ஓம்.

 ஒவ்வாமைக்கு ஒரு சிறு தீர்வு. ’டீடொக்ஸ் ட்யட்’ ( Detox Diet )

-=-=-=-=-


 ”காற்று வாங்கப் போனேன். நல்ல கவிதை வாங்கி வந்தேன்”. என்பதைப் போன்று
அலுவலகம் மார்க்கெட் என வெளியே சென்றுவிட்டு வந்தாலே நிறைய நச்சுப் பொருள்களை
உடலில் ஏற்றிகொண்டு வந்துவிடுகிறோம். வாகனப் புகை, பூச்சிகொல்லி மருந்துகள்
தெளிக்கப்பட்ட தானியங்கள். கார்பைடு கற்கள்வைத்து பழுக்கப்பட்ட பழங்கள், மெழுகு
பூசி வைத்த ஆப்பிள் பழங்கள், பசுமை வண்ணம் சேர்க்கப்பட்ட பட்டாணி இது போன்று
கலப்படம் மிகுந்த பொருள்களைத்தான் வாங்கிவரமுடிகிறது. அதிக கொழுப்பு சத்துள்ள
உணவுகள் என பல்வேறு காரணங்களால் நமது உடலில் நச்சுப் பொருள்கள் சேர்ந்து
விடுகின்றன.


         இந்த நச்சுப் பொருள்கள் தாமாகவே வெளியேறிவிடும் என்று சிலர்
சொல்லுகிறார்கள். இவை வெளியேற நாமும் முயற்சி எடுத்து உதவ முடியும்
என்கிறார்கள் சிலர். இதற்கு இவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறைதான் ’டீடொக்ஸ்
ட்யட்’ ( Detox Diet ) .


         "ஐயாவை, கைத்தாங்கல அழைச்சுண்டுபோய் வெளியே விட்டுட்டுவா தம்பி "
என்பது போல இந்த உணவுமுறை உடலில்  உள்ள நச்சுப் பொருள்களை மெல்லக் கழுவி
வெளியேற்றி விடும் என்கிறார்கள். இது உண்மையா? அவசியந்தானா? என்பது குறித்து பல
மாறுபட்ட கருத்துக்கள்  நிலவுகின்றன.

           லண்டனில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் மருத்துவ மனையின் தலைமை ஊட்டச்சத்து
நிபுணர் கேதரின் கொலின்ஸ் (Catherine collins)  நமது உடல் இயற்கையாகவே நச்சுப்
பொருள்களை வெளியேற்றும் தன்மையுடையது. இதற்குப் புற உதவிகள் எதுவும்
அவசியமில்லை, என்கிறார்.

          ஆனால் பல பிரபலங்கள் இன்று டிடாக்ஸ் டயட்டில் அதிக ஆர்வம்
காட்டுகிறார்கள். இந்த உணவுமுறை சக்தியையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதாகக்
கூறுகிறார்கள். நமதுவாழ்க்கை முறை, உணவு முறை ஆகியவற்றின் காரணமாக உடலில்
நச்சுப் பொருள்கள் உருவாகின்றன.

            சுற்றுச் சூழல் சீர்கேடு, போதை மருந்துகள், கேஃபின் (Caffien) ,
ஆல்கஹால் ஆகியவை நச்சுப் பொருள்கள் உருவாக சில முக்கிய காரணங்களாகும்.
இவற்றுடன் தவறான உணவு முறையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட காலம்
தொடர்ந்து தவறான உணவு முறைகளைக் கடைபிடித்து வந்தால், நம் உடல் நச்சுப்
பொருள்களின் சேமிப்புக் கிடங்கு மாதிரி ஆகிவிடும்

               சுற்றுச் சூழல் மாசுபட்டு இருக்கிறது என்பதற்காக வெளியில்
செல்வதைத் தவிர்க்கமுடியாது. இன்றைய காலக்கட்டத்தில் பூச்சி கொல்லி மருந்து
பயன்படுத்தாத உணவு தானியங்களையும், பாக்கெட் உணவுகளையும் தவிர்க்க முடியாது.
ஆனால் இவற்றால் உருவாகும் நச்சுப் பொருள்களை வெளியேற்ற முயற்சி செய்யலாமே!

