2011/6/24 Nakinam sivam <[email protected]>
> > > ** > <http://senthilvayal.wordpress.com/author/senthilvayal/> விண்டோஸ் 7 > சிஸ்டம் > ரெஸ்டோர்<http://senthilvayal.wordpress.com/2011/06/24/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d-7-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b/> > *vayal <http://senthilvayal.wordpress.com/author/senthilvayal/>* | ஜூன் > 24, 2011 at 2:45 பிற்பகல் | Categories: கம்ப்யூட்டர் > செய்தி<http://senthilvayal.wordpress.com/?cat=6309446>| URL: > http://wp.me/pewfk-2Zj > > விண்டோஸ் கிராஷ் ஆகி, கம்ப்யூட்டர் பயன்பாடு முடங்கிப் போகும் போது, முந்தைய > நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயங்க வைத்திட, விண்டோஸ் சிஸ்டம் > தனக்குள் கொண்டிருப்பது சிஸ்டம் ரெஸ்டோர் வசதியாகும். இதனை உருவாக்கிப் > பயன்படுத்துவது குறித்து ஏற்கனவே கம்ப்யூட்டர் மலரில் பல கட்டுரைகளும், > டிப்ஸ்களும் இடம் பெற்றுள்ளன. > விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், இந்த சிஸ்டம் ரெஸ்டோர் இன்னும் கூடுதல் > வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்துவது எளிது என்றாலும், > புத்திசாலித்தனமாக இதனைப் பயன்படுத்தினால் அதிகம் பயன் கிடைக்கும். அதனை > எப்படிப் பயன்படுத்துவது என இங்கு பார்க்கலாம். > 1. ஆண்ட்டி வைரஸ் தொகுப்புடன் செயல்பாடு: சிஸ்டம் ரெஸ்டோர், உங்கள் > கம்ப்யூட்டரில் நிறுவப்பட்டுள்ள ஆண்ட்டி வைரஸ் தொகுப்புடன் இணைந்து > செயல்படுகிறது. சிஸ்டத்தினை மீண்டும் குறிப்பிட்ட ஒரு பழைய நிலைக்குக் கொண்டு > வருகையில், சிஸ்டத்தினை ஸ்கேன் செய்திட, ஆண்ட்டி வைரஸ் தொகுப் பினைத் > தூண்டுகிறது. சிஸ்டம் ரெஸ்டோர் செய்யப்படுகையில், ஏதேனும் ஒரு பைல் > கெடுக்கப்பட்டு இருப்பின், ஆண்ட்டி வைரஸ் அதனை அப்படியே தனியே ஒதுக்கி > வைக்கிறது. ஆனால், ரெஸ்டோர் பாய்ண்ட்டில், கெடுதலுக்கு ஆளான பைல் ஒன்று > இருந்து, அதனைத்தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆண்ட்டி வைரஸ் > தொகுப்பைத் தற்காலிகமாக ஒதுக்கி நிறுத்தி வைத்து, நெட்வொர்க்கிலிருந்து > கம்ப்யூட்டரைப் பிரித்து வைத்து, பின்னர் ரெஸ்டோர் பாய்ண்ட்டைப் பயன்படுத்த > வேண்டும். ரெஸ்டோர் வேலை முடிந்த பின்னர், ஆண்ட்டி வைரஸ் கொண்டு, கெடுக்கப்பட்ட > பைலைச் சரி செய்திட வேண்டும்; அல்லது நீக்க வேண்டும். > 2. ஆண்ட்டி வைரஸாக ரெஸ்டோர் பாய்ண்ட்? ரெஸ்டோர் பாய்ண்ட் ஒன்றுக்கு நாம் > கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதன் மூலம், ரெஸ்டோர் பாய்ண்ட் வசதியை > ஆண்ட்டி வைரஸ் புரோகிராமிற்குப் பதிலாகப் பயன்படுத்தலாம் என்று எண்ணக் கூடாது. > ரெஸ்டோர் பாய்ண்ட் கொண்டிருக்கும் பழைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு > செல்வதன் மூலம், கம்ப்யூட்டரைத் தாக்கிய வைரஸிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள > முடியும் என்று முடிவெடுக்கக் கூடாது. வைரஸை நம்மால் இந்த வழியில் நீக்க > முடியாது. சிஸ்டம் ரெஸ்டோர், யூசர் டேட்டா எதனையும் சரிப்படுத்தாது; எனவே > பாதிக்கப்பட்ட பைல், சிஸ்டம் ரெஸ்டோர் செய்யப்படுவதனால் சரியாகாது. எனவே > கெட்டுப்போகாத பழைய நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல முடியாது. > 3. ஒன்றுக்கு மேலாக நல்ல ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ்: சிஸ்டம் ரெஸ்டோர் வசதி, > ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளை உருவாக்கி வைத்துக் கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது. > விண்டோஸ் சிஸ்டம் அப்டேட் செய்யப்படும் போதெல்லாம், விண்டோஸ் 7 சிஸ்டம் தானாக > ரெஸ்டோர் பாய்ண்ட்டுகளை உருவாக்கிக் கொள்கிறது. இருப்பினும், நாமாக, > கம்ப்யூட்டர் மிக நன்றாக, அதிகபட்ச திறனுடனும், வேகத்து டனும் செயல்படுகையில், > ஒன்றுக்கும் மேற்பட்ட ரெஸ்டோர் பாய்ண்ட்டுகளை உருவாக்கி