Nalla sindhanai. Arumaiyaha irundhathu.
http://hindumarriages.blogspot.com/2008/08/madurai-meenakshi-thirukkalyanam.html

On Feb 8, 2:38 pm, Srinivasan MS <[email protected]> wrote:
> *இராமலிங்க அடியார் தைப்பூசத்தன்ரு ஜோதியில் கலந்தார்*
> **
>
> *பாரத நாட்டில் வாழ்ந்த சாது, சந்யாசிகளின், இறை அடியார்களின் வாழ்க்கையைப்
> படித்தால் பல விநோதமான, விசித்திரமான செய்திகளைக் காணலாம். குறிப்பாக ஒவ்வொரு
> அடியாரும் எப்படி இறந்தார் என்று படித்தால் அவர்கள் கூறுவது உண்மையா? என்று
> எண்ணத் தோன்றும். இதைப் படிக்கும் "பகுத்தறிவு" வாதிகள் இதைத் தீ விபத்து
> என்றும், தீ வைத்துக் கொலை என்றும் புதிய வியாக்கியானமும் கூட
> எழுதிவிட்டார்கள்!
> *
>
> *ஆனால் மேலை நாட்டுப் பத்திரிக்கைகளில், குறிப்பாக புலன் கடந்த அறிவை விளக்கும்
>
> (PARANORMAL OR EXTRA SENSORY PERCEPTION) பத்திரிக்கைகளில் இது போன்ற பல
> அதிசயச் செய்திகள் வருகின்றன. சில மனிதர்கள் திடீரென்று ஒளிப் பிழம்பாகித்
> தீயில் மறைந்து விடுவதாகவும் அப்படி அவர்கள் ஜோதியில் மறையும்போது அருகில் உள்ள
>
> எந்தப் பொருளும் கருகுவதோ, தீப்பிடிப்பதோ இல்லை என்றும் எழுதியுள்ளனர். இந்த
> நிகழ்ச்சிக்குத் 'தானாக நிகழும் எரிவு' SPONTANEOUS COMBUSTION) என்று பெயர்.
> *
>
> *அமெரிக்காவில் ஒரு கல்லூரி மாணவன் பல்கலைக்கழக வளாகத்திற்குள்
> மாடிப்படியிலிருந்து இறங்குகையில் திடீரென்று எரிந்து மறைந்து விட்டான்.
> அவனுடைய உடைகள் எல்லாம் (TROUSERS AND SHIRTS) கருகாமல் அப்படியே இருந்தன! இது
> பத்திரிக்கைகளில் பரபரப்பான தலைப்புச் செய்திகளையும் ஆய்வுக் கட்டுரகளையும்
> உண்டாக்கின. இதைத் தானாக எரிவு நிகழ்ச்சி SPONTANEOUS COMBUSTION என்றும்
> விளக்கினர்.
> *
>
> *பாரதத்தில் ஆதி சங்கரர் குகைக்குள் சென்று மறந்தார். (சர்வக்ஞபீடம் ஏறி
> மறைந்தது), இராமலிங்க வள்ளலார் ஒரு அறைக்குள் சென்று ஜோதி வடிவாகப்
> போனார், ஆண்டாள்
> ஸ்ரீ ரங்கநாதருடன் ஐக்கியமாகி மறைந்தார். ஞானசம்பந்தர் தனது சீடர்களுடன்
> திருமணப் பந்தலில் (இதைப் பகுத்தறிவு வாதிகள் தீ விபத்து என்று வருணிப்பர்)
> ஜோதியில் ஐக்கியமானார்.
> *
>
> *மாணிக்கவாசகருடன் இருந்த அடியார்கள் அவரை மட்டும் விட்டு ஜோதிக்குள்
> புகுந்தனர். பின்னர் மாணிக்கவாசகரும் ஜோதியில் ஐக்கியமானார். நந்தனார் மற்றும்
> திருப்பாணாழ்வார் ஆகியோர் ஜோதியில் கலந்தார்கள். இவை எல்லாவற்றையும்
> SPONTANEOUS
> COMBUSTION என்று கூறலாம்.
