பீமரத சாந்தி ! <http://santhanamk.blogspot.com/2008/07/blog-post_8552.html>
*எல்லா மனிதர்களுக்கும் அவர்களது எழுபதாவது** **வயதில் ஒரு கண்டம் உள்ளதாக ஒரு ஐதீகம் உள்ளது. அதற்காக ஒரு சாந்தி செய்தால்**, **ஆயுள்** **விருத்தியாகும். இந்த சாந்திக்குத் தான் **'**பீம ரதசாந்தி**' **என்பது பெயர்.** * * * *பலர் தம் அறுபது வயதில் சாந்தி அல்லது பரிகாரம் செய்து கொள்வது வழக்கம். அதுதான்** **சஷ்டி அப்த பூர்த்தி.** 70 **வயதில் செய்து கொள்வது பீமரத சாந்தி என்றும்**, 80 **வயதில்** **சதாபிஷேகம் என்றும்**, **பின்** 100 **வயதில் கனகாபிஷேகம் என்றும் சொல்கின்றனர்.** *** * **இந்த மகிழ்ச்சிகரமான விழாவினை அவர்களுடைய சந்ததியினர் நடத்தி** **மகிழ்கின்றனர். இதைத் திருக்கடையூரில் செய்து கொள்வது ஒரு தனி சிறப்புதான்.** **ஏனென்றால் அங்குதான் **ஸ்ரீ மார்க்கண்டேயர் "என்றும் ** **பதினாறு" என்ற சிரஞ்சீவி வரத்தை ** **சிவனிடமிருந்து பெற்றார்*** *சுமார் பத்து திருமணங்கள் ஒரே சமயத்தில் அங்கு நடக்கின்றன. கோயில் மிகப் பெரியதாக** **இருப்பதால் ஒவ்வொரு திருமணக் குழுவும் தனித்தனி இடங்களைப் பெற முடிகிறது*** *திருக்கடையூர் சாந்தி வைபவங்கள்*** *இனி அங்கு நடக்கும் சாந்தி வைபவங்களைப் பற்றிப் பார்ப்போம். காலை **5.30**க்கு ** **பூஜையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. **அமிர்தகடேஸ்வரர் கோவில்**, ** திருக்கடையூர்** **கோயில் வாசலில் மாலையும் கழுத்துமாகத் தம்பதிகள் தம்** **உறவினர்களுடன் நின்றார்கள். அந்த நேரத்தில் பசு ஒன்றை அதன் கன்றுடன் அழைத்து வர**, **குருக்கள் கோமாதா பூஜை நடத்தி வைத்தார். எல்லோரையும் பசுவிற்கு நெற்றியில் மஞ்சள்** **குங்குமம் இட்டு பின் மூன்று முறை வலம் வரச் சொல்ல**, **நாங்களும் அங்ஙனமே செய்தோம்.** **பசுவிற்கு வாழைப்பழம் கொடுக்கப்பட்டது.** **பின்னர்**, **நாதஸ்வரம் முழங்க** **மேளதாளத்துடன் கோயிலினுள் வலது கால் வைத்து**, **என் தோழியும் தன் கணவருடன் நுழைந்தாள்.** **அங்கு யானையை அழைத்து வந்து குருக்கள் கஜபூஜை செய்தார். யானைக்கு சாப்பிட தேங்காய்**, **வாழைப்பழம் கொடுத்தார்கள். அது தன் தும்பிக்கையினால் மணமக்களின் தலையைத் தொட்டு** ** ஆசீர்வதித்தது.** **தம்பதிகள் புரோகிதர் அமைத்திருந்த மணமேடைக்குச் சென்றனர்.** **அங்கு கோலம் போட்ட இரு மனைப்பலகைகளில் அமர்ந்தனர். பெரிய வெள்ளிக் குடத்தில் நூல்** **சுற்றி அதில் பல புண்ணிய தீர்த்தங்கள் நிரப்பி வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டது.** **பின் சிவ பூஜையில் பதினோரு தடவை ருத்ரம் சொல்லப்படுகிறது. எல்லோருக்கும் இது போல்** **விவரமாகச் செய்யப்படுகிறதா அல்லது பணம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறதா என்று** **தெரியவில்லை. பின் தம்பதிகள் வேறு இடத்தில் அமர்ந்தனர். கலச நீரை ஒரு சல்லடை வழியாக** **தம்பதிகள் தலையில் எல்லா உறவினரும் விட்டனர். "கௌரி கல்யாணம் வைபோகமே" என்று சிலர்** **பாடினார்கள். நானும் அதில் சேர்ந்து கொண்டேன்.** **பின் அவர்கள் புதுப் புடவை**, **பட்டு வேஷ்டியுடன் மீண்டும் பழைய இடத்தில் வந்து அமர**, **திருமணத்தில் நடக்கும் தாலி** **கட்டும் வைபவம் அப்படியே நடக்கிறது. கணவர் திரும்ப திருமாங்கல்யம் கட்ட**, **பின்** **நாத்தனார் தாலியில் மற்ற முடிச்சுகள் போட லாலி பாட்டு நாதஸ்வரத்தில் இனிமையாக** **வந்தது. ** **கல்யாணத்தில் நடக்கும் எல்லா சம்பிரதாயங்களும் அவரவர் விருப்பப்படி** **நடத்தி வைக்கப்படுகின்றன. பேரன் பேத்திகளுடன் கூடிய இந்த வைபவம் நிச்சயம் வயதான** **தம்பதிகளுக்கு தங்கள் இனிமையான நினைவாக அமையும். இவை எல்லாம் முடிந்த பிறகு** **எல்லோருக்கும் அன்பளிப்பு பரிமாறல் நடந்தது. பின் தம்பதிகள் உள்ளே சிவனைத்** **தரிசித்து அபிஷேகம் செய்தனர். அதே போல் அம்பாளுக்கும் விமரிசையாகச் செய்தனர். பின்** **வாத்தியார் சம்பாவனை நடக்கிறது. மொத்தத்தில் பணமும் நிறைய செலவாகிறது. பின் என்ன**? **திருக்கடையூர் என்றால் சும்மாவா**? **மார்க்கண்டேயர் உயிரைக் காத்த இடம் அல்லவா**? **இங்கு ஆயுள் விருத்தி ஹோமமும்**, **மிருத்துஞ்சய ஹோமமும் செய்கிறார்கள். திரு ** **அப்பர்**, **சுந்தரர்**, **திருஞானசம்பந்தர் போன்றோர் இங்கு வந்து ஈஸ்வரனைக் குறித்து பாடி** **உள்ளார்கள். குங்கலிய நாயனார் அவதரித்துத் தொண்டாற்றிய இடமும் இதுவே. அவர் முக்தி** **அடைந்த ஸ்தலமும் இதுவே. இத்தலத்தின் வரலாறு குறித்து அடுத்தவாரம் காண்போம்*** * * -- cnu.pne To react is easy than to act srinivasan ms pune --~--~---------~--~----~------------~-------~--~----~ You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To post to this group, send email to [email protected] To unsubscribe from this group, send email to [EMAIL PROTECTED] For more options, visit this group at http://groups.google.com/group/thatha_patty?hl=en -~----------~----~----~----~------~----~------~--~---
