ஆனந்த லஹரி <http://1.bp.blogspot.com/_JXOfPrd9cbY/SKQ9E2k_GuI/AAAAAAAAAbM/2aK4U3nDDQ4/s1600-h/Gyaneswari-madhurakali.jpg> <http://1.bp.blogspot.com/_JXOfPrd9cbY/SKQ8U7Trt7I/AAAAAAAAAbE/mwIJavCOFdI/s1600-h/Amman.jpg> *மநஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி * *த்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்* *த்வமேவ ஸாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ-வபுஷா* *சிதாநந்தாகாரம் ஸிவயுவதி பாவேந பிப்ருஷே * அம்மா!, நீயே மனம், நீயே ஆகாசம், நீயே, சூர்யன், வாயு, அக்னி, பூமி, நீர் போன்றவற்றின் தத்வமாகிறாய். நீயே பிரபஞ்சமாக இருப்பதால் உனக்கு வேறான பொருள் இல்லை. நீயே உனது ரூபத்தை பிரபஞ்சமாக காண்பிப்பதற்காக பரமசிவனுடைய பத்னி என்பதான ஆனந்த சித் ரூபத்தை ஏற்கிறாய்.
இந்த ஸ்லோகத்தில் அன்னையின் அஷ்ட மூர்த்தி தத்வம் சொல்லப்படுகிறது. அதாவது மனத்தின் (மநஸ்த்வம்) அதிதேவதையான சந்திரனும், மருத்ஸாரதி: என்பதில் சூரியன் மற்றும் அக்னியும், பிருதிவி, அப்பு, வாயு, தேயு, ஆகாசம் ஆகிய எட்டு வடிவம். த்வயி பரிணதாயாம் - நீயே பிரபஞ்சமாக பரிணமிக்கிறதால்; ந ஹி பரம் - வேறு பரம்பொருள் இல்லை; சிவ-யுவதி - சிவனது பத்னி; சிவானந்த ஆகாரம் - ஆன்ந்த சித்ருபத்தை; பிப்ருஷே - ஏற்கிறாய். *தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸசி கோடி த்யுதிதரம் * *பரம் ஸம்பும் வந்தே பரிமிலித பார்ஸ்வம் பரசிதா* *யமாராத்த்யன் பக்த்யா ரவி-ஸசி-ஸுசீநா-மவிஷயே* *நிராலோகே-லோகே நிவஸதி ஹி பாலோக-புவநே* அம்பிகே!, உன்னுடைய ஆக்ஞா சக்கரத்தில் (புருவங்களுக்கு மத்தியில்) ஒளிர்கின்றவனும், கோடி சூர்ய-சந்திரர்களின் காந்தியைத் தரிப்பவனும், ஸகுண-நிர்குண சக்திகளை தனது இடது பக்கத்தில் தாங்குபவனுமான காமேஸ்வரனை நான் வணங்குகிறேன். அந்த காமேஸ்வரனை தியானிப்பவன் சூரிய, சந்திர, அக்னி போன்றவர்களுக்கு பிரகாசத்தை அருளும் பரஞ்சோதி வடிவான உன்னுடைய சாயுஞ்ய பதவியில் வசிப்பான். இங்கே தவாஜ்ஞா என்பது ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நான்கு சிவ தளங்களை என்பது குறிக்கப்படுவதாக லக்ஷ்மிதரர் விளக்குகிறார். ஆனால் இது ஆஞ்யா சக்ரத்தில் இருக்கும் இருதளங்களைக் குறிப்பதாகவும் சொல்லப் படுகிறது. இந்த இடத்தில் "ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம், நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: தமேவ பாந்த மனு பாதி ஸர்வம், தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி" என்பதான கடோபநிஷதத்தை எடுத்துக் காட்டுகிறார் தேதியூரார். அதாவது, ஆக்ஞா சக்ரத்தில் வாசம் செய்யும் சங்கரனாலேயே சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் பிரகாசமடைக்கிறது. ஸ்வயம்பிரகாசியான அவனது ஒளியால்தான் அக்னி, சூரியன், சந்திரன் போன்றவை பிரகாசம் அடைகிறது என்பது பொருள். தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் - தவ+ஆஞ்யா - உன் ஆஞ்யா சக்ரத்தில்; தபந-ஸசி கோடி த்யுதிதரம் - கோடி சூர்ய சந்திரர்களின் பிரகாசம் உடையவரும், பரசிதா - சகுண, நிர்குணங்கள் இரண்டும் இணைந்த சக்தி; பரிமிளித பார்ச்வம் - இருபக்கங்களிலும் அணைக்கப் பெற்ற; பரம் சம்பும் - பரமசிவனை; வந்தே - வணங்குகிறேன்; அவிஷயே - விளங்க வைக்க முடியாத; நிரா லோகே - கண்ணுக்குப் புலனாகாத; அலோகே - கண்களில் வேறுபடத் தெரியும்; பாலோக புவனே - ஜோதிவடிவான உலகில்; நிவஸதிஹி - வசிப்பான். <http://1.bp.blogspot.com/_JXOfPrd9cbY/SJsARWjGRYI/AAAAAAAAAa0/uZ7HTIRzS5I/s1600-h/siva-parvathi.jpg> *ஸ்மரம் யோனீம் லக்ஷ்மீம் த்ரிதய-மித-மாதெள தவமனோ: நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா: பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண நிபத்தாக்ஷ-வலயா: சிவாக்னெள ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை: * அம்பிகே!, புண்யவான்களாகிய யோகிகள், தமது கைகளில் தாமரை மணிமாலையைக் கையில் கொண்டு, முறையே காம, யோனி, மற்றும் லக்ஷ்மி பீஜாக்ஷரங்களை முன்னர் சொன்ன15 அக்ஷரங்களுடன் சேர்த்து த்ரிகோணாகாரமாகிய சிதக்னியில் பசு நெய்யினால் ஹோமம் செய்து உன்னை திருப்தி செய்விக்கிறார்கள். பஞ்சதசீ என்னும் மந்திரம் பற்றி 32ஆம் ஸ்லோகத்தில் பார்த்தோம். பஞ்சதசீயில் வரும் அக்ஷரங்களுக்கான தேவதைகள் என்னென்ன என்று அங்கு பார்த்தோம். அவற்றுடன் காம, யோனி, மற்றும் லக்ஷ்மி அக்ஷரங்களை இணைத்து இங்கு சொல்கிறார். இவ்வாறாக இந்த மூன்றும் இணைத்தபின் வருவதை செளபாக்ய பஞ்சதசீ என்பர். அந்த மந்த்ரம் இங்கே மறைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஸ்லோகத்தையே கைவல்யர் காதி வித்தை என்றும் முந்தைய ஸ்லோகத்தை ஹாதி வித்தை என்றும் கூறுகிறார். நிரவதி மஹாபோக-ரஸிகா - இடைவிடாது மந்திர ஜபம் செய்து ரசிக்கிறவர்கள்; ஏகே - சிலர்; சிந்தாமணி-குண-நிபத்த-அக்ஷவலயா: - தொடர்ந்து சிந்தனையையே ஜபமாலையாக கொண்டு; சிவாக்னெள - சிவாக்னி எனப்படும் முக்கோண ஹோம-குண்டத்தில்; ஸுரபிக்ருத-தாரா - காமதேனு அளித்த நெய் தாரையை; ஆஹுதி - (அக்னிக்கு) அளித்தல்; ஜுஹ்வந்த: - செய்பவர்களாக; பஜந்தி - ஆராதித்தல் வீட்டில் செய்யப்படும் ஹோமங்கள் சதுரமான குண்டத்தில் செய்யப்பட்டாலும், கோவில்களில் பல ரூபங்களில் ஹோம குண்டங்கள் அமைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு ரூபத்தில் ஹோம குண்டம் இருக்க வேண்டும். அதில் சிவனுக்கானது முக்கோண அமைப்பில் இருக்கும். இங்கே சிவோஹம் என்று பாவனையாக சிதக்னியில் ஹோமம் செய்ய வேண்டும் என்கிறார். <http://1.bp.blogspot.com/_JXOfPrd9cbY/SJr_7EPUupI/AAAAAAAAAas/fURFy-GS7fw/s1600-h/kameswara_kameswari1_imagelarge.jpg> *சரீரம் த்வம் சம்போ: சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம் * *தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான மனகம்* *அத: சேஷ: சேஷீத்யய-முபய-ஸாதாரணதயா* *ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ: * பராம்பிகே!, சந்திர-சூரியர்களை நிகில்களாக கொண்ட நீ பரமசிவனுக்கு உடலாகவும், மாசற்ற ஒன்பது வ்யூக ஸ்வரூபியான சிவனது உடலானது உன்னுடையதாகவும் மனக்கண்ணால் காண்கிறேன். ஆகவே உடமை, உடையவர் என்ற பாகுபாடில்லாது உங்களது உறவு ஸமநிலையில், சேஷ-சேஷி பாவமாக (ஒருவர் சரீரமாகவும், இன்னொருவர் ஆன்மாவாகவும்) இருப்பது ஒப்புயர்வற்ற ஸச்சிதானந்தத்தை அளிப்பதாக இருக்கிறது. ஸமரஸ பரானந்த பரயோ - சிவனும் சக்தியும் சமமாக இருப்பதால் சிவனுக்கு ஸமய: என்றும் சக்திக்கு ஸமயா என்றும் பெயருண்டு. நாம் சாதாரணமாக சிவ-சிவா என்று சொல்லும் போது முதலில் வரும் சிவ என்பது ஈசனையும் இரண்டாவதாக வரும் சிவா: அம்பிகையையும் குறிக்கும் என்பர். 32, 33 ஆகிய ஸ்லோகங்களில் மறைந்திருக்கும் மந்திரத்தின் ரிஷி ஈசன், அதனால் தான் இங்கே சம்போ என்று கூறி அவரை தியானிக்கும்படி அமைக்கப்படிருக்கிறதாக லக்ஷ்மிதரர் சொல்கிறார். சசி-மிஹிர - சந்திர-சூர்யர்களை; வக்ஷோருஹ-யுகம் - நிகில்களாக கொண்ட; த்வம் - நீ; சரீரம் - உடல்; சம்போ - பரமசிவன்; நவாத்மானம் - (காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன்) ஆகிய 9 விதமான வியூஹங்களை உடையவன். மன்யே - மனக்கண்; அத: -ஆகையால்; உபய ஸாதரணதயா - இருவருக்கும் ஸமமான; ஸ்தித: - நிலை பெற்ற; -- Service Above Self cnu.pne