> *
>
> *தானாக எரியும் நிகழ்ச்சியில் சில அதிசய ஒற்றுமைகளையும் ஆராய்ச்சியாளர்கள்
> கண்டுள்ளனர்.
> *
>
> *(1) இந்தத் தீ அவர்களின் உடலிலிருந்து உற்பத்தியாகிறது.
> *
>
> *(2) அருகில் எளிதில் தீப்பிடிக்கும் பெட்ரோல், பஞ்சு ஆகியன இருந்தாலும் அவைகளை
>
> எரிப்பதில்லை.
> *
>
> *(3) பெரும்பாலான நிகழ்ச்சிகளில் உடை முதலியன கூடக் கருகாமல் அப்படியே
> குளிக்கும் முன் 'கழற்றி வைத்த' உடைகள் போல உள்ளன.
> *
>
> * இதுவரை நாம் அறிந்த விஞ்ஞானத்தில் நமது உடல் இவ்வளவு வெப்பத்தை உண்டாக்க
> முடியாது என்றே முடிவு கிடத்துள்ளது. ஆனால் கோடியில் ஓர் அபூர்வ நிகழ்ச்சி
> இப்படி நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு விஞ்ஞானத்தால் விடை கூற
> முடியவில்லை. ஆனால் இந்தியாவில் யோக சாஸ்திரம் இதற்கு விளக்கம் கூறும்.
> மனிதனின் மனோசக்தியை முழு அளவுக்குப் பயன்படுத்த அறிந்தவர்கள் ஆஷ்டமா சித்திகளை
>
> (எண்வகை சக்திகளை) பெறுவர். இதை வைத்துப் பல அதிசயங்களைச் செய்யலாம்.
> *
>
> * கொள்கையளவில் பார்த்தால் ஒளி-ஒலி ஆகிய அனைத்தும் மின்காந்த ஆலைகளின் (ELECTRO
>
> MAGNETIC SPECTURUM) வெவ்வேறு வடிவங்கள்தான். அணுகுண்டு வெடிப்பதால்
> வெளிப்படும் காமா கதிர்கள் GAMA RAYS), மருத்துவமனையில் உடலின்
> உள்ளுறுப்புகளைப் படம் பிடிக்க உதவும் எக்ஸ் கதிர்கள் (X-RAYS), மேலைநாடுகளில்
> வெள்ளைக்காரர்களுக்குத் தோல் புற்றுநோயை உண்டாக்கும் புற ஊதாக் கதிர்கள் (ULTRA
>
> VIOLET RAYS), பாம்பு முதலிய பிராணிகள் இரவு நேரத்தில் இரை தேட உதவும் (நாக
> ரத்னம்) அகச்சிவப்புக் கதிர்கள் (INFRA RED RAYS), வீட்டில் சமைக்க உதவும்
> மைக்ரோ-வேவ் ஓவனில் வெளியாகும் நுண் அலைகள் (MICRO WAVES), ரேடியோ கேட்க உதவும்
>
> ஒலி அலைகள் (RADIO WAVES), நாம் எல்லாப் பொருட்களயும் காண உதவும் ஒளி
> அலைகள் (LIGHT
> WAVES) ஆகியன எல்லாம் ஒரே பட்டையின் வெவ்வேறு பகுதிகளே.
> *
>
> *இதில் 'காணக்கூடிய' பகுதி ஒளி அலைகள் மட்டுமே. மைக்ரோவேவ் என்னும் நுண்ணலைகளப்
>
> பயன்படுத்தி அதிர்வுகள் மூலம் வெப்பத்தையும், தீயையும் உண்டாக்க முடியும்
> என்பதை சமையலறயிலுள்ள பெண்கள் நன்கு அறிவார்கள்.
> *
>
> *இது போல உடலிலும் எண்ண அலைகள் மூலமோ, யோக சக்தி மூலமோ வெப்பத்தையும்,
> ஒளியையும்
> உருவாக்க முடியுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் உடல் அல்லது எண்ணத்தின்
> சக்தி மூலம் இப்படி வெப்பத்தை உண்டாக்க விஞ்ஞானத்தில் ஆதாரம் இல்லை. ஆகையால்
> இதை அபூர்வ நிகழ்ச்சி என்று பரப்பி வருகின்றனர்.
