aUM v.sUBRAMANIAN ---------- Forwarded message ---------- From: N. Ganesan <[email protected]> Date: 2009/10/31 Subject: [MinTamil] ஒரு இசை தினம்... To: மின்தமிழ் <[email protected]> Cc: [email protected]
http://kalyanje.blogspot.com/2009/10/blog-post_30.html ஒரு இசை தினம்... ஆம்; ஒரு இசை தினம் உங்களை அன்போடு அழைக்கிறது..... வரவிருக்கும் நவம்பர் ஆறு. (06.11.2009) வெள்ளிக்கிழமை மாலை ஆறுமணி. சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம். அன்றைய தினம் ஒரு இசை நிகழ்ச்சி நீங்கள் இதுவரை பார்த்திராத ஒரு இசைப் பிரவாகமாக அமையவிருக்கிறது. இன்றைய பிரபல இசையமைப்பாளர்களிடம் புல்லாங்குழல் இசைக்கலைஞராக அறிமுகமாகி, இன்று சேக்ஸபோன் என்கிற இசைக் கருவியை வாசிப்பதில் தேர்ந்த கலைஞராக அறியப்பட்ட எஸ். நாதனுக்குத் தன் மானசீக குரு எம்.எஸ்.விஸ்வநாதனின் சூப்பர் ஹிட் பாடல்களை ஆயிரக்கணக்கான எம்.எஸ்.வியின் ரசிகர்களின் முன்னிலையில் சேக்ஸபோனில் வாசிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அந்தக் கனவை நினைவாக்க வந்து சேர்ந்திருக்கிறார் தொழிலதிபர் தேவய்யா. இவர் ஐ.டி. துறையில் மிகவும் பிஸியான நபர். உலகம் சுற்றும் தமிழன். அதைவிட மிகப் பெரிய இசை ரசிகர். நவீன டெக்னாலஜியும் இசையையும் சங்கமித்தால் அதன் வீச்சு உலக அளவில் இருக்கும் என்பதையும் அது இசை ஆர்வலர்களை குதூகலப்படுத்தும் என்பதில் நம்பிக்கை உள்ளவர். இவர், எஸ். நாதனோடு இணைந்து இந்த பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை வடிவமைத்திருக்கிறார். நவம்பர்,. 6 மாலை காமராஜர் அரங்கில் நடக்கவிருக்கும் அந்த நிகழ்ச்சியில் எம்.எஸ்.விஸ்வநாதனின் சூப்பர் ஹிட் பாடல்களில் முப்பது முத்தான பாடல்களைத் தேர்ந்தெடுத்து எஸ். நாதன் தன் சேக்ஸபோனில் வாசிக்க, அவரது பின்னணியில் கோரஸ் பெண்மணிகள் உட்பட 45 கலைஞர்கள் இசைக்கருவிகளை வாசிக்க இனிய பாடல்கள் உங்கள் காதுகளை கெளரவப்படுத்தப் போவது உறுதி. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அந்த பாடல்களை, அதன பதிவின் போது நடந்த நிகழ்வினை நீங்களே நேரடியாக அமர்ந்து பார்க்கிற உணர்வினைப் பெறுவீர்கள் என்பது நிகழவிருக்கும் உண்மை. இந்த அரிய நிகழ்ச்சிக்கு நேரில் வந்து ஆசீர்வதிக்க அந்த மாமேதை எம்.எஸ்.விஸ்வநாதனே அரங்கிற்கு வருகை தருகிறார். அன்றைய பாடல்களின் மீது தீராத காதல் கொண்டிருக்கும் இன்றைய முன்னணி திரைப்பட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இந்த அற்புதமான இசை நிகழ்ச்சியைத் துவக்கி வைக்கிறார். இதன் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இதைத் தன் ’மெகா ஜிகா ஷோ’ என்கிற நிறுவனம் மூலம் உலகம் முழுக்க இருக்கிற தமிழர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே இண்டர்நெட் மூலம் கண்டு கழிக்கும் நவீன டெக்னாலஜியை இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்துகிறார், இதனை வடிவமைத்திருக்கும் தேவய்யா. இந்தியா மட்டுமல்ல, உலகமெங்கும் இருக்கும் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவல் சொல்லுங்கள். நீங்கள் காமராஜர் அரங்கில் அனுபவிக்கும் அந்த இசை நிகழ்வினை அவர்களும் இண்டர்நெட் மூலம் மிகத் துல்லியமாக அதே நவம்பர் 6, மாலை 6 மணித்துளிகளில் அவர்களின் இல்லத்தில் இருந்தே அனுபவிக்கலாம். கீழ்கண்ட வெப்சைட்டை க்ளிக் செய்தால் அந்த இனிய நிகழ்ச்சி அவர்கள் கண்முன்னே அவர்களின் கம்ப்யூட்டர் திரையில் விரியும் அற்புதம் நிகழும். இசையால் இதயங்களை இணைப்போம்! www.megagigashows.com நினைவிருக்கட்டும்.... இசை நிகழ்ச்சியின் நாள்; 06.11.09 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6. இடம்: காமராஜர் அரங்கம், தேனாம்பேட்டை, சென்னை. மேலும் மீடியா தொடர்புகளுக்கு: கல்யாண்குமார்: 9382151621, 9500061604 நிகழ்ச்சித் தொடர்புகளுக்கும் megagiga shows குறித்த டெக்னாலஜி மற்றும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் விபரங்களுக்கும்: தேவய்யா: 9940060438
