முகத்துக்கு போடும் க்ரீமை ஃபேஸ் க்ரீம்னு சொல்லாலாம்; கண்களுக்கு போடும் க்ரீமை ஏன் ஐஸ்க்ரீம்னு சொல்லக்கூடாது ? * * * ----------------------------------------------------------------------------- * * "தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்னு இருந்தவங்க, அவருக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாம போகுதுன்னு கேள்விப்பட்டதும்..." "என்ன பண்ணாங்க ? "
"பேஷன்ட் பட்டம் கொடுத்துட்டாங்க" -------------------------------------------------------------- அப்பாவின் கையில் டிவி ரிமோட் அம்மாவின் கையில் அப்பா ரிமோட் கே : ‘இந்த இரு இடைத் தேர்தல்களிலும், 49(0) பிரிவை பயன்படுத்த பா.ம.க. முடிவெடுத்துள்ளது’ – என்ற டாக்டர் ராமதாஸின் கருத்தைப் பற்றி? ப : உண்மையில் ‘0’ ஓட்டுதான் தங்கள் கட்சிக்குக் கிடைக்கும் என்பதை பா.ம.க. உணர்ந்ததால்தான் இந்த முடிவு. வெறும் ‘0’ என்று சொல்லாமல், ‘49(0)’ என்று சொல்லியிருக்கிறார். அது, சும்மா. --------------------------------------------------------------------------- [image: இட்லிவடை - Idlyvadai]News items??? இரண்டு ரூபாய்க்கு என்ன எதிர்பார்க்க முடியும் <http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_9536.html> ? பலர் ஏன் தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு பற்றி எழுதவில்லை என்று கேட்டுள்ளார்கள். என்ன தைரியத்தில் என்ன நம்பிக்கையில் அப்படி கேட்டார்கள் என்று தெரியவில்லை.. நான் போட்டு என்ன ஆகப்போகிறது ? இன்று சனிக்கிழமை என்பது போல சில நாளிதழ் அதை நீயூஸாக போட்டார்கள்.. போன முறை தினமலர் கண்ணீர் அஞ்சலி என்று உயிர் இழந்தவர்களின் படங்களை போட்டார்கள். இந்த வருடம் அது கூட இல்லை. தினகரன் பத்திரிகையே அதை கண்டுக்கொள்ளவில்லை. "இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை விட மாட்டேன்" என கலாநிதி மாறன் சபதம் செய்தார்.. எப்போது ? உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகையில். இப்போது அவர் அதை மறந்துவிட்டார். பாவம் அவருக்கு வேட்டைக்காரன் 18 ரீலீஸ் கவலை. எங்களுக்கு இடையில் காற்று கூட புக முடியாது என்று இப்போது மார்தட்டுகின்றனர். சீக்கிரமே கலாநிதி மாறன் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிப்பார்கள். அப்பறம் எதற்கு இதை கண்டுகொள்ள வேண்டும் ? குடும்ப சண்டையில் மூன்று பேர் கொளுத்தப்படார்கள் அவ்வளவு தான். குற்றம் சாட்டப்பட்ட வர்கள் எல்லோரும் விடுதலை. முடிந்தது கதை. அதுமட்டுமா ? ராயல் கேபிள், அரசு கேபிள் என்று எல்ல்லாம் முடிவுக்கு வந்தது. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை வீசிக் கொண்ட பிறகும், இருவருமே ஒரே கட்சியின் பிரதிநிதிகளாய் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். நேற்று முன்தினம் இந்திய ஜவுளித் துறையை சிறப்பிக்கும் வண்ணம் நடைபெற்ற தபால்தலை வெளியீட்டு விழாவில், தபால்தலையை ஜனாதிபதி வெளியிட, வாயெல்லாம் பல்லாக பெற்றுக் கொண்டவர்கள் இவ்விருவரும்தான். முன்னர் ஒருவர் மீது ஒருவர் சேற்றையள்ளி இறைத்தனர். கங்கையே சுனாமியாக வந்தால் தான் இந்தியாவின் பாவத்தை கழுவ முடியும். இந்த கேஸ் என்று சி.பி.ஐக்கு போனதோ அன்றே அதை சவக்குழிக்குள் போட்டு அடக்கம் செய்துவிட்டார்கள். சினிமாவில் மம்மூட்டி நடிக்கும் சி.பி.ஐ வேற நிஜத்தில் இருக்கும் சி.பி.ஐ வேற. இவர்கள் ரிடையர் ஆன பின் ஏதாவது புத்தகம் எழுதும் போது சில உண்மைகள் வெளியே வரும் என்று நம்புவோம். அவ்வளவு தான். கோர்ட் என்ன செய்ய முடியும் ? எல்லோரையும் சட்டப்படி விடுதலை செய்துவிட்டது. அவர்களுக்கு தேவை சாட்சி. முதல் சாட்சியான போலீஸ் துணை ஆய்வாளர் உள்பட அனைத்து சாட்சிகளும் பல்டி அல்லது சாட்சி அளிக்காததால் எல்லா குற்றவாளிகளும் விடுதலை. அடுத்த ரூமில் கருவாட்டு குழம்பு சாப்பிட்டாலே நமக்கு தெரிகிறது ஆனால் நீதிபதிகள் "Did not smell anything fishy"! நல்ல கூத்து. சட்டம் தன் கடமையை செய்யும் என்பது இது தான்!. மதுரையில் தினகரன் அலுவலகம் கொளுத்தபட்டதும் அங்கு மூவர் கொல்லப்பட்டதும் அதை சன் டிவியில் அடிக்கடி போட்டு அழகிரி ரவுடி என்று சொன்னது எல்லாம் பொய். டிவியில் பார்த்தது எல்லாம் கிராப்பிக்ஸ் என்று போலீஸ் சொன்னாலும் அதை கோர்ட் நம்ப வேண்டும். அது தான் நம்ம சிஸ்டம். தினகரன் சம்பவத்தைப் பற்றி ஒருவருமே சாட்சியம் அளிக்கவில்லை என்பதை பார்க்கும் போது அரசுத் தரப்பு எப்படி நடந்துக்கொண்டது என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. தமிழக அரசு சின்னத்தில் கோயில் இருக்கிறது, நிச்சயம் ஆண்டவனுக்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டும். நம்பிக்கை தானே வாழ்கை! கடைசியில் குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே வந்துவிட்டார்கள். 'பத்திரிக்கை சுதந்திரம் பத்திரிக்கை சுதந்திரம்' என்று ஒருவர் அடிக்கடி சொல்லுவார் இப்ப தான் அது என்ன என்று புரிந்தது. *
