2011/7/21 RRavi Ravi <[email protected]>
> நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கவிஞர் இரா .இரவி > > தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ > தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ > > பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ > பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ > > நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவன் நீ > நல்ல வாசன் உச்சரிப்பைப் புகுத்தியவன் நீ > > நாடகத்தில் நடித்துப் பயின்றுத் திரைப்படம் வந்தவன் நீ > திரைப்படத்தில் நடித்து வாழ்க்கையில் நடிக்காதவன் நீ > > கூட்டுக்குடும்பப் பெருமையைக் கட்டிக் காத்தவன் நீ > குடும்பத்தின் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தியவன் நீ > > அன்பில் பலரை வென்று அரசியலில் தோற்றவன் நீ > நடிப்பில் நிலையாக நின்றுதிரை உலகில் வென்றவன் நீ > > ஒன்பதுப் பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டியவன் நீ > ஒன்பது மணி என்றால் எட்டு முப்பதுக்கே இருந்தவன் நீ > > தாமதத்தை என்றும் வெறுத்துத் தவிர்த்தவன் நீ > சமாதானத்தை என்றும் எப்பொதும் விரும்பியவன் நீ > > போலிப் பிம்பங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் நீ > பாத்திரங்கள் எதுவென்றாலும் ஏற்று நடித்தவன் நீ > > முகபாவத்தில் நாதஸ்வர வித்துவான்களையே வென்றவன் நீ > முகம் முதல் நகம் வரை நடிப்பைக் காட்டியவன் நீ > > வீரபாண்டிய கட்டபொம்மனை அறிமுகம் செய்தவன் நீ > கப்பல் ஒட்டியத் தமிழனைக் கண் முன் நிறுத்தியவன் நீ > > பகுத்தறிவுப் பகலவனிடம் சிவாஜிப் பட்டம் பெற்றவன் நீ > படிக்காதப் பாமரர்களுக்கும் தமிழ்க் கற்பித்த ஆசான் நீ > > உணர்ந்தோம் கள்ள வாக்கு அளிபோரின் திறனை > உனது வாக்கையே வாக்களித்துச் சென்றனர் அன்று > > இந்திய தேசத்தில் உன்னைப் போல நடிகர் இல்லை > இந்தியாவோ உனக்கு தேசியவிருதை தரவே இல்லை > > செவாலியர் விருதுத் தந்து அயல் நாடுப் பாராட்டியது உன்னை > செந்தமிழனின் திறமையை உலகிற்கு பறை சாற்றியவன் நீ > > -- > http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D > > http://tamilvaasi.blogspot.com/2011/01/blog-post_09.html > -- > > நன்றி > அன்புடன் > கவிஞர் இரா .இரவி > > www.eraeravi.com > www.kavimalar.com > www.eraeravi.wordpress.com > www.eraeravi.blogspot.com > http://eluthu.com/user/index.php?user=eraeravi > > இறந்த பின்னும் > இயற்கையை ரசிக்க > > கண் தானம் செய்வோம் !!!!! > > -- > தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற எல்லாம் வல்ல இறைவன் துணை இருப்பார் > நலமே விளையும். > To post to this group, send email to [email protected] > For more options, visit this group at > http://groups.google.com/group/theyva-thamizh?hl=ta >
