ஒரு பள்ளியில் சில குழந்தைகள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று சாக்லெட்டுகள் வீதம் கொடுத்ததில் ஐந்து சாக்லெட்டுகள் மீதம் இருந்தன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு சாக்லெட்டுகள் வீதம் கொடுத்ததில் ஐந்து சாக்லெட்டுகள் பற்றாக்குறையாக இருந்தன. அப்படியென்றால் சாக்லெட்டுகள் எத்தனை, குழந்தைகள் எத்தனை? 5. 6729, 13458 இவற்றிற்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?* ** *விடைகள்*<javascript:showdv();> *1. 10989 x 9 = 98901 21978 x 4 = 87912 பெருக்கி வந்த எண்ணானது பெருக்கப்படும் முதல் எண்ணின் தலைகீழ் எண்ணாகும். 10989 ^ 98901 21978 ^ 87912 2. 2 x 3 x 4 x 5 = 120; 4 x 5 x 6 = 120. 3. இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 101, வித்தியாசம் 25 எனில் X + Y = 101 X - Y = 25 _____________ 2X = 126 X = 63 X + Y = 101 எனில் Y = 101 - X Y = 101 - 63 = 38 எனவே அந்த எண்கள் 63, 38 4. குழந்தைகள் = X சாக்லெட்டுகள் = Y Y = X(3) + 5; Y = X(4) - 5 எனவே 4X - 5 = 3X + 5 4X - 3X = 5 + 5 = 10 X = 10 Y = X(3) + 5 Y = 10(3) + 5 = 35 எனவே குழந்தைகள் = 10 சாக்லெட்டுகள் = 35 5. 6729ன் இரு மடங்கே 13458 ஆகும். இரண்டு எண்களிலும் 1 முதல் 9 வரையிலான எண்கள் வரிசை மாறி இடம்பெற்றுள்ளன.* *அரவிந்த்* *-- cnu.pne To react is easy than to act srinivasan ms pune * --~--~---------~--~----~------------~-------~--~----~ You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To post to this group, send email to [email protected] To unsubscribe from this group, send email to [EMAIL PROTECTED] For more options, visit this group at http://groups.google.com/group/thatha_patty?hl=en -~----------~----~----~----~------~----~------~--~---
