வால்மீகியும் கம்பனும்
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
கி.வா.ஜா.வின் ஒரு கட்டுரையிலிருந்து
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
        ஓம்.
        வால்மமீகி ராமாயணத்தை ஒரு பெரியவர் உபன்யாசம் செய்த்கு கொண்டிருந்தார்.
ஊர்க்காரர்கள்கீழே அமர்ந்து ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
கம்பர், ஓர் ஓரத்தில் இருந்தபடியே அதைக் கேட்டு வந்தார். அவர் கவிச்
சக்கரவர்த்தியாகாத காலம் அது.
        காதையில் சீதா பிராட்டியை இராவணன் தூக்கிச் செல்லும் கட்டம். ராவணன்,
ஒரு கையால் சீதையின் தலையையும், மற்றொரு கையால் காலையும் பற்றித்
தூக்கிச் சென்றான் என்று வால்மீகி முனிவர் பாடியிருப்பதை கதை சொல்பவர்
விரிவாக எடுத்துரைத்தார்.
        ஒவ்வொரு நாளும் இராமர் கதையில் ஈடுபட்ட மக்கள் தம் வீட்டுக்குப் போகும்
போதுதாம் கேட்டவற்ரைப் பற்றிப் பேசிக்கொண்டே போவர். முறையாக விமர்ச்சனம்
செய்ய அவர்களுக்கு த் தெரியாவிட்டாலும், எந்த, எந்தப் பகுதி  அவர்கள்
உள்ளத்தில் அழுத்தமாகப் பதிந்ததோ, அதைப் பற்றிப் பேசுவர். அவர்களுடைய
பேச்சையும் கவனிப்பார் கம்பர்.
        அன்றும், கதை முடிந்தவுடன், கேட்டவர்கள் போகும் போது பேசிக் கொண்டது
கம்பர் காதில் விழுந்தது.......” இராவணன் சீதையை அப்படித் தூக்கிக்
கொண்டு போனானே, பாவி, தொடும்போதே அவன் தலை வெடித்திருக்கக் கூடாதா?
சீதையை அவனால் அணுக முடியாமல் இருந்தால் எப்படி இருக்கும்?’  என்று
பேசிக்கொண்டு போயினர். அவர்கள் ஆசை அது.

        வால்மீகி காலத்துக்குப் பிறகு மனோபாவம் பலதுறைகளில் மாறிவிட்டது.
அதனால். கம்பர் காலத்து மக்களுக்கு இப்படி ஒரு விருப்பம் தோன்றியது.

        பல காலமாகவே வால்மீகி இராமயணத்தைக் கேட்டுக் கேட்டுச் சுவைத்தவர்
கம்பர்; ஆராய்ச்சியும் செய்தவர். தமிழில் இராமயணத்தைப் பாடவேண்டும் என்று
ஆசை அவருக்கு  உண்டாயிற்று..

        சங்க காலத்தில் இருந்த இராமாயணம் வழக்கு ஒழிந்து போயிற்று. பின்னர்
தோன்றிய ஜைன இராமயணமும் மக்களிடையே வழங்கவில்லை. அதனால், இராம காதையைத்
தமிழ்க்காப்பியமாக அமைக்கும்  ஆர்வம் அவரிடம் நாளுக்கு நாள் வளர்ந்தது.

        அவர் காலத்துக்கு முன் இராமன் பலருக்கு உபாஸனா தெய்வமாகிவிட்டான். தனியே
இராமனுக்குக் கோயில்கள் எழுந்தன. ஆதலில், அவனைத்தெய்வமாக, லட்சிய
நாயகனாக, குறைபாடில்லாதவனாக வைத்துப்பாடத்துவங்கினார்.

         பல இடங்களில் காலத்துக்கு ஏற்ற வகையில்  சில சிறு மாற்றங்களைச்
செய்தார்.  தமிழ் மரபையும் ஏற்ற இடங்களில் பொருத்தினார். சீதையை இராவணன்
நிலத்தோடு பெயர்த்துச் சென்றதாக எழுதினார்.

        வாலியின் மனைவி தாரகி, சுக்ரீவன் மாளிகையில் கைம்மை நோற்புடையவளாக
வாழ்கிறாள்.சீதையின் மனதை மாற்ற மாயா சனகனைப் படைக்கிறான் இராவணன்.
இப்படிச் சில மாற்றங்களை அமைத்து, சில புதிய நிகழ்ச்சிகளையும் கூட்டி ஆறு
காண்டங்களையும் பாடினார்.

ஓம். வெ.சுப்பிரமணியன் ஓம்

Reply via email to