பதினேழு வயசு தொட்டில் குழந்தை !!!!<http://aviyalselvi.blogspot.com/2008/10/blog-post_30.html> <http://2.bp.blogspot.com/_VCHyi_K6sz8/SQqZfibf6QI/AAAAAAAABxw/ZlL1pJYU65o/s1600-h/child3.jpg> ஒரு படத்தில குழந்தை இல்லாத கௌண்டமணி வீட்டுக்குள்ள செந்தில் நுழைஞ்சி, குழந்தை இல்லாத ஏக்கத்தில மனநிலை சரியில்லாத கௌண்டமணி மனைவி வெறும் தொட்டில் ஆட்டிட்டு இருக்கும்போது அந்த வெறும் தொட்டில்ல போய் செந்தில் படுத்துக்குவாறு....அந்தம்மாவும் தாலாட்டு பாடுவாங்க...கௌண்டமணி பாத்து ஆடிபோயிடுவாறு....உங்களுக்கு ஞாபகம் இருக்கா அந்த நகைச்சுவை காட்சி??? அதே மாதிரி சம்பவம் இங்க அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணத்தில் நடந்துக்கிட்டு இருக்கு....நெப்ராஸ்கா கவர்னரும், சட்ட வல்லுனர்களும் நல்லா ஆடித்தான் போயிருக்காங்க....
நம்ம ஊரு மாதிரியே, பணக்கார தேசம்னு சொல்லப்படற அமெரிக்காவுலையும் சிசு கொலை, பிறந்த குழந்தையை குப்பைத்தொட்டியில போடறது எல்லாம் நடக்குது. நியூ யார்க் நகரத்தில paramedic (அவசர சிகிச்சையாளர்) வேலை பாத்த திமோதி ஜக்கார்த் என்பவர் ஒரு முறை கழிவறை கோப்பையில் பெற்ற தாயாலேயே மூழ்கடித்து கொல்லப்பட்ட பிறந்து ஓரிரு நாட்களே ஆனா குழந்தையை எடுத்து அடக்கம் செய்ய உதவி செய்ய போனார். கொல்லப்பட்ட குழந்தையின் அவல நிலை அவரை ரொம்ப பாதிக்க தன்னுடைய சொந்த முயற்சியில் சிசு கொலை செய்வதை தடுக்க ஒரு *AMT children of hope*அப்படின்னு ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிச்சார். பெற்றோர்கள் வேண்டாத குழந்தைகளை கொல்லாம, தூக்கி கண்ட இடத்தில் எரிஞ்சிடாம அந்த நிறுவனத்திடம் சேர்த்துவிட்டால் , அவர்களே அந்த குழந்தைகளை சரியான தம்பதிகளுக்கு தத்து கொடுத்துடுவாங்க. தத்து எடுக்கப்படும்வரை , அவங்களே குழந்தைகளை வளக்கவும் செய்வாங்க. திமோதி மற்றும் NHSA அப்படின்னு சொல்லப்படுற நிறுவனமும் எடுத்த தொடர் முயற்சியில அமெரிக்காவில் கிட்டத்தட்ட 48 மாகாணங்கள் "பாதுகாவல் சட்டம்" (Safe Haven Law) அப்படின்னு ஒரு சட்டம் கொண்டு வந்திருக்காங்க. அந்த சட்டப்படி ஒரு குழந்தையின் பெற்றோர் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் பாதுகாப்பான இடம் (safe haven) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது இடங்களில் (மருத்துவமனை, காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள்....) வேண்டாத தங்கள் குழந்தையை விட்டு விட்டு போய் விடலாம். அந்த பெற்றோர் மேல எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. போன ஜூலை மாசம் நெப்ராஸ்கா, அலாஸ்கா ஆகிய இரண்டு மாகாணங்களும் இதே மாதிரி சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தாங்க. இதுவரைக்கு எல்லாம் நல்லா தான் நடந்தது. நம்ம நெப்ராஸ்கா அண்ணாச்சிங்க என்ன செஞ்சாங்கன்னா சட்டத்தில "இந்த வயசுவரைக்கும் உள்ள குழந்தைங்க தான் அனாதையா பாதுகாப்பு புகலிடங்களில் விடப்படனும்னு" எந்த வயது வரம்பும் சொல்லலை. *அதாவது மேஜர் ஆகாத எல்லா "குழந்தைகளுக்கும்" அந்த சட்டம் செல்லும். அது மட்டுமில்லாம, மத்த மாகாணங்களில் இருந்து குழந்தைகள் கொண்டு வந்து நெப்ராஸ்காவில் விடப்பட்டா என்ன செய்வாங்கன்னும் இந்த சட்டத்தில எதுவும் சொல்லலை. அதோட விட்டாய்ங்களா??? பெற்றோர் மட்டுமில்லாம , குழந்தைகளை பாத்துக்கிற ஆயாவில இருந்து ஆட்டுக்குட்டி வரைக்கும் ஆரு கொண்டு விட்டாலும் சட்டம் ஒன்னும் சொல்லாது அப்படின்னு வேற சட்டத்தில சொல்லிட்டாங்க. * இது போதாதா??? ஏதோ மந்தையில ஆடுங்களை மேச்சலுக்கு விடற மாதிரி, கட கடன்னு சுமார் *25 "குழந்தைகள்"* நெப்ராஸ்கா மாநிலத்தில் பாதுகாப்பு புகலிடங்களில் விடப்பட்டாங்க. விடப்பட்ட குழந்தைங்களுக்கு என்ன *வயசு* இருக்கும்னு நினைக்கிறீங்க? *12, 13, 15 அப்படின்னு கூடிக்கிட்டே போய் 17 வயசு பையங்கன்னு வந்து நிக்கிது.