குணங்குடியார் பாடல்களில் சில: உமையாள் பாதம் முன்னிற்க*
(*இப்பாடல் சேகனாப் புலவருடையது) ஆதியந்தங் கடந்தவுமையாள்தன் பாதம் அகண்டபரி பூரணமாம் ஐயர் பாதம் சோதியந்தங் கடந்த கணபதியின் பாதம் தொழுதிறைஞ்சிக் கரங்குவித்துப் போற்றி செய்து ஆதியந்தங் கடந்ததந்தி பாதம் என்றும் வாலைமனோன் மணியம்மை பாதமென்றும் ஓதியந்தங் கடந்தண்டம் இரண்டதாக ஒன்றுமறி யாவறிஞ னுரைசெய்தானே. நந்தீஸ்வரக்கண்ணி ஆதியந்தங் கடந்தவுமை யாளர்ருள் நாதாந்தச் சோதியயந்தங்க் கடந்தசெழுஞ் சுட்ரே நந்தீஸ்வரனே! முடியடியாய் நின்றநடு மூல மணிவிளக்கே அடிமுடியாய் நின்றநடு அணையேநந்தீஸ்வரனே .............................................................................. .................................................................................... ................................................................................... .................................................................................... இராகம் கேதார கௌளம்; தாளம் ஆதி பல்லவி சூத்திரப் பாவை கயிறறு வீழுமுன் சூட்சக் கயிற்றினைப் பாரடா-அதி சூட்சக் கயிற்றறினைப் பாரடா....... (சூத்தி) அநுபல்லவி நேத்திரமிரண்டினும் நேரேயிலங்கிய நீடொளி போன்றது தேடரிதாகிய காத்திரமுள்ளது யாவும்பொதிந்தது கையிலுங் காலிலு மெட்டப்படாததோர் ... (சூத்தி) சரணங்கள் 1.சாத்திர வேதஞ் சதகோடி கற்றாலும் சமய நெறிகளி னாசாரம் பெற்றாலும் பாத்திர மேந்திப் புறத்தி லலைந்தாலும் பாவனை யாலுடலுள்ள முளைந்தாலும் மாத்திரைப் போது மெமன்வரு மப்போது மற்றொன்றுதவாதுதவா துவாது சூத்திரமாகிய தோணி கவிழுமுன் சுக்கானை நேர்படுது திக்கணமே சொன்னேன் ..(சூத்தி) 2.உற்றுறவின் முறை யார் சூழ்ந் திருந்தென்ன ஊருட்சனங்களெல் லாரும் பணிந்தென்ன பெற்றாரும் பெண்டீரும் பிள்ளை யிருந்தென்ன பேணும் பெருஞ்செல்வ ஆணவத்தாலென்ன கத்தன் பிரிந்திடிற் செத்த சவமாச்சு காணாது காணாது கண்டதெல் லாம் போச்சு எத்தனை பேர்நின்று கூக்குர லிட்டாலும் எட்டாமற்போய்விடுங் கட்டையல் லோவிந்தச்... (சூத்தி) 3.மாயப்பிறவி வளையை யடைத்திட மாறாத் தியான மனத்தி னினைத்திட காயா புரிக்கோட்டை கைக்கு ளகப்பட காணு மணிச்சுடர் தானே விளங்கிட ஆயுமறிவுடன் யோக்த்தி னாலெழும் ஆனந்தத் தேனையுண் டன்புடனேதொழும் தாயா யுலகத்தை யீன்ற குணங்குடித் தற்பரனைக் கொண்டு வப்புடனே சென்று (சூத்தி) வெ.சுப்பிரமணியன் ஓம்.
