Dear Shri M.S. Srinivasan,
Excellent.I got an answer for my long cherished query
Thanks.
T.Ramanujam
2008/10/27 Srinivasan MS <[EMAIL PROTECTED]>

>
> *பெருமாளின் அம்மாள்
> *
> *தமிழடியார் சீர்பரவுவார்*
> *டாக்டர் எஸ்.ஜெயபாரதி
> *
>
>
>
>  *    வைணவர்களுக்கு நடாதூர் அம்மாள் என்ற பெயர் மிகவும் பரிச்சயமானது.
> 'அம்மாள்' என்றதும் யாரோ பொம்பளையாக்கும் என்று நினைத்துவிடவேண்டாம்.
>
>     அவருடைய இயற்பெயர் வரதகுரு. ஊர் காஞ்சி. அவர் வாழ்ந்த காலம் துருக்கர்கள்
> டில்லியிலிருந்து தென்னாடு வருவதற்குச் சற்று முன்னர்.
>
>     காஞ்சியில் எங்களாழ்வான் என்றொரு வைணவப்பேரறிஞர் இருந்தார்.
>     வரதகுருவின் தந்தை அவரை எங்களாழ்வானிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்டறிவதற்காக
> அனுப்பினார்.
>     வாசல் கதவைத திறந்திருக்கிறார். அரவம் கேட்டு எங்களாழ்வான் "யார்ராது?"
> என்று கேட்டிருக்கிறார்.
>     ஏற்கனவே நன்கு பரிச்சயமான ஆளல்லவா. ஆகவே "நான் தான் வந்திருக்கிறேன்"
> என்றார். குரலை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார் என்ற எண்ணம்.
>     "ஓஹோ. அப்படியா? நான் செத்த பிறகு வந்து பார்", என்று சொல்லிவிட்டார்.
>
>     அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய வரதகுரு தம் தந்தையாரிடம் விஷயத்தைச
> சொன்னார்.
>     அவர் சிரித்துக்கொண்டே, "நான் என்னும் தன்மையில்லாமல் வந்து பார்க்கச்
> சொல்கிறார்.  அது உண்மையிலேயே  குருவிடம் ஸ்ரீபாஷ்யம் போன்ற ஒன்றைக் கேட்டுப்
> புரிந்து உணர்வதற்குத் தடையாக இருக்கும்"., என்றார்.
>
>     வரதர் மீண்டும் சென்றார்.
>     ஆழ்வான் மீண்டும் "யார்ராவன்?"
>
>     இம்முறை வரதர் மிகவும் பவ்வியமாக, "அடியேன் தாஸானுதாஸன் ஸ்ரீமத்
> ராமானுஜதாஸன்",  என்று சொல்லி நெடுஞ்சாங்கிடையாக விழுந்து வணங்கினார்.
>
>     பாடம் ஒழுங்காக நடந்தது. தெளிவாகக் கற்றுக்கொண்டார்.
>     சரி.
>
>     ஆண்பிள்ளையாகிய இவரை ஏன் 'நடாதூர் அம்மாள'் என்கிறார்கள்? என்று இன்னும்
> நீங்கள் கேட்கவில்லை.
>     வரதர் பெருமாளுக்குப் பால் நைவேத்தியம் வைப்பார். நன்றாகக் காய்ச்சி வற்ற
> வைத்து எடுத்த பாலைத்தான் வைப்பார். சூடு தணிந்திருக்கிறதா என்று பாலுக்குள்
> விரலை விட்டுப ்பார்ப்பார்.
>
>     இதைப் பெருமாள் கவனித்து வந்தார்.
>
>     ஒருநாள், "ஏனப்பு! பெத்த பிள்ளைக்குத் தாயார் பால் காய்ச்சி ஊட்டி
> விடும்போது சூடு தணிஞ்சாச்சா என்று பார்ப்பதுண்டு. நீயும் பாக்கிறியேப்பா? நீ
> என்ன எங்க அம்மாளோ?"
>
>     பெருமாளே அவரை 'அம்மாள்' என்று குறிப்பிட்டதால் அவரை 'அம்மாள்' என்றே
> அனைவரும் அழைத்தனர்.
>
> **    அவர் கதாகலட்சேபம் செய்து வந்தார்.  மிக ஆழமான கருத்துக்களைக் கொண்டு
> மிக விரிவாக அமைந்திருந்தது. அந்தக் காலட்சேபத்துக்கு ஸ்ரீபராச பட்டர்
> என்றொருவர் வருவார். அவர் மிகச் சாதாரணர். எளிமையானவர்.
>
>     ஒருநாள் அவர் காலட்சேபத்துக்கு வரவில்லை.
>
>     வரதர் பேசாமலிருந்தார்.
>     மற்றவர்கள் காலட்சேபத்தைத் தொடருமாறு வற்புறுத்தினர்.
>     ஆனாலும் பட்டருக்காகக் காத்திருந்தார்.
>
>     பட்டர் வந்ததும் அவரிடம் "நீ இதுவரை என்னிடம் கேட்டதையெல்லாம் இவர்களிடம்
> சொல்", என்று ஆணையிட்டார்.
>
>     அவ்வளவுதான்.
>     அதுவரை நடந்திருந்த காலட்சேபம் அவ்வளவையும் அவர் திருப்பிச ்சொன்னார்.
>
>     மகிழ்வுற்ற வரதர் ஸ்ரீபட்டர் சொன்னதையெல்லாம் அப்படியே எழுதிவித்து அதற்கு
> அருமையானதொரு பெயரையும் இட்டார்.
>
> * *    'சுருதப பிரகாசிகை'.
> *
>
> *    'சுருத' என்னும் சொல் அதெல்லாம் 'கேட்கப்பட்ட சமாச்சாரம'் என்பதைக்
> காட்டி விடுகிறது அல்லவா?
>
>     வரதர் திருநாடு அடைந்தபின்னர்(காலமாகியபின்னர்) சிலகாலம் கழித்து
> துருக்கர் படையெடுப்பு நடந்தது.
>
> **    அப்போது ஸ்ரீபட்டர் தம்முடைய இரண்டு பிள்ளைகளையும்  சுருதப
> ்பிரகாசிகையையும் பத்திரமாக இன்னொருவரிடம் ஒப்படைத்து தப்பிச்செல்லச
> ்செய்தார்.
>
>     அந்த நூல் துருக்க வெள்ளத்திலும் தப்பி காலவெள்ளத்திலும் நீந்தி
> வந்துவிட்டது.
> *
>
>
> *http://www.visvacomplex.com/The_AmmAL_of_PerumAL.html
> cnu.pne
>
> *
> >
>

--~--~---------~--~----~------------~-------~--~----~
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To post to this group, send email to [email protected]
To unsubscribe from this group, send email to [EMAIL PROTECTED]
For more options, visit this group at 
http://groups.google.com/group/thatha_patty?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

Reply via email to