> *
>
> * தீயை உண்டாக்கும் ராகம்!
> *
>
> *அமிர்த வர்ஷனி என்ற ராகத்தைப் பாடினால் மழை பெய்யும்! இதே போல மேக ரஞ்சனி
> ராகமும் மழையைப் பெய்விக்கும். நாகவரானி அல்லது**
>
> பாரத நாட்டில் வாழ்ந்த சாது, சந்யாசிகளின், இறை அடியார்களின் வாழ்க்கையைப்
> படித்தால் பல விநோதமான, விசித்திரமான செய்திகளைக் காணலாம். குறிப்பாக ஒவ்வொரு
> அடியாரும் எப்படி இறந்தார் என்று படித்தால் அவர்கள் கூறுவது உண்மையா? என்று
> எண்ணத் தோன்றும். இதைப் படிக்கும் "பகுத்தறிவு" வாதிகள் இதைத் தீ விபத்து
> என்றும், தீ வைத்துக் கொலை என்றும் புதிய வியாக்கியானமும் கூட
> எழுதிவிட்டார்கள்!
>
> ஆனால் மேலை நாட்டுப் பத்திரிக்கைகளில், குறிப்பாக புலன் கடந்த அறிவை விளக்கும்
> (PARANORMAL OR EXTRA SENSORY PERCEPTION) பத்திரிக்கைகளில் இது போன்ற பல
> அதிசயச் செய்திகள் வருகின்றன. சில மனிதர்கள் திடீரென்று ஒளிப் பிழம்பாகித்
> தீயில் மறைந்து விடுவதாகவும் அப்படி அவர்கள் ஜோதியில் மறையும்போது அருகில் உள்ள
>
> எந்தப் பொருளும் கருகுவதோ, தீப்பிடிப்பதோ இல்லை என்றும் எழுதியுள்ளனர். இந்த
> நிகழ்ச்சிக்குத் 'தானாக நிகழும் எரிவு' SPONTANEOUS COMBUSTION) என்று பெயர்.
>
> அமெரிக்காவில் ஒரு கல்லூரி மாணவன் பல்கலைக்கழக வளாகத்திற்குள்
> மாடிப்படியிலிருந்து இறங்குகையில் திடீரென்று எரிந்து மறைந்து விட்டான்.
> அவனுடைய உடைகள் எல்லாம் (TROUSERS AND SHIRTS) கருகாமல் அப்படியே இருந்தன! இது
> பத்திரிக்கைகளில் பரபரப்பான தலைப்புச் செய்திகளையும் ஆய்வுக் கட்டுரகளையும்
> உண்டாக்கின. இதைத் தானாக எரிவு நிகழ்ச்சி SPONTANEOUS COMBUSTION என்றும்
> விளக்கினர்.
>
> பாரதத்தில் ஆதி சங்கரர் குகைக்குள் சென்று மறந்தார். (சர்வக்ஞபீடம் ஏறி
> மறைந்தது), இராமலிங்க வள்ளலார் ஒரு அறைக்குள் சென்று ஜோதி வடிவாகப்
> போனார், ஆண்டாள்
> ஸ்ரீ ரங்கநாதருடன் ஐக்கியமாகி மறைந்தார். ஞானசம்பந்தர் தனது சீடர்களுடன்
> திருமணப் பந்தலில் (இதைப் பகுத்தறிவு வாதிகள் தீ விபத்து என்று வருணிப்பர்)
> ஜோதியில் ஐக்கியமானார்.
>
> மாணிக்கவாசகருடன் இருந்த அடியார்கள் அவரை மட்டும் விட்டு ஜோதிக்குள்
> புகுந்தனர். பின்னர் மாணிக்கவாசகரும் ஜோதியில் ஐக்கியமானார். நந்தனார் மற்றும்
> திருப்பாணாழ்வார் ஆகியோர் ஜோதியில் கலந்தார்கள். இவை எல்லாவற்றையும்
> SPONTANEOUS
> COMBUSTION என்று கூறலாம்.
