*வணக்கம்.*

*எதிர் வரும் விஜய ஆண்டு சித்திரைத் திங்கள் 29 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை
அன்று (12.05.2013) ஆத்தங்குடி பூமர**த்**துச் சாலி ஆச்சி பேரனும், தெய்வத்திரு
சண்முகம் செட்டியார் - காந்தி ஆச்சி தம்பதிகளின்  மகனுமான; வணக்கம்
சுப்ரமணியம் (அடியேன்) அலமேலு தம்பதிகளின் மகள்; நிறை நாள் செல்வி  சுப
பெரியாள் D.C.E Honours, B.E. Civil,  M.Tech ( Off shore structures NIT,
Calicut)   க்கும் தேவ கோட்டை முத்து கானா ருணா வகையைச் சார்ந்த எழுவங்
கோட்டையார் வீடு  உயர்திரு முத்துகருப்பன் செட்டியார் சொர்ணவள்ளி
ஆச்சி அவர்களின் மகன் நிறை நாள் செல்வன் அருண் பழனியப்பன் B.E., M.Tech
(Mechanical - IIT Delhi (Gold medalist) [Mercedes benz, Germany) க்கும்
மணமகள் இல்லத்தில் நடை பெறும்  திருமணத்திற்குத்  தாங்கள் சுற்றமும்  நட்பும்
 சூழ முன்னதாகவே வந்திருந்து மணமக்களை வாழ்த்திச் சிறப்பிக்க பணிவன்புடன்
வேண்டுகின்றேன்.*

*ஆத்தங்குடி ஒரு அழகிய சிற்றூர்.  சிவன் கோவில் அழகும் அதன் முன்பு
அமைந்துள்ள ஊரணியின் அழகும் காணக் கண் கோடி வேண்டும்.  இவ்வூர் ஒரு சுற்றுலா**
த்** த**ல**மாகும்.  கலை நுட்பத்துடன் கூடிய வீடுகள் பார்க்க வேண்டிய
ஒன்றாகும்.  எங்கள் வீட்டில் திருஞான சம்பந்தர் வாழ்க்கை வரலாறு 16 ஓவியங்களாக
மூலிகை கொண்டு வரையப் பெற்றிருக்கும்.

அருள்தரு குன்றக்குடி. பிள்ளையார்பட்டி, வைரவன் பட்டி, திருப்பத்தூர்,* *
திருக்கோஷ்டியூர், பட்ட மங்க**ல**ம், காளையார் கோவில், நாட்டரசன் கோட்டை,
நேமம்., அரியக்குடி, திருமயம்  போன்ற ஒப்பற்ற ஆலயங்கள்
சூழப்பெற்றிருக்கும் ஆத்தங்குடிக்கு வந்து இறை அருளும் பெற்று மகிழ ஒரு
அரிய சந்தர்ப்பம்.

வருக! மகிழ்க!* *

வணக்கம்   சுப்பு* *

* *  கூடுதல் தகவல்

ஆத்தங்குடி செட்டி நாட்டு இல்லத்திற்குத் தமிழ் மரபு அறக்கட்டளை* *
குழுவினர் சென்றிருந்த போது பதிவு செய்யப்பட்ட விழியப்பதிவு ஒன்றினை
இன்று வெளியிடுகின்றோம்.

பதிவைக் காண நமது விழியப் பதிவு வலைப்பூ செல்க:* *
http://video-thf.blogspot.de/2012/12/blog-post_4.html* *

யூடியூபில் இணைக்கப்பட்ட பதிவை இங்கே காணலாம்.* *
http://www.youtube.com/watch?v=R9Hbu31_wLA&feature=youtu.be* *

இந்த இல்லத்தைப் பற்றிய தகவல்களை டாக்டர் ராஜம் வழங்கிய பதிவில் இங்கே காணலாம்.
* *


அன்புடன்* *
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]*



-- 


* *

****
****


<http://www.tagged.com/profile.html?uid=5461977926>     *V a n a k k a m  S
u b b u *  <http://www.tagged.com/profile.html?uid=5461977926>

****

  <http://groups.yahoo.com/group/sometimeonthenet/join>

**
*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
**வாழிய பாரதமணித் திருநாடு!
*<http://www.incredimail.com/?id=620786&did=10501&ppd=2743,201201221300,9,[TypeID],[IM_UPN2]&rui=115371018>

**

Reply via email to