Dear Shri  Subramanian,

I appreciate the efforts of shri kathirvelu, who has agricultural
backgrounds.
To complete the magic square of odd nos, it is a child's play,provided you
know the technique. For even no sized magic squares there could be some
technique, which I do not know. I know the technique for 4 by 4. Being
lazy, I have not attempted to learn for 6 by 6 as well as 8 by 8.
Hats of to the gentleman Shri kathirvelu for his sincere interest.
Sincerely yours
swaminathan




On 8/17/09, Venkatachalam Subramanian <[email protected]> wrote:
>
> எட்டுடன் மூன்று நாலும்
> -=-=-=-=-=-=-=-=-=-=-=-==-=-
> எட்டுடன் மூன்று நாலும்,
> ஏகமாய் ஒன்று ஐந்து ஒன்பதும்,
> சட்டமாய் ஆறேழிரண்டும்
> தனிப்படப் பதினைந்தாமே.
> ....ஒரு பழம் பாடல்.
> ----------------------------|
> 8.........3............4..|
>
> 1.........5............9..|
>
> 6.........7............2..|
> -=-=-=-=-=-=-=-=-=
> 15......15.........15
> -=-=-=-=-=-=-=-=-=-
> இந்தக் கணக்கு மாயச்சதுரம் என்று அழைக்கப்படுகின்றது.எந்தக் கோணத்தில்
> கூட்டினாலும் கீழழிருந்து மேல். இடமிருந்து வலம் குறுக்கு வசமாகக்
> கூட்டினாலும் ஒரே தொகை கிடைக்கும்.
>
>        அன்பர் கதிர்வேலு ஒரு இளைஞர். தற்போது அவருக்கு அவருக்கு வயது 86.
> இம்மாதிரின் பல கட்டங்களில் எண்களை நிரப்பி எப்படிக் கூட்டினாலும் ஒரே
> விடை கிடைக்குமாறு செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவர் பரம்பரை
> விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சென்னையின் புறநகர்ப் பகுதியான
> போரூருக்கு அடுத்த கோவூர்தான் இவருடைய சொந்த ஊர்.
>
>        இவருக்கு இந்தக் கணக்கு ஆர்வம் வந்து பத்து ஆண்டுகள் ஆகின்றன. கடந்த
> பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளிதழைப் புரட்டிகொண்டிருந்த இவரது கண்கள்
> ஓரிடத்தில் அசையாது உன்னிப்பாய்க் கவனித்து அசையாமல் நின்றன.
>
>        ஆம்! அங்கே மாயச் சதுரம் கணக்கைப் போட்டு தீர்வு காணுமாறு
> கேட்கப்பட்டிருந்தது. சின்னக் கணக்காக இருந்தாலும் ஆரம்பத்தில் பலவாறு
> யோசித்தே நிரப்பினார் கதிர்வேலு. கூட்டுத் தொகையை எண்ணிக் கூட்டிப்
> பார்த்தார். எந்தக் கோணத்தில் கூட்டினாலும் ஒரே தொகைதான் வந்தது.
>
>        அன்று ஆரம்பித்த ஆர்வம்தான், இன்றும் ஜெட் வேகத்தில் தொடர்ந்து
> கொண்டிருகின்றது. 3-க்கு 3 மாயச் சதுரக் கட்டமாக இருந்தாலும் அதை நிரப்ப
> நம் படாத பாடு படும்போது இந்தக் கதிவேலுவோ 42-க்கு 42 மாயச் சதுரத்தையே
> அனாயாசமாக அசராமல் நிரப்புகிறார்.
>
>        இப்போதைக்கு இவரது ஒரே பொழுது போக்கு மாயச் சதுரங்கள் போடுவதும் அவற்றை
> நிரப்புவதும் தான். இதற்காக தினமும் மூன்று மணி நேரம் செலவிடுகிறார்.
> இந்தத் தள்ளாத வயதிலும், இந்த அபூர்வ ஞானத்திற்கு என்ன காரணம் என்று
> அவரிடம் கேட்டால்,’எல்லாம் அவன் கொடுத்த சக்திதானென்கிறார். தன் இஷ்ட
> தெய்வமான முருகன்தான்’ என்று புகழ்கிறார்.
>
>        மாயச் சதுரக் கட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்திக் கொண்டே போக வேண்டும்
> என்பதுதான் அவருடைய இலட்சியமாம்.
>
>        இப்படிக் கணக்குப் பண்ணியே சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தின்
> மூன்று விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
>
> செய்தி மூலம். தினத்தந்தி.
> அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.
>

Reply via email to