>
> தானாக எரியும் நிகழ்ச்சியில் சில அதிசய ஒற்றுமைகளையும் ஆராய்ச்சியாளர்கள்
> கண்டுள்ளனர்.
>
> (1) இந்தத் தீ அவர்களின் உடலிலிருந்து உற்பத்தியாகிறது.
>
> (2) அருகில் எளிதில் தீப்பிடிக்கும் பெட்ரோல், பஞ்சு ஆகியன இருந்தாலும் அவைகளை
> எரிப்பதில்லை.
>
> (3) பெரும்பாலான நிகழ்ச்சிகளில் உடை முதலியன கூடக் கருகாமல் அப்படியே
> குளிக்கும் முன் 'கழற்றி வைத்த' உடைகள் போல உள்ளன.
>
>  இதுவரை நாம் அறிந்த விஞ்ஞானத்தில் நமது உடல் இவ்வளவு வெப்பத்தை உண்டாக்க
> முடியாது என்றே முடிவு கிடத்துள்ளது. ஆனால் கோடியில் ஓர் அபூர்வ நிகழ்ச்சி
> இப்படி நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு விஞ்ஞானத்தால் விடை கூற
> முடியவில்லை. ஆனால் இந்தியாவில் யோக சாஸ்திரம் இதற்கு விளக்கம் கூறும்.
> மனிதனின் மனோசக்தியை முழு அளவுக்குப் பயன்படுத்த அறிந்தவர்கள் ஆஷ்டமா சித்திகளை
>
> (எண்வகை சக்திகளை) பெறுவர். இதை வைத்துப் பல அதிசயங்களைச் செய்யலாம்.
>
>  கொள்கையளவில் பார்த்தால் ஒளி-ஒலி ஆகிய அனைத்தும் மின்காந்த ஆலைகளின் (ELECTRO
> MAGNETIC SPECTURUM) வெவ்வேறு வடிவங்கள்தான். அணுகுண்டு வெடிப்பதால்
> வெளிப்படும் காமா கதிர்கள் GAMA RAYS), மருத்துவமனையில் உடலின்
> உள்ளுறுப்புகளைப் படம் பிடிக்க உதவும் எக்ஸ் கதிர்கள் (X-RAYS), மேலைநாடுகளில்
> வெள்ளைக்காரர்களுக்குத் தோல் புற்றுநோயை உண்டாக்கும் புற ஊதாக் கதிர்கள் (ULTRA
>
> VIOLET RAYS), பாம்பு முதலிய பிராணிகள் இரவு நேரத்தில் இரை தேட உதவும் (நாக
> ரத்னம்) அகச்சிவப்புக் கதிர்கள் (INFRA RED RAYS), வீட்டில் சமைக்க உதவும்
> மைக்ரோ-வேவ் ஓவனில் வெளியாகும் நுண் அலைகள் (MICRO WAVES), ரேடியோ கேட்க உதவும்
>
> ஒலி அலைகள் (RADIO WAVES), நாம் எல்லாப் பொருட்களயும் காண உதவும் ஒளி
> அலைகள் (LIGHT
> WAVES) ஆகியன எல்லாம் ஒரே பட்டையின் வெவ்வேறு பகுதிகளே.
>
> இதில் 'காணக்கூடிய' பகுதி ஒளி அலைகள் மட்டுமே. மைக்ரோவேவ் என்னும் நுண்ணலைகளப்
> பயன்படுத்தி அதிர்வுகள் மூலம் வெப்பத்தையும், தீயையும் உண்டாக்க முடியும்
> என்பதை சமையலறயிலுள்ள பெண்கள் நன்கு அறிவார்கள்.
