*அந்த ஊரையே இரண்டு பணக்காரர்கள் கலக்கிக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் எந்த
உதவியும் செய்ய மாட்டார்கள். அநியாய வட்டிக்குப் பணம் கொடுத் வஞ்சனை பண்ணிக்
கொண்டிருந்தார்கள். அவர்கள் வைத்துததான் ஊரில் சட்டம். மக்களும் அவர்களுக்கு
பயந்து நடந்து கொண்டிருந்தார்கள். அந்த இருவருக்கும் எப்போதும் எல்லா
விஷயங்களிலும் போட்டி.ஒருநாள் இருவருக்குள்ளும் ஒரு வாக்குவாதம். யார்
மரணமடந்தால் அஞ்சலி செலுத்த நிறைய கூட்டம் வரும் என்று. அதற்காக ஒரு திட்டம்
போட்டார்கள். இருவருமே இறந்து விட்டதாக ஒரு பொய்ச் செய்தி பரப்பி அதன் பிறகு
என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதுதான் அந்தத் திட்டம். திடீரென்று ஒரு நாள்
காலை அவர்கள் இறந்து விட்டார்கள் என்று செய்தி பரவியது.இரண்டு பணக்காரர்களும்,
எவ்வளவு கூட்டம் வருகிறது என்று பார்க்க வீட்டுக்குள்ளேயே இருந்தார்கள்.கூட்டம்
சேர்ந்தது. அஞ்சலி செலுத்த அல்ல. கடைவீதிகளில் அவர்கள் இறப்பை சந்தோஷமாக
கொண்டாட மக்கள் கூடினர். இதைக் கண்ட பணக்காரர்களுக்கு அதிர்ச்சி. அவர்களுடய
பணப் பெருமை அன்றோடு முடிவுக்கு வந்தது.

-- 
Service Above Self
cnu.pne*

Reply via email to