ஓம்

தமிழ் அறிஞர்கள்.

(சின்னஞ்சிறு குறிப்புகளுடன்) நன்றி:-மு. அப்பாஸ் மந்திரி,’ தமிழ் அறிஞர்களும்
தமிழ் இலக்கியமும் 1767 லிருந்து 1980 வரை’ நர்மதா பதிப்பகம் சென்னை

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்து

கோடாமை சான்றோர்க்கணி.......குறள் 115

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

ஒருவர்க்கு வாழ்வும் தாழ்வும் இயற்கை; அந்த இரு நிலைமையிலும் நடுவு நிலையோடு
இருந்து உறுதி காட்டுவதே பெரியோர்க் கழகாகும்.

***************************************************************************************
*

பாடுவார் முத்தப்பர்
*

அழகப்பச் செட்டியார்-லட்சுமி ஆச்சி ஆகியோருக்கு 1767 இல் கீழச்சிவல்பட்டியில்
பிறந்தார்.எண்ணங்களைக் கவிதையாக்கி அடுத்த நொடியே அவை எதிரே நடந்துவிடும்
அற்புதத்தைக் கண்களில் காணவைக்கும் நிறைமொழிப் புலவர்களுக்கு அறம் பாடும் அருட்
புலவர்கள் என்பது பெயர். தனது அருட்பாடலால் மழையை வரவழைத்தும், பின்னர் மழையை
நிற்கவும் செய்த தமிழ் அறிஞர் அவர். வெற்றிலை, பாக்கு, சுண்ணம் ஆகியவற்றைப்
பாடல் பாடி வரழைத்தவர்.

’நகர வாழ்த்து’, ’குளுவ நாடகம்’, ’திருமுருக விலாசம்’, ’செயங்கொண்டார் சதகம்’,
’குதிரையடி’ ஆகிய செய்யுள் நூல்களும், ’குன்றக்குடி முருகன் பதிகம்’,
’பழநியாண்டவர் பதிகம்’ போன்ற அருள் நூல்களும் இயற்றியுள்ளார். செயங்கொண்டார்
பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழியை இணைத்துள்ளார்.

தன்னுடைய நகர வாழ்த்து பனுவலில் நாட்டுக் கோட்டை நகரத்தாரின் பழக்க
வழக்கங்களையும், திருமண நெறிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளார். எனவே அந்த நூல்
‘சமூகக் கொடை’ என்ற சிறப்பினைப் பெற்றது. மேலும் நகரத்தார் மரபில் உதித்த முதல்
புலவராகக் கருதபட்டவர். ’பாட்டறப் புலவர்’,பைந்தமிழ்ப் பாவலர்’என்று புகழப்பட்ட
முத்தப்பர் தன்னுடைய மரணத்தைக் கூட முன்னரே நயம்படத் தமிழ்க் கவிதையாக்கி
வழங்கி 1829-இல் புகழுடம்பெய்தினார்.

-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

வேதநாயக சாஸ்திரியார்.

1774-இல் திருநெல்வேலியில் பிறந்தார். தந்தையார் பெயர் தேவசகாயம். தாயாரின்
பெயர் தெரியவில்லை. தரங்கம்பாடிக் கல்லூரியில் படித்தார்.’பெத்தலேகம் குறவஞ்சி’
என்னும் அவருடைய நாடகம் சென்னை வேப்பேரி கிறிஸ்துவ சபையில் அரங்கேற்றம்
பெற்றது. ஞானதீபக் கவிராயர் என்னும் சிற்ப்பினை அந்த நாடகம் பெற்றுத்தந்தது.
தஞ்சை வேதக் கல்லூரியை நிறுவியவர் சுவார்த்தார். அந்த தஞ்சை வேதக் கல்லூரியில்
தலைமைப் பொறுப்பை வகித்த பெருமை வேதநாயக சாஸ்திரியாருக்கு உண்டு.

இவர் இயற்றிய குறு நாடகம்,’சென்னப் பட்டணப் பிரவேசம்’.

பிறவிப் பெருங்கடலை நீந்திக் கரைசேர்வதற்குரிய துணிவையும், மனத்தூய்மையை
அளிப்பதும் ஆன நாடக நூல் "ஞானத்தச்சன்".

இவர் இயற்றிய இதரத் தெய்வப் பனுவல்கள் ’வண்ணசமுத்திரம்’,’அறிவானந்தம்’.
‘ஆதியானந்தம்’, ‘பேரின்பக் காதல்’, ‘ஆரணாதிந்தம்’, ‘தியானப் புலம்பல்’, ‘ஞானக்
கும்மி’ , ‘பராபரன் மாலை’ ஆகியவை

.

வித்தகக் கவிஞர், விவிலிய அறிஞர் என்று புகழாரம் சூட்டப்பெற்ற தமிழறிஞர் திரு
சாஸ்திரியார் 1864-இல் இறைவனடி சேர்ந்தார்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

டாக்டர் ராபர்ட் கால்டுவெல்

1814-இல் கிளாடி (அயர்லாந்தில்) பிறந்த கால்டுவெல் கிறிஸ்துவ சமயத்தை
இந்தியாவில் பரப்புவதற்காக தமிழ் நாட்டின் திருநெல்வேலியில் முதன் முதலில்
வந்து சேர்ந்தார்.

பிரௌன் என்பவரிடம் தெலுங்கு மொழியையும், வடமொழியையும் கற்றார். தமிழ்நாட்டின்
கலைச் செல்வங்களைப் பற்றி பிரௌன் மூலமாக அறிந்தார்.

தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் திருந்திய மொழிகள் ஆறு எனவும் திருந்தாத
மொழிகள் ஆறு எனவும் வகைப்படுத்தினார்.

திருந்திய மொழிகள் என்று அவர் வகைப்படுத்தியவை:-1.தமிழ், 2. தெலுங்கு,
3.கன்னடம், 4மலையாளம், 5. துளுவம், 6.குடகு ஆகியவை.

திருந்தாத மொழிகளாக அவர் வகைப் படுத்தியவை:- 1.தோடர் மொழி, 2.கொண்டர் மொழி, 3.
கூவர் மொழி, 4.ஒரியர் மொழி, 5. பிராகி மொழி, 6. மேலர் மொழி ஆகியவை.

’திராவிட மொழி நூலின் தந்தை’ என்று போற்றப்படும் டாக்டர் ராபர்ட்
கால்டுவெல்லுக்கு ‘அத்தியட்ச குரு’ என்ற சிறப்பினை வேத விளக்க சங்கம்
வழங்கியது.

திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம் வகுத்த ராபர்ட் கால்டுவெல்லுக்கு கிளாஸ்கோ
பல்கலைக் கழகம் ‘டாக்டர்’ பட்டம் கொடுத்து கௌரவித்தது.

ஆற்றல் மிகு மொழி வல்லார், அயர்லாந்துத் தமிழ் அறிஞர் எனப் போற்றப்பட்ட இவர்,
தமிழரை ‘கீழை நாட்டு கிரேக்கர்’ (
THE GREEKS OF THE EAST) எனப் புகழ்ந்தார்.

’தியான மாலை’ ‘ஞானாலயம்’ இவரால் இயற்றப்பட்ட பனுவல்கள்.

1891, இல் கொடைக்கானலில் இவர் பூதவுடலை விடுத்து புகழுடம்பு எய்தினார்.
இவருடைய கல்லறை இடையன்குடியில் உள்ளது.
அன்புடன்
வெ.சுப்பிரமணியன் ஓம்.

-=-=-=-=-=-=
**

Reply via email to