>
> இது போல உடலிலும் எண்ண அலைகள் மூலமோ, யோக சக்தி மூலமோ வெப்பத்தையும், ஒளியையும்
>
> உருவாக்க முடியுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் உடல் அல்லது எண்ணத்தின்
> சக்தி மூலம் இப்படி வெப்பத்தை உண்டாக்க விஞ்ஞானத்தில் ஆதாரம் இல்லை. ஆகையால்
> இதை அபூர்வ நிகழ்ச்சி என்று பரப்பி வருகின்றனர்.
>
>  தீயை உண்டாக்கும் ராகம்!
>
> அமிர்த வர்ஷனி என்ற ராகத்தைப் பாடினால் மழை பெய்யும்! இதே போல மேக ரஞ்சனி
> ராகமும் மழையைப் பெய்விக்கும். நாகவரானி அல்லது புன்னாகவராளி பாம்புகளை
> வசப்படுத்தும். தீபக் என்ற ராகத்தைப் பாடினால் தீ உண்டாகும். மொகலாய
> சக்ரவர்த்தி அக்பரின் அரண்மனையில் கோபால் நாயக் என்று ஒரு பாடகர் இருந்தார்.
> ஒரு நாள் அவரிடம் அக்பர் ஒரு கேள்வி கேட்டார். இராகங்களுக்கு அபூர்வ சக்தி
> உண்டா? குறிப்பாக தீபக் ராகம் பாடினால் தீப்பற்றி எரியும் என்பது உண்மயா? என்று
>
> கேட்டார்.
>
> கோபால் நாயக், ''ஆமாம், உண்மைதான். இராகங்களுக்கு அற்புத சக்தி உண்டு''
> என்றார்.
> ''அப்படியா? தீபக் ராகம் பாடுங்கள். தீ உண்டாகிறதா என்று பார்ப்போம்'' என்றார்
> அக்பர்.
>
> ''அரசனே, நான் தீபக் ராகத்தைப் பாடுவதற்குத் தயார் தான். ஆனால் ராக ஆலாபனையில்
> உச்ச கட்டத்தை அடையும்போது என்னைத் தீ விழுங்கிவிடும்'' என்றார் கோபால் நாயக்.
>
> ''அப்படியானால் தகுந்த பாகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவிட்டுப் பாடலாம். நீங்கள்
> யமுனை நதியில் கழுத்தளவுத் தண்ணீரில் நின்று பாடுங்கள். எந்தத் தீயும் உம்மை
> நீருக்குள் எரிக்க முடியாது என்றார் அக்பர்.
>
> அக்பரின் பாகாப்பு உத்தி பலிக்குமா என்பதில் கோபால் நாயக்கிற்கு சந்தேகம் தான்.
>
> ஆயினும் மன்னனின் கட்டளை ஆயிற்றே. மறுக்க முடியுமா? யமுனை நதியில் கழுத்தளவு
> நீரில் நின்று பாடினார். ராகத்தை மனமுருகிப் பாடுகையில் திடீரென்று அவர் உடல்
> முழுவதும் தீப்பிழம்பு பரவியது. சிறிது நேரத்தில் சாம்பலான அவரது உடலை யமுனை
> நதி நீர் அடித்துச் சென்றது.
>
> இந்த நிகழ்ச்சியை ஆதிசங்கரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், நந்தனார், ஆண்டாள்,
>
> திருப்பாணாழ்வார், வள்ளலார், கண்ணகி ஆகியோர்களின் வாழ்க்கை வரலாறுகளுடன்
> ஒப்பிடுகையில் சிலவகை ஒலி அதிர்வுகளால் தீயை உண்டாக்க முடியும் என்றே நம்ப
> வேண்டியுள்ளது.
>
> மேலும் இந்தியாவிலுள்ள எல்லா யோகிகளும் இப்படித் தீப்பிழம்பானதாக, ஜோதி
> வடிவமானதாக மத நூல்கள் கூறவில்லை. ஆகவே மேற்கூறிய சிலர் வாழ்வில் மட்டுமே
> இப்படி நடந்தது என்பது உண்மையாகவே தோன்றுகிறது.
