ஓம்.
விலைவாசி ஏற்றம் தாளமுடியவில்லை.
கிராமங்களில் அந்நாளில் தூக்கமுடியாத சுமையாக பலவகைக் கீரைகளைச்
சுமந்துகொண்டுவ்ந்து விற்பார்கள்.  காசுக்காக இல்லாமல் பண்டமாற்று முறையாக
அரிசியைப் பெற்றுக்கொண்டு வேண்டிய கீரைவகைகளைக் கொடுப்பார்கள். பெரும்
தலைச்சுமை விற்று குறைந்த சுமையாக அரிசியைப் பெற்றுச் செல்வார்கள்.

அறுவடை காலங்களில் கிராமங்கள் மிக்கப் பரபரப்பாகச் செயல்படும். எங்கள் ஊரில்
பாறை நீண்ட பரப்பில் இருக்கும். நெற்களஞ்சியம் என்று நெல் சேகரம் செய்து
வைக்கப்படும் இடம் பொதுவான பெரிய கட்டடம் ’சேர்’ என்று அழைக்கப் படும்.
கூட்டுறவு விவசாய வங்கிகளில் உறுப்பினர் நெல் மூட்டையை வீட்டினில் அடுக்கிப்
பாதுகாப்பதற்குப் பதிலாக குறைவான கட்டணத்தில் வங்கியின் கிட்டங்கியில்
வைப்பார்கள். நெல் மூடைகளை அடகு வைப்பது போல  வைத்து கைச் செலவுக்குப் பணமும்
பெற்றுச் செல்லலாம்.

அறுவடை நடைபெறும் வயல்களில் ஒரு மகிழ்ச்சிகரமான சூழல்
வழிந்தோடிக்கொண்டிருக்கும். திருவிழாக் கடைகள் தற்காலிகமாக வருவது போன்று
அறுவடைக் கடைகள் அமைக்கப்படும். தலையடி நெல் பெரும்பாலும் இந்தக் கடைகளுக்கு
வராது. சூட்டடி நெல் மட்டுமே வரும். பணிசெய்யும் அறுவடை ஆட்கள் தன்னுடைய சொந்த
ஊரைவிட்டுக் குழுக்கச்ளாகக் கிளம்பினால் அறுவடைக் காலம் முடியும் வரை பல்வேறு
ஊர்களுக்குச் சென்று அறுவடை முடித்து தானியமாக அவரவர்களிடம் கூலி பெற்று அந்த
சேகரத்தில் சமைத்துச் சாப்பிட்டது போக மீதியை தன் ஊருக்கு எடுத்துச் சென்று
பங்கீடு செய்து கொள்வார்கள். அறுவடைக் காலங்களில் ‘சுதந்தரம்’ என்று ஒன்று
உண்டு. சவரம் செய்யும், மருத்துவர் சலவைத் தொழிலாளி, பூசாரி, நீர்காண்டி
ஆகியோர் ஆஅண்டுக்கு ஒருமுறை நெல்லாகவே கூலி அறுப்புக் களத்திலே பெற்றுச்
செலுவார்கள். இது தவிர பகல் வேசக் குழு, முருகன் அடிமையெனப்படும் ‘சித்தேசன்’
என்பவர்கள் {தலையில் முறுக்கிய பருத்தி ஆடையினால் சுற்றப்பட்ட தலைப்பாகை, ஆள்
உயரக் கழி, கனமான வெண்கல மணி, தூய வெண்ணிறத்தில் மராட்டியர் போன்ற குர்தா
ஆகியவை அணிந்திருப்பர்.} வெண்கல மணியின் விளிம்பினில் கழியை உரசினால்
அதனின்றும் எழும் நாதம் ஓம், ஓம், என்று ஒலிக்கும். அந்த மணியை
தலைகீழாகத்திருப்பி அது நிறையும் வரை அதனில் நெல் பெற்றுச் செல்வார்கள்.

பாகற்காய்  100 காய்களுக்கு சமம். பிரண்டை 300 காய்கறிக்க்கு சமம். பலாக்காய்
600 காய்கறிக்கு சமம் என்கிறது பின்வரும் சுலோகம்.
“காரவல்லி சதம் ப்ரோக்தம் வஜ்ரவல்லி சத்ரயம்.பநஸ:
ஷட்சதம் ப்ரோக்தம் ஸ்ராக்கத்த காலே விதீயதே”
ஓம். வெ.சுப்பிரமணியன் ஓம்.

Reply via email to