ஓம்
நடராஜர் ஒருகாலைமட்டும் பூமியில் ஊன்றித் தாண்டாவம் செய்வது ஏன்?
இக்கேள்விகான விடையை ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் தமக்கே உரிய பாணியில்
கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
சிவபெருமானே, ஆடலரசனாகத் தில்லையில் நீர்ஆடுவதே பதஞ்சலி முனிவருக்காகத்தான்.
பதஞ்சலி தம் ஜென்மம் ஈடேற உம் திருக் கூத்தைத் தரிசிக்கவேண்டும் என்று வரம்
கேட்டார். அதற்கிசைந்தே தாம் கனகசபையில் ஆடுகின்றீர். அப்படி ஆடும்போது
அவ்வடியாராகிய பதஞ்சலிய் முனிவரைத் தாங்கள் மறக்கவில்லை. ஏனென்றால், பதஞ்சலி
யாரோ இல்லை. இப்பூவுலகைத் தம் படம் கொண்ட தலையில் தாங்கிக் கொண்டுள்ள ஆதி
சேஷன்தான் பதஞ்சலியாக உருவெடுத்து வந்துள்ளளார் என்பது தங்களுக்குத் தெரியும்.
அதனால், நடராஜப் பெருமானே! தங்களுடைய இரண்டு திருவடிகளையும் பூமியில்
ஊன்றி நடனம் செய்தால் அது பதஞ்சலி உருவில் உள்ள ஆதிசேஷனுக்குத் தாங்க முடியாத
பெரும் பாரமாக ஆகிவிடும் என்று எண்ணித்தான் தங்களின் ஒரு திருவடியை மட்டும்
பூமியில் ஊன்றித் தாண்டவம் ஆடுகின்றீரா? அப்படி ஆடவேண்டும் என்று
பதஞ்சலிமுனிவர் தங்களிடம் வரம் வாங்கிக் கொண்டாரா?
சலியா நடம் செய்வோய் வரம் ஒன்று::
இரண்டு மலர்த்தாளும் ஊன்றின் மாமகுடம்
பாரம் ஒன்றும் என்றுகொல்லோ?
வரம் கொண்டார் அப்பதஞ்சலியே.
(பாரம் ஒன்றும் பாரம் கூடிவிடும்; என்று கொல்லோ- என்றா?)
மும்மணிக்கோவை: ஸ்ரீ குமரகுருபரர்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
நன்றி:தர்மச் சக்கரம்,
வெ.சுப்பிரமணியன் ஓம்