>
> பதிற்றுப் பத்து என்னும் நூலில் பாலக் கௌதமனார் என்ற புலவர் சேர மன்னனிடம்
> வேண்டியது என்ன தெரியுமா? தானும் தனது மனைவியும் உடலுடன், உயிருடன் மேலுலகம்
> செல்ல வேண்டுமென்று வேண்டினார். உடனே பல்யானை செல்கெழு குட்டுவன் என்ற சேர
> மன்னர் வேள்வி செய்தார். பத்தாவது வேள்வி செய்தவுடன் பாலக் கௌதமனார் என்ற
> புலவரும் அவருடைய மனைவியும் மாயமாய் மறைந்து விட்டார்கள் என்று சங்கத் தமிழ்
> கூறுகிறது.
>
> கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?
>
> தமிழ் இலக்கியத்திலும் கூட மனிதர்கள் தீயை உண்டாக்கிய நிகழ்ச்சி பதிவு
> செய்யப்பட்டுள்ளது. மதுரையிலுள்ள பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், கோவலனைக்
> கொன்றதால் கோபமடைந்த அவனது மனைவி பத்தினித் தெய்வம் கண்ணகி மதுரையை எரித்தாள்.
> பசுக்கள், பிராமணர்கள், பத்தினிப் பெண்கள், நோயாளிகள், நல்லவர்கள் போன்றோரை
> விலக்கித் தீயோர் வாழும் பகுதிகளைச் சூழும்படி அக்னி தேவனுக்குக் கண்ணகி என்ற
> இளம்பெண் கட்டளையிட்டுத் தனது ஒரு முலையைத் திருகி எறிந்தாள். மதுரையே எரிந்து
> சாம்பலானது!
>
> மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமானின் மனதில் காம எண்ணத்தை உண்டாக்க வந்த
> மன்மதனை, சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்ததாக வடமொழி, தமிழ்மொழி
> இலக்கியங்கள் கூறுகின்றன.
>
> சந்யாசியான ஆதிசங்கரர், பட்டிணத்தார் போன்றோர் இறந்துபோன தனது தாயாரைத் தகனம்
> ஊட்ட இப்படி இயற்கை முறையில் தீயை உண்டாக்கியதாகவும் வரலாறு கூறுகிறது.
>
> இடமுலை கையால் திருகி மதுரை
>
> வலமுறை மும்முறை வாரா அலமந்து
>
> மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
>
> விட்டாள் எறிந்தாள் விளங்கிழையாள்..
>
> (இடது முலையைக் கையால் திருகி, மதுரையை 3 முறை வலம் வந்து முலையை
> விட்டெறிந்தாள்)
>
> பார்ப்பார் அறவோர் பசுப் பத்தினிப் பெண்டிர்
>
> மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத்
>
> தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய
>
> பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே
>
> நற்றேரான் கூடல் நகர்.
>
> - சிலப்பதிகாரம் - வஞ்சினமாலை
>
> பிராமணர்கள், தர்மசிந்தனை உடையோர், பசு, பத்தினிப் பெண்கள், முதிய
> வயதினர், குழந்தைகள்
> ஆகியோரை விட்டுவிட்டுத் தீயவர்கள் அனைவரையும் எரி என்று தீக்கடவுளுக்குக்
> கட்டளயிட்டாள் பொற்றொடி கண்ணகி. நல்ல தேரை உடைய பாண்டியனின் கூடல் நகர் உடனே
> புகை மண்டித் தீப்பிழம்பாகியது என்பது இதற்கு அர்த்தம். (நல்லோரைக்
> காக்கவும், தீயோரை
> அழிக்கவும் தர்மத்தை நிலைநாட்டவும் யுகந்தோறும் அவதரிப்பேன் என்று கண்ணபிரான்
> கீதையில் கூறியது போல் தீயோர் மட்டுமே அழிக்கப்பட்டனர்.)
>
> --
>
> ...*
>
> *--
> Service Above Self
> cnu.pne *
--~--~---------~--~----~------------~-------~--~----~
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To post to this group, send email to [email protected]
To unsubscribe from this group, send email to 
[email protected]
For more options, visit this group at 
http://groups.google.com/group/thatha_patty?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---

Reply via email to