               அதெலாம் சரி, எனக்கு இது அவசியம் தானா  என்கிறீர்களா? கேள்கிற
கேள்விகளுக்கெல்லாம் பட் பட்ணு பதில் சொல்லுங்கள். “நீங்கள் அதிகம் மன உளைச்சல்
தரக்கூடிய பணியில் இருக்ககிறீர்களா? இரவில் அதிக நேரம் கண் விழிக்கிறீர்களா?
வறுத்த உணவுகள்  இறைச்சி, அரிசி,  உருளைக்கிழங்கு, டின்னில் அடைக்கப் பட்ட
உணவுகள், ஆல்கஹால், கெமிகல் கலக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை ஒரு பிடி
பிடிக்கிறீர்களா? பகலில் குறைவாகவும், இரவில் அதிகமாகவும் சாப்பிடுகிறீர்களா?
அலுப்பாகவும் சோம்பலாகவும் உணர்கிறீர்களா? ” “ஆமாம்பா, ஆமாம்” என்கிறீர்களா?
அப்படின்னா நீங்கள் உடனே களத்தில் இறங்க வேண்டியதுதான்.

                  டிடாக்ஸ் டயட்டின் பால பாடம் உங்கள் உணவு முறையில் இருந்து
பதப்படுத்தப்பட்ட, வற்க்கப்பட்ட உணவுகளையும், கூல் டிரிங்ஸ், ஆல்கஹால்,
நிகோடின் ஆகியவற்றை அறவே நீக்கிவிடுவது என்பதுதான்.புதிய பழங்கள், காய்கறிகள்,
சாறுகள் அகியவற்றுடன் நிறைய திரவ உணவுகள் சேர்த்துக் கொள்ளுங்கள். முதல் இரண்டு
நாட்களுக்ககு மண்டைக்குள் மின்னல் அடிச்சி மின்மினி பறப்பது போலத் தொன்றும்.
தலைவலி, மயக்கம் போன்ற அறிகுறிகள் தோன்றலாம். இதற்கெல்லாம் அசரக் கூடாது.
”இதெல்லாம் சகஜமப்பா!” ந்னு தாண்டிப் போய்விடவேடும்.


                    இரண்டுநா முதல் ஒரு வாரம் வரை இந்த உணவு முறையைத்
தொடர்ந்தால் உடல் புத்துணர்ச்சி அடையும். பொதுவாக பெரும்பாலான நச்சுப்
பொருள்கள் உடலின் கொழுப்புதிசுக்களில் (fatty tissues) இடம் பெறிருப்பதால்,
உடலில் நச்சுப் பொருள்கள் திகரிக்கும் போது உடல் எடையும் குடுகிறது. எனஏ
நச்சுப் பொருள்களை வெளியேற்றுவதன் மூலம் டிடாக்ஸ் டயட் உடல் எடையைக் குறைக்க
வழிவகுக்கிறது.

                    புகைபிடிப்பது, மடது அருந்துவது, பதப்படுத்தப்பட்ட மற்றும்
எண்னெய், நெய் சேர்ந்த இனிப்பு உணவுகளை உண்பது ஆகியவைதான் நச்சுபொருள்கள் சேர
முக்கிய காரணிகள். எனவே சோளமாவு, வெள்ளை அரிசி, உருளக்கிழங்கு வெள்ளைச்
சர்க்கரை, பாலாடைக் கட்டி, ரொட்டி போன்றவற்றைத் தவிர்ப்பது அல்லது குறைப்பது
நல்லது.

