* * பொழுது போகலைன்னா இப்படியா?.... * *
*ஆய்வாளர்: ஏன் அந்தப்பையன், க்ளாஸ்ரூமுக்கு வெளியே நிக்கிறான்??..* * * *தலைமையாசிரியர்: ஹி..ஹி.. அவந்தான் எங்க ஸ்கூலோட outstanding student.* * * * ************************************************************************************** * * * *ஒரு இண்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகள்;* * * 1. *ப்ரூஸ்லிக்கு பிடித்த டிபன்-------------------------- இட்லி. * 2. *பிடித்தமான நாடுகள் ------------------------------- சிலி, இத்தாலி. * 3. *பிடித்தமான விளையாட்டு வீரர் ------------------- ப்ரெட்லி * 4. *பிடிக்காத வியாதி ------------------------------------ தலைவலி.* *இப்படிக்கு : அடுத்த இண்டர்வியூவை எதிர் நோக்கியிருப்போர் சங்கம்..* * * * *************************************************************************************** * * * *தேங்காய் சட்னி தயாரிப்பது எப்படி?...* * * *அம்மியில் ------சர்ர்ரக்,..சர்ர்ரக்,.. சர்ர்ரக்.. சர்ர்ரக்..* * * *மிக்ஸியில்----- சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.* * * *(சட்னி சாப்பிட்டே நொந்து போனோர் சங்கம். தலைவராக இருக்க, சட்னி அரைப்பதில் முன் அனுபவம் பெற்றோர் வரவேற்கப்படுகிறார்கள்)* * * * ************************************************************************************** * * * *ஒருத்தர் ஒரு பல்கலைக்கழக வாசலில் நின்னுக்கிட்டு வேகவேகமா எதையோ எழுதிக்கிட்டிருந்தார். ஆர்வம் தாங்காத ஒருத்தர் அவர்கிட்டே போய் ,'என்னப்பா எழுதறீங்க?'ன்னு கேட்டார்.* * * *எழுதிக்கிட்டிருந்தவர் சொன்ன பதில்: "பாத்தா தெரியலை??... நுழைவுத்தேர்வு எழுதிக்கிட்டிருக்கேன்".* * * * ****************************************************************************************** * * * *மூக்குல அணிஞ்சிக்கிறதாலதான் மூக்குக்கண்ணாடின்னு சொல்றோமாம். அப்படீன்னா பூதக்கண்ணாடிய பூதமா அணிஞ்சிக்கிடுது. யாராச்சும் பதில் சொல்லுங்களேன்.* * * *யக்கா... நீ சொல்லேன்!!,. யண்ணே நீ சொல்லேன்,.!!!* * * * * * ************************************************************************************************** * * * *"செடி கொடிகள்லாம் பச்சையா ஏன் இருக்கு தெரியுமா?.."* * * *"ஏன்னா,.. அதுக்கு பச்சைத்தண்ணி ஊத்துறோம்ல அதான்"* * * *அலோ .. யாருப்பா அது?!!.. இத ஏற்கனவே கேட்டாச்சுன்னு சொல்றது??.. நம்ம டவுட்டே வேற...* * * *"பச்சைத்தண்ணி ஊத்தி செடியெல்லாம் பச்சையா இருக்குன்னா,... பூவெல்லாம் கலர்கலரா எப்படிப்பா பூக்குது?... பச்சையா ஏன் பூக்கமாட்டேங்குது!!!!!!!!"* * * * ************************************************************************************* * * * *எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் எல்லாத்துக்கும் மருந்து, தடுப்பூசின்னு எல்லாம் கண்டுபிடிச்சிருக்காங்க,.. இந்த புளிக்காய்ச்சலுக்கு யாராச்சும் ஏன் மருந்து கண்டுபிடிக்கலை?.....* * * *( கேள்விமட்டுமே கேட்கத்தெரியும்ன்னு சொல்லுவோர் சங்கம். எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது).* * * * ****************************************************************************************************** * * * *முதலாமவர்: அந்த தாத்தாவுக்கு ஏதோ பரிசு கிடைச்சிருக்காமே!!!! என்ன பரிசு?.* * * *இரண்டாமவர்: நோ 'பல்' பரிசு..* * * * * * *************************************************************************************************** * * * *ஒருத்தர் ஒரு காட்டுவழியா நடந்து போயிட்டிருந்தார். அப்போ அவர்முன்னால் இருந்த மரக்கிளையில் பாம்பு ஒண்ணு தொங்கிக்கிட்டிருந்ததை பார்த்தார். அதைப்பார்த்து பயப்படுவார்ன்னு நினைச்சா,..நேரா அதுகிட்ட போயி ஏதோ சொன்னார். அதைக்கேட்டதும் பாம்பு கேவிக்கேவி அழ ஆரம்பிச்சிட்டது. அப்படி அதுகிட்ட என்னதான் சொன்னார்?..* *"* *"* *"* *"* *"* *"* * * *"இதப்பார்... இப்படி தொங்குறதால ஒண்ணும் பிரயோஜனமில்லை.. அம்மாவை காம்ப்ளான் கொடுக்கச்சொல்லு".* * * * **************************************************************************************************** * * * *ஒரு பையன் ராத்திரி ரொம்ப நேரம் கழிச்சு வீட்டுக்குப்போனான். அவங்கப்பாவுக்கு செம கோவம்.. கூப்பிட்டு செம காய்ச்சு காய்ச்சினார். 'இல்லேப்பா,.. என் ஃப்ரெண்ட் வீட்டுக்குத்தான் போனேன்'ன்னு சொல்லியும் அவர் நம்பலை. ஒடனே 'எந்த ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிருந்தேன்னு நானே கண்டுபிடிக்கிறேன்'னு சொல்லிட்டு ஒவ்வொருத்தருக்கா ஃபோன் பண்ணார்.* * * *அஞ்சு பேரு, 'ஆமா அங்கிள், இங்கேதான் இருந்தான்'ன்னு சொன்னாங்க.* * * *மூணு பேரு, ' அங்கிள், இப்பத்தான் அவன் எங்க வீட்டுலேர்ந்து கிளம்பினான்'ன்னு சொன்னாங்க.* * * *ரெண்டு பேரு,' அங்கிள், அவன் எங்க கூடத்தான் உக்காந்து படிச்சிக்கிட்டிருக்கான். நாளைக்கு எக்ஸாம் வருதில்லையா!! டிஸ்டர்ப் பண்ணவேணாம்..ஏதாச்சும் சொல்லணுமா'ன்னு கேட்டாங்க.* * * *ஃப்ரெண்ட்ஷிப்போட பவர் என்னன்னு இப்பவாவது தெரியுதா... *
