**

   *சிந்திக்க.

ஆச்சாரம் ! என்ற சொல்லைக்கேட்டாலே முகம் சுளிக்கின்றனர் இன்றய இளைஞர்கள், ஏதோ
கடினமான செயல் என்றும் தங்களால் கடைபிடிக்கமுடியாத விஷயம் என்றும்
கருதுகின்றனர். ஏனென்றால் நம்பெரியோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அதனைப்பற்றி
தெளிவாக சொல்லாததே காரணம்.

ஆச்சாரம் என்பது விஞ்ஞான அடிப்படையில் எழுந்த சுகாதரமேயன்றி, வேறு இல்லை.
அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும், அப்போதுதான் நம்மைச்சுற்றி சுத்தமான
ஆரோக்யமான காற்றுமண்டலம் இருக்கும். அந்த வேளையில் காற்றை சுவாசித்தால்
உட-லிலிருந்து அசுத்த காற்றுவெளியேறி சுத்தமான காற்று உள்ளேச்சென்று உடல்
ஆரோக்யமாக இருக்கும்.

பிறகு பல்துலக்கிவிட்டு நன்றாக வாய் கொப்பளித்-தப்பிறகேதான், காபி போன்ற
பானங்களை குடிக்கவேண்டும். இல்லையென்றால் முதல்நாள் இரவு சாப்பிட்ட உணவு
துணுக்குகள் பல் இடுக்களில் தங்கி, வியாதி கிருமிகளாக மாறி நம் வயிற்றுக்குள்
சென்று பல வியாதிகளை உண்டு பண்ணும். பிறகு குளியலறைக்குச்சென்று நம் உடைகளைத்
தண்ணீரில் நனைத்துவிட்டு, நன்றாக உடலைத்தேய்த்து தலைக்கு குளிக்கவேண்டும்.
ஏனென்றால் நாம் வெளியில் சென்றுவிட்டு பலதரபட்ட மக்களுடன் பழகிவிட்டு
வருகிறோம். அவர்களிடமிருந்து வியாதிகிருமிகள் நம் தலை மயிரிலும் உடைகளிலும்
படிந்து இருக்கும். பிறகு துவைத்து வெயிலில் காயவைத்த ஆடைகளை அணியவேண்டும்.

அந்தநாளில் பெண்கள் வெளியில் செல்லமாட்டார்கள். ஆகவே அவர்கள், செவ்வாய், வெள்ளி
மற்றும் விரத நாட்களில்மட்டும் தலைக்குக் குளித்தனர். பெண்கள் குளித்தபிறகே
சமையல்கட்டிற்குவந்த சமையல் வேலைகளைத் துவங்கவேண்டும். குளிக்காமல் பழைய
உடையுடன் சமைத்தால், உடையில் படிந்திருக்கும் நோய் கிருமிகள் சமைக்கும்
பண்டங்களின்மீது படியும். சமையலறையை அடிக்கடி பெருக்கி, துடைத்து
வைத்துக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் பூச்சிகள், கிருமிகள்
உணவுப்பொருள்களில்விழ வாய்ப்புண்டு. சமைத்த பண்டங்களை எப்போதும் கண்டிப்பாக
மூடியே வைத்திருக்கவேண்டும், பறிமாரும் நேரம்தவிற. குறிப்பாக சாதத்தை மூடியே
வைத்திருக்க-வேண்டும். ஏனெனில் அதில்தான் கிருமிகள் அதிகம் படியும்.
அந்தக்காரணத்திற்காகத்தான் சாதத்தை தொட்ட கையால் மோரைத்தொடக்கூடாது என்பர்.
இல்லையெனில் மோர் கெட்டுவிடும்.

சமைத்த பண்டங்களையும் அதே காரணத்திற்காகத்தான் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்க
கூடாது என்பர் சாப்பிட உட்காருமுன் கைகால்களை நன்றாக கழுவிக்கொண்டு
உட்காரவேண்டும். ஏனென்றால் நம் கைகளில் நமக்குத்தெரியாமல் கிருமிகள்
படிந்திருக்கும். அவைநாம் உண்ணும் உணவுடன் வயிற்றுக்குள் செல்ல நேரிடலாம்.