                     தவிர்ப்பதற்குப் பதிலாக நிறைய காய்கறிகள்
சாப்பிடலாம்.பழங்கள், சாறுகள், மூலிகை டீ ஆகியவறைச் சேர்த்துக்கொள்வதும்
நல்லது. சமைப்பதற்கு அலுமினியன் பாத்திரங்களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
அலுமினியத்தில் தேய்க்கத்தேய்க்க ஒரு கருப்புக் கழிவு வந்துகொண்டே இருக்கும்.
நச்சுப் பொருள்களுடன் சேர்ந்து அல்சீமர் நோய் (Alzheimer's disease) ஏற்பட
வாய்ப்புள்ளது. இந்த உணவு முறை இப்படி சேரும் நச்சுப் பொருள்களைத் தவிற்கிறது,
புத்துணர்ச்சி அளிக்கிறது. ஈரல், சிறு நீரகங்கள் இவற்றின் செயற்பாடுகளை
மேன்படுத்தி கழிவுப்பொருள்களை வெளியேற்றுகிறது.


                      அடடே! பேஷ்! என்று அதிகமாக டிடாக்ஸ் டயட்டில் இருந்தால்
உடலில் ஊட்டச் சத்துகள் குறைந்து, புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் குறைபாடு
ஏற்பட்டுவிடலாம்.

மாதத்திறு ஒருமுறை இதைக் கடைப்பிடித்தால் கூடப் போதும் என்கிறார்கள்
பயன்படுத்டி அறிந்தவர்கள்.

டிடாக்ஸ் டய்ட் முறை

-=-=-=-=-=-=-=--=-=-=-=-=

   - காலை   -இரண்டு டம்ப்ளர் மிதமான சுடு தண்னீர்.(இதில் அரை மூடி
   எலுமிச்சையைப் பிழிந்து கொள்ளவும்)ஒருகப் மூலிகை டீ, இரண்டு அல்லது மூன்று
   பாங்கள்.
   - மதியம்:-- பச்சை சாலட்டுடன் பாதி வேகவைக்கப்பட்ட காய்கறிகள்,(எடையைக்
   குறைக்க விரும்பினால் உருளைக் கிழங்கை த்விர்க்கவும்)
   - தேனீர் ஒரு டம்ப்ளர் காய்கறிச்சாறு
   - இரவு:-- ஒன்று அல்லது இரண்டு சப்பாத்திகள், இத்துடன் சமைத்த காய்கறிகள்,
   மற்றும் பச்சை சாலட் எடுத்துக் கொள்ளலாம்.
   - குறிப்பு:-- நாள் முழுவதும் நிறைய திரவ உணவுகளை உட்கொள்ளவேண்டும்.
   வடிகட்டப்பட்ட அல்லது கொதிக்கவைத்டு ஆறிய குடிநீர், எலுமிச்சைச் சாறு, இளநீர்,
   மூலிகை டீ, ஆகியவற்றைக் குடிக்கலாம். பழங்கள் அல்லது காய்கறிச்சாறுகள்
   குடிக்கலாம். சாறு தயாரிக்கப்பட்ட 20 நிமிடங்களுக்குள்ளாகக் குடித்துவிட
   வேண்டும்.




            திருநெல்வேலி மாவட்டம் சிவசைலம் என்னும் ஒரு அருமையான தலம் உள்ளது.
அங்கு கோரக்கநாதர் என்னும் சித்தரின் பாதம் என்ற ஒரு அமைப்பு ஒரு சிறிய
குகைக்குள் இருக்கின்றது.

ஓரு அன்பர் இயற்கைவைத்தியம் (Naturopathy)  மருத்துவ மனை வைத்து நாள்பட்ட
புரையோடிப்போன தீர்வுகாணமுடியாத நோய்களுக்கு உணவே மருந்தாகத் தந்து
சிகிச்சையளிக்கிறார்.. பணி மனையில் வண்டியைக் கொண்டுவிட்டுவிட்டு சீர்செய்தல்
போன்று சில பத்திய உணவுகளையும் உபவாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு பின்னர் பல
மாதங்களுகு வாழைப்பழமும் துருவிய தேங்காயும் மட்டுமே உணவாகக் கொள்ளச்
செய்கிறார். நோயின் சுவடை உடம்பினின்றும் நீக்கி விட்டு வெற்றி வீரராக நோயாளி
முழுமையான ஆரோக்கியத்துடன் திரும்புகிறார்.

அன்புடன்.வெ.சுப்பிரமணியன் ஓம்.



**

* *

>
>>
>>
>>
>

Reply via email to