*விட்டவங்களை குறை சொல்ல முடியாது...19 வயசு ஆகாதவங்க எல்லாம் சட்டப்படி குழந்தைங்க தானே??? இதுல என்ன தமாசுன்னா "infants, toddlers" அப்படின்னு சொல்லப்படுற *பிறந்த குழந்தைங்க, சில மாதங்களான குழந்தைங்க, சிறுவர் சிறுமிங்க யாருமே இந்த பாதுகாப்பு மையங்களிலே விடப்படவில்லை. * *சொன்ன பேச்சை கேக்காத டீனேஜ் பசங்க, மனநிலை பாதிக்கப்பட்ட விடலை பருவ சிறுமிகள் அப்படின்னு இஷ்டத்துக்கு பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் கொண்டு வந்து விட்டு விட்டு போயிட்டாங்க. * *ஒரு 34 வயசு ஆளு, தன்னோட 10 குழந்தைகளில் 9 குழந்தைகளை நெப்ராஸ்கா மருத்துவமனை ஒன்றில் விட்டுட்டு போய்ட்டார்.(அதுல ஒரு "குழந்தையின்" வயது 17, அதாவது அந்த ஆளு 17 வயசிலேயே முதல் குழந்தை பெற்றிருக்கிறார்...தலை சுத்துது சார் !!!!)* *இன்னொரு அம்மா மிச்சிகன் மாகாணத்திலிருந்து 700 மைல்கள் காரில் தன்னுடைய 13 வயது மகனை கூட்டி வந்து நெப்ராஸ்கா மருத்துவமனை ஒன்றில் நடு ராத்திரியில் விட்டுட்டு போய்ட்டாங்க. மனநிலை பாதிக்கப்பட்ட 13, 15 வயசு சிறுமி மற்றும் சிறுவன், சொன்ன பேச்சை கேக்காமல் ரொம்ப படுத்தின 17 வயசு பசங்கன்னு வஞ்சனையே இல்லாம குழந்தைகளை அனாதையாக்க பறந்து விரிஞ்ச அமெரிக்காவின் எல்லா மாகாணங்களில் இருந்தும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும், மாற்றான் தாய் தந்தையரும் நேப்ராஸ்காவை நோக்கி படையெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.* பொதுவா சட்டதிட்டங்களை மதிக்கிற அமெரிக்க பொது ஜனம் இந்த அளவுக்கு ரொம்ப * "ஓவரா"* சட்ட திட்டங்களை மதிப்பாங்கன்னு நெப்ராஸ்கா மாநில அரசு எதிர்பார்கலை. கொஞ்சம் அரண்டு தான் போய்ட்டாங்க.... இப்போ நெப்ராஸ்கா மாகாண கவர்னர் அவசரமா மாநில சட்டசபை நவம்பர் 14 ம் தேதி கூடும்னு அறிவிச்சிருக்கார். குழந்தைகளை பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்க தாய்க்கு குழந்தை பிறந்த பிறகு *3 நாட்கள் தான் அவகாசம்* அப்படின்னு ஒரு கால வரையறையோடு கூடிய சட்ட திருத்தத்தை அவசரமா கொண்டு வரப்போரய்ங்களாமாம் !!!! நல்லா கூத்தடிக்கிறாய்ங்க !!!!! நல்ல வேலையா நம்ம ஊரிலே சின்ன அளவில ஒரு தொட்டில் செஞ்சி அதுலதான் கொழந்தையை போட்டுட்டு போகணும்னு அரசாங்கம் ஐடியா செஞ்சாங்க...இல்லைன்னா நம்ம ஊர் நாட்டுலையும், பட்டணத்துலையும் கூட இந்த மாதிரி கூத்துங்க அரங்கேறியிருக்க வாய்ப்பிருக்கு.... நினைவு தெரிஞ்ச, வயது வந்த கொழந்தைங்களை கொண்டு வந்து விட்டா அவங்க மனசளவுல எவ்வளவு பாதிக்க பாடுவாங்கன்னு கூட நினைக்காம அனாதையா விட்டுட்டு போற ஜந்துக்களையெல்லாம் எப்படித்தான் மனுஷங்க லிஸ்டில சேர்த்துக்கறதுன்னு ஒன்னும் புரியலை.....ஆனா அதே சமயம் அப்படிப்பட்ட ஏழ்மையான சூழ்நிலைக்கு அந்த பெற்றோர் தள்ளப்படறாங்களோன்னும் நினைக்க தோணுது... அதுவும் இல்லாத பட்சத்தில, இந்த மாதிரி பிள்ளைங்களை பத்தி சுத்தமா கவலையில்லாத அப்பா அம்மா கிட்ட இருக்கிறதைவிட அனாதையா விடப்படுவது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லையோன்னும் தோணுது.... எப்படி இருந்தாலும், அடுத்த தலைமுறையை நல்ல முறையில் அன்பையும் அறிவையும் கொடுத்து நெறிப்படுத்துதல் என்பது ஒவ்வொருத்தருடைய தலையாய கடமை அப்படின்னு எல்லா மக்களும் (அல்லது) பெரும்பான்மையான மக்களாவது உணரும் நாள்தான் நிஜமாகவே குழந்தைகள் தினம்னு கொண்டாடப்பட வேண்டிய தினம். -- Service Above Self cnu.pne