வைத்துக் கொள்ள > வேண்டும். எடுத்துக்காட்டாக, நீங்களாக ஏதேனும் அப்டேட் பைலை இயக்கி, > கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்த முனைவதாக இருந்தால், > அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், அதற்கு முன் உள்ள > நிலையில் ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்கிக் கொள்வது நல்லது. > நீங்களாக, ரெஸ்டோர் பாய்ண்ட் உருவாக்க, Start அழுத்தி, Computer என்பதில் ரைட் > கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Properties என்பதில் கிளிக் > செய்திடவும். இங்கு System Protection என்பதில் கிளிக் செய்து, அதில் உள்ள > Create பட்டனில் கிளிக் செய்திட வேண்டும். இங்கு உங்களிடம் பெயர் ஒன்று > கேட்கப்படுகையில், அந்த ரெஸ்டோர் பாய்ண்ட்டிற்கு ஒரு பெயரினை நீங்கள் தர > வேண்டும். அந்த பாய்ண்ட்டினை அடையாளம் காணும் வகையில் ஏதேனும் ஒரு பெயர் > தரலாம். எடுத்துக்காட்டாக, PreService Pack 1 என்றோ, Before Tamil Business > installation எனவோ தரலாம். > 4. பாதித்த பைல்களை ஸ்கேன் செய்திடுக: ரெஸ்டோர் செய்திடுகையில், சிஸ்டம் > ரெஸ்டோர் டூல், பாதித்த பைல்களை ஸ்கேன் செய்வதாக செட் செய்திடவும். ஏதேனும் > புரோகிராம் அல்லது ட்ரைவர் பைல் ஒன்று, பாதிக்கப்பட்டதாகக் காட்டப்படலாம். > ஆனால், அவற்றைச் சரிப்படுத்தி, இழக்க நீங்கள் விரும்பாமல் இருக்கலாம். > அந்நிலையில் ரெஸ்டோர் செய்வதனை நிறுத்தி, அதற்கு முந்தைய ரெஸ்டோர் > பாய்ண்ட்டிற்குச் செல்லலாம். > 5. எக்ஸ்பியுடன் டூயல் பூட்டிங்: உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 மற்றும் > விண்டோஸ் எக்ஸ்பி என இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து இயக்கப்பட்டுக் > கொண்டிருப்பின், சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. விண்டோஸ் எக்ஸ்பியில் இயங்க > முற்படுகையில், விண்டோஸ் 7 ரெஸ்டோர் பாய்ண்ட்ஸ் அனைத்தும் நீக்கப்பட > வாய்ப்புண்டு. இதனால் இழப்பு நமக்குத்தான். இதற்கு தீர்வாக > http://www.vistax64.com/attachments/tutorials/2647d1202275649systemrestorepointsstopxpdualbootdeletestop_xp.reg?ltr=Sஎன்ற > முகவரியில் உள்ள இணைய தளத்தில், மைக்ரோசாப்ட் தீர்வினைத் தருகிறது. இங்கு > கிடைக்கும் பைலை டவுண்லோட் செய்து கொள்க. இந்த பைலின் மீது ரைட் கிளிக் செய்து, > கிடைக்கும் மெனுவில் Mஞுணூஞ்ஞு என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், > இன்ஸ்டலேஷனை ஏற்படுத்த ஓகே கொடுக்கவும். இப்போது பைலில் உள்ளவை விண்டோஸ் > ரெஜிஸ்ட்ரியுடன் வெற்றிகரமாக இணைக்கப்படும். இதன் மூலம், மீண்டும் விண்டோஸ் > எக்ஸ்பி சிஸ்டத்தில் கம்ப்யூட்டர் இயக்கப்படுகையில், ரெஸ்டோர் பாய்ண்ட்டுகள் > நீக்கப்பட மாட்டாது. > விண்டோஸ் கொண்டிருக்கும் சிஸ்டம் ரெஸ்டோர் வசதி மிகவும் பயன் தரத்தக்க ஒரு > வசதியாகும். கம்ப்யூட்டரை, அது நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு நிலைக்குக் > கொண்டு செல்வது மட்டுமின்றி, நம் பயனுள்ள நேரத்தையும் நமக்கு மிச்சப்படுத்தித் > தருகிறது. மேலே சொல்லப்பட்ட டிப்ஸ், இந்த வசதியைப் பயன்படுத்துவதில் கூடுதல் > நேரத்தை நமக்கு மிச்சப்படுத்துகிறது. > > இப்பதிவிற்கு ஒரு மறுமொழி > இட<http://senthilvayal.wordpress.com/2011/06/24/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d-7-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b0%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b/#respond> > > நன்றி > http://senthilvayal.wordpress.com > > > -- > Brotherly Athman > Nakinam Sivam > > http://nakinam.blogspot.com > > -- > தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார் > நலமே விளையும். > To post to this group, send email to [email protected] > For more options, visit this group at > http://groups.google.com/group/theyva-thamizh?hl=ta >
