Pancha Bootha Sthalams at Chennai:

There are Pancha boodha sthalam equivalents in Chennai at the heart of the
city which are considered very powerful and they are:

1) Kalahasthi temple at Pavalakara (Coral Merchant) street, near
Mallikeswarar temple, Mannady representing Air.

2) Arunachaleswara temple near Lakshmi Amman Koil stop in Thiruvotriyur bus
route representing Fire. There is one more Arunachaleswarar temple at the
end of Palliappan street (George town).

3) Gangadareswarar Temple, Purasawalkam representing Water.

4) Chidambaranatha (Nataraja) temple near Choolai Post office representing
Sky and

5) Ekambareswara Koil at Mint representing Earth.



"ஆலயம் தொழுவது சாலவும் நன்று".
 "ஆலயம் தொழுவது சாலவும் நன்று". பசுவின் உடம்பு முழுவதும் பால்
நிறைந்திருக்கின்றது ஆனாலும் பசுவின் மடியிலிருந்து பாலைப் பெறுகிறோம்,
கம்பிகளில் மறைந்து நிற்கும் மின்சார ஆற்றல் மின்விளக்கின் மூலம்
வெளிப்படுகிறது போல எங்கும் மறைந்து நிறைந்திருக்கின்ற இறைவன் திருவருளைத்
திருக்கோயிலின் திருவுருவங்கள் மூலம் பெறுவது எளிது.ஆலயங்கள் சென்று
வழிபடுவோர் உள்ளத்தை ஆலயமாகக் கொண்டு இறைவன் எழுந்தருள்கின்றான்."கோபுர
தரிசணம் கோடி புண்ணியம்". கோபுரத்தை ஸ்தூல லிங்கமாகவும், இறைவனின்
பாதங்களாகவும் பாவித்து வணங்கிக் கோயிலுக்குகள் புக வேண்டும்.கோயில்கள் நமது
உடம்பின் வடிலேயே அமைக்ப்பட்டிருக்கின்றன. இதனை திருமூலர்"உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம் பாலயம்வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்தெள்ளத் தெளிந்தார்க்கு
ஜீவன் சிவலிங்கம்கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே" என்று கூறுகிறார்."தேஹா
தேவாலய: ப்ரோக்தோஜீவோ தேவ: ஸநாதன:த்யஜேத் அஞ்ஞான நிர்மால்யம்ஸோஹம் பாவேன்
பூஜயேத்"என்ற வேத வாக்காலும் இதனை அறியலாம். சிவா திருச்சிற்றம்பலம்.

ஆலயப் ப்ரகாரங்கள்:-

மூன்று ப்ராகாரங்கள் அன்னமயம், பிராணமயம், மனோமயம் என்ற மூன்று கோசங்களையும்
உணர்த்துகின்றன.ஐந்து ப்ராகாரங்கள் இவற்றோடு விஞ்ஞான மயம்,ஆனந்த மயம் எனும்
கோசங்களையும் குறிக்கின்றன.ஏழு ப்ராகாரங்கள் ஸ்தூல சூக்ஷ்மங்களை விளக்குகின்றன.

மனித உடலும் ஆலயமும்:-
ஒரு மனித உடலமைப்பை ஆதாரமாகக் கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வழிபாட்டுக்குரிய
அமைப்பாக மதிக்கப்படுகிறது. ஆலயத்தை "ஆ"+"லயம்" என பிரிக்க வேண்டும். "ஆ"
என்றால் உயிர் என்றும், "லயம்" என்றால் லயிக்கின்ற என்றும் பொருள்.உயிர்கள்
லயிக்கின்ற இடம் ஆலயம் எனப்படும். மனிதனின் இரண்டு பாதங்கள் கோயில் வாசல்
கோபுரங்கள். கொடி மரத்தில் 32 வளையங்கள் இருக்கும். இது மனித உடலின் முதுகுத்
தண்டில் உள்ள 32 எலும்பு வளையங்களைக் குறிக்கும். மனிதனின் நாபி ஸ்தானத்தைக்
குறிக்க நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. தீய குணங்களை இதயத்திலிருந்து
நீக்கி பலியிடுவதைக் காட்டும் வகையில் பலி பீடம் அமைக்கப்பட்டுள்ளது. புருவ
மத்தியை கர்ப்ப கிரகம் என்கிறார்கள்.
சிவா திருச்சிற்றம்பலம்

மனித உடலில் ஆறு ஆதாரங்கள்:-
மூலாதாரம் - ஓம் ஸ்ரீ விநாயகர்
சுவாதிஷ்டானம் - ஓம் ஸ்ரீ பெருமாள்
மணிபூரகம் - ஓம் ஸ்ரீ முருகன்
அனாகதம் - ஓம் ஸ்ரீ சிவபெருமான்
விசுத்தி - ஓம் ஸ்ரீ சூரியன்
ஆக்ஞை - ஓம் ஸ்ரீ அம்பிகை
சிவா திருச்சிற்றம்பலம்.



ஆலயம் சென்று வணங்குவோம்
அன்புடன் என்றும் இணங்குவோம்

ஆங்கிலப் புத்தாண்டு அமைதியையும் ,
ஏற்றத்தையும் கொண்டு தரட்டும்

****
****

     *வ ண க் க ம்  சு ப் பு** *

****

  <http://groups.yahoo.com/group/sometimeonthenet/join>

* *
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
**வாழிய பாரதமணித் திருநாடு!*

Reply via email to