வெளியிருந்தோ, அலுவலகத்திலிருந்தோ திரும்பி வந்ததும் நேராக
குளியலறைக்குச்சென்று கை, கால்களை நன்றாகக்கழுவிக்கொண்டு, நாம்அணிந்திருந்த
ஆடைகளைத்தண்ணீரில் நனைத்துவிட்டு வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்,
சலூனுக்குச் சென்று முடி-வெட்டிக்கொண்டுவந்தால் அங்கு பலதரபட்ட மக்கள்
வந்திருப்பாரகள் அவர்களிடமிருந்து வியாதிகிருமிகள் நம் தலை மயிரிலும்
உடைகளிலும் படிந்து இருக்கும் ஆகவே நேராக குளியலறைக்குச்சென்று
நாம்அணிந்திருந்த ஆடைகளைத்-தண்ணீரில் நனைத்துவிட்டு தலைக்குக்குளித்துவிட்டு
வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அதுபோலவே இறந்தவர்கள் வீட்டிற்குச்
சென்றால், அங்கு இறந்தவரின் உடலிலிருந்து வியாதிகிருமிகள் அந்த வீடுமுழுவதும்
காற்றில் பரவியிருக்கும் மேலும் அங்கும் பலதரபட்ட மக்கள் வந்திருப்பாரகள்
அவர்களிடமிருந்தும் வியாதிகிருமிகள் நம் தலை மயிரிலும் உடைகளிலும் படிந்து
இருக்கும் ஆகவே நேராக குளியலறைக்குச்சென்று நாம்அணிந்திருந்த ஆடைகளைத்தண்ணீரில்
நனைத்துவிட்டு தலைக்குக்குளித்துவிட்டு வேறு ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

வடக்குப்புறம் தலைவைத்துப் படுக்ககூடாது. காரணம் வடக்குப்பக்கம் பூமியின்
ஆகர்ஷணசக்தி அதிகம். அதனால் நம் மூளைபாதிக்கப்படலாம். நகங்களைக்கடிக்கக்கூடாது,
காரணம் நகஇடுக்குகளில் சேரந்திருக்கும் அழுக்களும், நகத்துணுக்குகளும் நம்
வயிற்றுக்குள் சென்று வியாதிகளை உண்டுபண்ணும். அந்தநாளில் வீட்டிற்கு
ஒருபெரியவர் வந்து, அவருக்கு நாம் குடிக்க ஏதாவது தந்தால், முதலில் தங்கள்
கைகளில் ஜலம்விடச்சொல்லித் தங்கள் கைகளை கழுவிக்கொண்டபிறகே டம்பளரை வாங்குவர்,
காரணம் அவர்கள் கைகளில் படிந்திருக்கும் நோய்கிருமிகள் டம்பளரில்
படியவேண்டாமென்ற நல்லெண்ணமே.

ஆனால் இன்றைய இளையசமுதாயமோ எதையும் எச்சில் படுத்திதான் குடிக்கின்றனர். அதனால்
அவர்கள் உதட்டிலிருந்து நோய்கிருமிகள் டம்பளிரில் படிந்து அதே டம்பளரை வேறு
ஒருவர் பயன்-படுத்தும்போது அதுஅவர்களுக்கும் பரவும் என்று தெரியாத காரணமா இல்லை
நாகரீகமா தெரியவில்லை. மொத்தத்தில் தாம்பெற்றபேறு பெருக இவ்வையகம் என்ற
பரந்தநோக்குடன் எல்லோருக்கும் நோய்கிருமிகளை வாரிவழங்குகின்றனர். இப்போது
புரிந்ததா ? ஆச்சாரம் என்றால் விஞ்ஞானரீதியான சுகாதாரம்தானென்று.

உங்கள் குழந்தைகளையும் இந்தக்கட்டுரையைப் படிக்கச்சொல்லுங்கள். அவர்களுக்குத்
தமிழ் தெரியாதென்றால் நீங்கள் படித்துச்சொல்லுங்கள். சிந்திப்பீர்களா ?.*
**
__._,_.___
  .
**
__,_._,___
**
****








*"NEVER THINK HARD ABOUT PAST, It bringsTears,
*

*Don't think more about future, it brings Fears,
*

*Live this moment with a smile, it bring Cheers. *

****
****

  *V a n a k k a m   S u b b u*

* *
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
**வாழிய பாரதமணித் திருநாடு!*

Reply via email to