மஹா பெரியவா

ஜோஸ்யர் ஒருத்தர் பெரியவாளை தரிசிக்க வந்தார். "
பெரியகுடும்பம்.......வருமானம் போறலை, ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படி
ரொம்பகொறைச்சல்..ரொம்ப கஷ்டம்.." என்று முறையிட்டார்."நீ.......... ஒங்க
அப்பா  இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?""இல்லே....
அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல இருக்கேன்""நீ
அங்க இருக்க வேணாம். பூர்விக க்ருஹத்துலேயே கிழக்கு பக்கத்துல பழையமாட்டு
கொட்டாய் இருக்கோன்னோ? அந்த எடத்ல ஒரு குடிசை போட்டுண்டு இரு.

பரம்பரையா அம்பாளை பூஜை பண்ணின குடும்பம். மாட்டுக் கொட்டகைல
இருங்கோ""..........அதோட, இன்னொண்ணும் கேளு. எல்லா
க்ரஹங்களையும்நன்னா........திட்டறயோன்னோ ! ....உங்க ஜாதகத்ல குரு நீசன்,
சனி பாபி,புதன் வக்கிரம்!...இப்பிடியெல்லாம் வாயால சொல்லக் கூடாது.
குரு...ங்கறதுபெரிய கிரகம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம்....அவரைப் போய்
நீசன், பாபி,வக்கிரம்..ன்னெல்லாம் திட்டக் கூடாது. சனி, சூர்யனோட
புத்திரன். ஈஸ்வரபட்டம் வாங்கிண்டவர். அவரைப் போய்
பாபி...ங்கறே!.....கிரகங்கள் சரியானஎடத்ல இல்லை.....கால பலன்
சரியில்லைன்னு சொன்னா போறுமே!.......பொண்பிள்ளை ஜாதக பொருத்தம் பாக்க
வரவா கிட்டே "பொருத்தமில்லை" ன்னுநிர்தாட்சண்யமா சொல்ல வேணாமே!
பொண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும்,பையனுக்கு புத்திர பாக்கியம்
கேள்விக் குறி ...ங்கற மாதிரி சொல்லலாம்.முப்பது வயசாகியும் நெறைய
பொண்கள் கல்யாணம் ஆகாம இருக்கா.அப்பிடிப்பட்டவாளுக்கு வரன், ஜாதக
பொருத்தம் பாக்க வந்தா, முடிஞ்சவரைநிராகரிக்காம பதில் சொல்லணும்.கல்யாண
விஷயத்ல, பொண்,பையன் ஜாதகப் பொருத்தத்துக்கு ஜாஸ்தி importanceகுடுக்காம,
குலம்,கோத்ரம், மனப் பொருத்தம் இருந்தா போறும். பழங்காலத்லஜாதகப்
பொருத்தம் அவ்வளவு முக்யமா இருந்ததில்லை".ஜோஸ்யர் திருப்தியோடு "இனிமே
பெரியவா சொன்னபடி பண்ணறேன்" என்று சொல்லிபிரசாதம் வாங்கிக் கொண்டு
போனார்.

ஒரு நடுவயது பையனை அழைத்துக் கொண்டு ஒரு தாயார் வந்தாள், மனஸின்
துக்கம்மறைக்க முடியவில்லை. ஆம். பையனுக்கு பைத்தியம்! மருந்து மந்திரம்
எல்லாம்பண்ணியாச்சு. ஒன்றும் பிரயோஜனமில்லை. ஆட்டம், பாட்டம், கூச்சல்
இல்லாமல்இருந்தாலே போறும் என்றாகிவிட்டது தாயாருக்கு! அவன் வாயில்
எப்போதும்எச்சல் வழிந்து கொண்டே இருந்தது.பெரியவா அந்த பையனையே
பார்த்துக் கொண்டிருந்தார். "நாக்குல எச்சல் வந்தா... வாணி....[சரஸ்வதி]
ன்னு சொல்லுவா, கவலைப் படாதே ! நீ...பிராம்மிக்ருதம்ன்னு ஒரு
மருந்து.......கேள்விப் பட்டிருக்கியோ? கேரளாலகெடைக்கும். வல்லாரை நெய்
ஒரு பாட்டில் வாங்கு. அதை வெச்சுண்டு, லக்ஷம்ஆவ்ருத்தி பஞ்சாக்ஷர ஜபம்
பண்ணிட்டு, இந்த பையனுக்குகுடு........அப்புறம்,  வேப்பங்கொட்டை
தெரியுமோன்னோ? ரெண்டு மூணுகொட்டையை நன்னா...வெழுமூணா நசுக்கி தேன்ல
கொழைச்சு தெனமும் இவன் நாக்குலதடவிண்டு வா......"  சாக்ஷாத் அம்மாவே
குழந்தைக்கு மருந்து உரைத்தாள்.ரெண்டு மாசம் கழித்து, தாயாரும் பையனும்
வந்தார்கள். பையனிடம் சேஷ்டைஇல்லை. மக்கு மாதிரி, மலங்க மலங்க பார்த்துக்
கொண்டிருந்தானே தவிர, வேறுதொந்தரவு எதுவும் இல்லை."பெரியவா அனுக்ரஹத்ல
பையன் கொஞ்சம் கொஞ்சம் படிக்க ஆரம்பிச்சிருக்கான்"என்றாள் தாயார்
நிம்மதியான பெருமூச்சுடன்.
கையை தூக்கி ஆசிர்வதித்தார்.

