*Thanks to Min Tamil - Mr. Krishnamurthy* *கட்டாய ஓய்வும் தேர்தல் முடிவுகளும்!
"தமிழ்நாட்டு மக்கள் எனக்கு ஓய்வளித்திருக்கிறார்கள்" என்று மு.கருணாநிதி* * கருத்து தெரிவித்திருக்கிறார்.அறுபது வயது என்பது சாதாரணமாக உழைப்பவர்களுக்கு ஒய்வு பெறும் வயதாக இருக்கையில், அரசியல்வாதிகளுக்கு மட்டும் சாகிற வரையில், அல்லது தேர்தலில் இப்படிக் கேவலமாகத் தோற்கடிக்கப் பட்டு வீட்டுக்கனுப்பினால் தான் ஒய்வு பெறுவதைப் பற்றியே அவர்கள் யோசிக்கிறார்கள் என்பதை, ஜனங்களாகிய நாம் ஏன் யோசிப்பதே இல்லை? இங்கே இந்தியத் தேர்தல் முறைகளில் இருக்கும் மிகப்பெரிய கோளாறு இது!* * ஐந்து முறை முதல்வர், வாழ்நாள் முதல்வர், நிரந்தர முதல்வர், பிரதமர் என்பதெல்லாம் இந்தியத் திருநாட்டில் மட்டும் தான்! ஒருவர் இருமுறைக்கு மேல், முக்கியப் பொறுப்புக்களில் பதவி வகிக்கக் கூடாது என்று ஏன் விதிமுறை வகுக்கக் கூடாது? "ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 2010 ஆம்* * ஆண்டு முழுவதும் ஒவ்வொரு ஊழலாக வெடித்துக் கிளம்பிக் கொண்டு, ஊழல்கள் வெளிவரும் ஆண்டாக இருந்தது, இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஐந்து மாநில தேர்தல்கள் முக்கியத்துவத்தைப் பெறுகின்றன." இப்படி எழுதி சரியாக இரண்டு மாதங்கள் ஆகின்றன! ஒவ்வொரு தேர்தலும்* * தன்னளவில் சில பொதுவான அம்சங்களையும் அதே நேரத்தில் வித்தியாசமான அம்சங்களையும் கொண்டிருப்பது தெரிந்திருந்தாலும், இரண்டையும் சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்வதில் தான் சரியான அணுகுமுறை, அனுமானங்கள் எல்லாம் கிடைக்கும் என்பதை இன்னொரு அழுத்தமாக இப்போது நடந்து முடிந்த ஐந்து மாத சட்டசபைத்தேர்தல்கள் சொல்லியிருக்கும் செய்தி! ஆனால், இந்தத் தேர்தல்களில், குறிப்பாகத்தமிழகத்தில் நடந்த தேர்தல்களில்* * பாராட்டப்பட வேண்டியது தேர்தல் ஆணையம் தான் என்பதில் இருவிதமான கருத்துக்களுக்கு இடமில்லை. சுவர் விளம்பரம், ஆர்ப்பாட்டமான ப்ளெக்ஸ் பானர்கள், திருட்டு மின்சாரம் எடுத்து ஒளிரும் கட் அவுட்டுகள், காதைக் கிழிக்கும் தேர்தல் பிரசாரங்கள், எதுவுமில்லாமல் நாற்பது, நாற்பத்தைந்து ஆண்டுகளில் நடந்த முதல் தேர்தல் இது. திருமங்கலம், பெண்ணாகரம் இடைத்தேர்தல்களில் கடைப்பிடித்த* * "தாராளத்தை"அப்படியே பின் பற்றுவதில் தேர்தல் ஆணையம் எடுத்த சில நடவடிக்கைகளே, முழுமையாகத் தடுத்து நிறுத்தாவிட்டாலும் கூட, குறைப்பதில் மிக உதவியாக இருந்தது என்பதில் சந்தேகம் இல்லை. தமிழகத் தேர்தல் ஆணையாளர் பிரவீன் குமாருக்கு நன்றி சொல்லக்* * கடமைப்பட்டிருக்கிறோம். திமுக தேர்தலில் தோற்றதோடு, அதன் பிரச்சினைகள் முடிந்துவிடவில்லை!* * நாளை, கனிமொழியின் ஜாமீன் விண்ணப்பத்தின் மீது சிபிஐ நீதி மன்றம் என்ன* * ம்சுடிவு சொல்லப் போகிறது என்பது கேள்விக் குறியாக, பின்தொடரும் நிழலாக இருக்கிறது. பி அமிர்தம் கொடுத்த வாக்குமூலம் நிலைமையை மேலும் சிக்கலாக்கலாம். அதற்குப் பிறகு பத்துநாளில், வருகிற இருபத்து நான்காம் தேதி, தயாளு* * அம்மாளின் பெயரை ஏன் விட்டார்கள் என்ற ஒரு தனியார் புகார் விசாரணைக்கு வருகிறது. அதைக் கொஞ்சம் அவகாசம் கேட்டு வாதாடினாலும், சிபிஐ அடுத்த துணைக் குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படுவது அநேகமாகத் தவிர்க்க முடியாது என்றே தெரிகிறது.* -- *“Be thankful to Almighty what you have. * *Someone else has less than what you have.* *Help wherever you can with whatever you have.” * *…. HAVE A GREAT DAY* [image: Please wait while images are being loaded.....by Wowmailz]Vanakkam Subbu[image: Please wait while images are being loaded.....by Wowmailz] *வணக்கம் சுப்பு**
