*
*
* *
**
**
** <http://in.groups.yahoo.com/group/iruvar_ullam/>**
** <http://in.groups.yahoo.com/group/iruvar_ullam>
**
*உன்னோடான மகிழ்வான*
*நாட்களை நினைவுகூர்கிறேன்...*
*அழகிய வேலைப்பாடு மிகுந்த*
*பாத்திரம் என்னுடையது...*
*உன் தோழனென்பது...*
* *
*வார்த்தை ஸ்வரங்களை *
*மீறிப் பீறிடும் ஒலி *
*இசையாகிறது..*
*உன்னோடான நட்பும் அப்படித்தான்..*
*நினைக்க நினைக்க இனிக்கிறது...*
* *
*அந்த இன்ப நாட்களின்*
*நினைவுகள் நெஞ்சிலாட*
*வாழ்த்துகள் சிலகோடி...*
* *
*உனக்கு ஞாபகமிருக்கக்கூடும்...*
*நம் நட்பைக் களங்கம் செய்த*
*உன் உறவினன் சொல்கேட்டு*
*பதறிய என்னைக் கண்டு*
*சொன்னாய்...*
*“அவன் மூன்றாமவன்...*
*அதனால் மறந்துவிடு என்று....”*
* *
*அந்த நீண்ட நினைவுகளில்*
*பெருமைகொண்டு *
*சிலிர்த்தது சுவாசம்..*
*தானாகவே பூத்தது கண்ணீர்...*
*காரணமில்லாமல் *
*கடவுளுக்கு நன்றி சொன்னேன்*
*உன் நட்பு கிடைத்ததற்கு...*
* *
*இன்றும்*
*காரணமில்லாமல் கடவுளை*
*வேண்டுகிறது நெஞ்சம்..*
*நீ இனிய வாழ்வு பெற *
*வேண்டுமென்று...*
* *
*இப்பொழுதும்*
*என் கண்களில் பூக்கும்*
*கண்ணீருக்கும் காரணமிருக்கக்கூடும்... *
*ஒருவேளை நானும்*
*மூன்றாமவனாகிவிட்டேனோ... என்று..*
* *
<http://in.groups.yahoo.com/group/iruvar_ullam> * *
*__._,_.___*
**
*.*
*
*
*__,_._,___*