மெட்ராஸ் சம்ஸ்க்ருத கல்லூரியில் முகாம். பெரியவாளுக்கு நெஞ்சு வலி.
ரொம்ப தவித்தார். ஆயுர்வேத மருந்து சாப்பிட்டும், வலி குறையவில்லை.
மானேஜருக்கு ரொம்ப கவலையாகிவிட்டது. ரொம்ப தயங்கி தயங்கி பெரியவாளிடம்
சொன்னார் " ஆழ்வார்பேட்டைல டாக்டர் வைத்யநாதனுக்கு சொல்லி அனுப்பறேன்.
பெரியவா உத்தரவு குடுத்தா.......... நேக்கு என்னமோ அவர் வந்து பாத்தா
தேவலைன்னு படறது........" அதிசயம்! உத்தரவாயிற்று!

டாக்டர் வைத்யனாதையர் வந்து பட்டுத் துணி போட்டு, நாடித்துடிப்பு
பார்த்தார். சரியா இருந்தது. ரத்த அழுத்தம் பார்த்தார். ஏகமா ஏறி
இருந்தது. " B P எக்கச்சக்கமா எகிறியிருக்கு. ஒடனே மருந்து சாப்பிடணும்
பெரியவா"

"ஆட்டும்...ஆட்டும். ஒரு அரைமணி கழிச்சு வந்து மறுபடி டெஸ்ட் பண்ணு"

அரைமணி கழித்து டெஸ்ட் பண்ணினால், ஒரேயடியா கீழே போயிருந்தது. நமுட்டாக
சிரித்துக் கொண்டே......." அப்போ டெஸ்ட் பண்ணிட்டு B P ஜாஸ்தின்னு
சொன்னே, இப்போ என்னடான்னா.....ரொம்ப கம்மி..ங்கறே. B P ஜாஸ்தியானா
என்னாகும்? கம்மியானா என்னாகும்?"

"B P ஜாஸ்தியானா ஹெமரேஜ் ஆகி உசிருக்கே ஆபத்து! கொறைஞ்சு போனா, மயக்கம்
போட்டு கீழே விழுந்துடுவா. அதுவும் ஆபத்து."

பெரியவாளான குழந்தை கேட்டது " ஆனா, நேக்கு அப்பிடி ஒண்ணும் ஆகலியே?
ஹெமரேஜும் வரல்லே.....மயக்கமும் வரலியே?"

டாக்டர், மண்டையை குடைந்தார் " அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு! ரத்த
அழுத்தம் மேல போறதும், கீழ இறங்கறதும் சாதாரணமா நடக்க கூடிய காரியமில்லை.
பெரியவா சரீரம், பெரியவாளோட ஆக்ஞைக்கு   கட்டுப்பட்டு நடக்கறதுன்னு
தோணறது......."

சாக்ஷாத் வைத்யநாதனுக்கு வைத்தியம் பார்த்தால்.............இப்படித்தான்!

உபாயம்  சாய்


















*
*
*
*
**
*
*  <http://sig.graphicsfactory.com/>*

நல்லதுசெய் நல்லதே நடக்கும்
*जन सेवा ईश्वर  सेवा *
*cnu.pne*


-- 

*
*
*
*
**
*
*  <http://sig.graphicsfactory.com/>*

நல்லதுசெய் நல்லதே நடக்கும்
*जन सेवा ईश्वर  सेवा *
*cnu.pne*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply via email to